Posts

Showing posts with the label joke

ஹிந்தியும் நானும்

ஹிந்தியும் நானும். ஹிந்தி தெரிஞ்சா தான் சென்ட்ரல் கவர்மென்ட் வேலை கிடைக்கும் என யாரோ ஒரு நல்ல உள்ளம் அட்வைஸ் கொடுக்க, கழுதை மேய்ச்சாலும் கவர்மென்ட் கழுதையை மேய்க்கணும் என்ற அந்தக்கால கோட்பாடுகளின் படி ஹிந்தி படிப்பது என்ற தீர்மானம் எங்கள் வீட்டில் நிறைவேற்றப்பட்டது. காலனிக்குள்ளேயே ஒரு டீச்சர் கிடைக்க ஒரு சுபமுகூர்த்த நாளில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நானும் மூன்றாம் வகுப்பு படித்த என் தங்கையும் ஒரே  டியூஷன் கிளாஸ் போக ஆரம்பித்தோம். என் வயது காரணமாக நான் நேரடியாக மத்யமா படிக்கலாம் என்றும் என் தங்கை பிராத்மிக் எழுத வேண்டும் என்றும் டீச்சர் சொல்ல படிக்க ஆரம்பித்தோம்.இதை சாக்காக வைத்து  ஹிந்திப் படம் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சோம். அப்போ டிடி மட்டும் தான். பாதி நேரம் எப்படியுமே ஆத்தா ஹை ஜாத்தா ஹைன்னு தான் ஓடும். குறித்துக் கொடுத்த கேள்வியை அப்படியே நெட்டுரு போட்டு மத்யமா பாஸ். அடுத்து ஒரு oral test என்ற போது தான் ஹிந்திக்கு என்னால் ஏழரை சனி ஆரம்பம் ஆனது. ஹிந்தி தெரிந்தவர்களுக்குத் தெரியும். ஒரே கேள்விக்கு ஆண் ஒருவாறாகவும் பெண் வேறு மாதிரியும் பதிலளிக்க வேண்டும். நான் செய