Posts

Showing posts from December, 2022
காசியை மிஞ்சும் ஒரு கோவில் தமிழகத்தில் எங்குள்ளது தெரியுமா ? இந்துக்கள் பலரும் வாழ்வில் ஒருமுறையாவது காசிக்கு செல்லவேண்டும் என்று நினைப்பதுண்டு. கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அதே போல காசிக்கு நிகரான, ஏன் காசியை விட ஒரு படி அதிகம் சக்தி கொண்ட ஒரு கோவில் தமிழகத்திலும் உள்ளது. அந்த கோவில் எங்கு உள்ளது, அதன் சிறப்புகள் என்ன என்று பார்ப்போம் வாருங்கள். புதுச்சேரி அருகில் திருகாஞ்சி என்னும் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம். காசியில் உள்ள கோவில் எப்படி கங்கை கரையோரம் அமைந்துள்ளதோ அதே போல ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம், சங்கராபரணி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ளது. சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு நிகராக போற்றப்படுகிறது. இந்த நதிக்கு கிளிஞ்சியாறு, செஞ்சியாறு, வராக நதி என்று பல பெயர்கள் உண்டு. இந்த கோவில் சங்கராபரணி நதிகரியல் இருந்தாலும் இங்குள்ள இறைவன் கங்கைவராக நதீஸ்வரர் என்று அழைக்கப்படுவதில் இருந்தே நாம் சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு ஒப்பானது என்று அறிந்துகொள்ளலாம் . www.agathiyarjanachithar.