Thought for the Day - Customs and Traditions

*மெகா காமெடி*
🤭😊🤭😊🤭😊🤭
தளபதியாகப் பதவி உயர்வு பெற்ற ஒருவர் தனக்கான முகாமில் பதவி ஏற்றுக் கொண்டார்.

அவர் அந்த முகாமை ஆய்வு செய்தபோது , இரண்டு காவலாளிகள்  ஒரு பெஞ்சைக் காவல் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். 

அவர் அந்தக் காவலர்களிடம் எதற்காக இதைக் காவல் காக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் ...

எங்களுக்கு எதுவும் தெரியாது சார் ...
ஆனால் இது இங்கு நீண்ட கால வழக்கம் என்பது மட்டும் எங்களுக்குத் தெரியும் . நீங்கள் இது விஷயமாக
முன்னாள் தளபதியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் . அவர் தான் இவ்வாறு செய்யச் சொன்னார் . ஆகவே நாங்களும் செய்கிறோம் ... என்றார்கள்.

அவர் உடனே அந்த முன்னாள் தளபதியின் தொலைபேசி எண்ணைத் தேடி அழைத்துப் பேசினார். மேலும் இந்தக் குறிப்பிட்ட பெஞ்சை ஏன்  காவலர்களை கொண்டு காவல் காத்தார் என்று அவரிடமே கேட்டார்.

அவரும் கூட தனக்கு எதுவும் தெரியாது என்றும் இது வழக்கம் என்றும் சொன்னார் .

முந்தைய தளபதியிடம் இரண்டு காவலர்கள் இருந்தனர். அவர்கள் இந்த‌ப் .பெஞ்சை  மிகவும் சிரத்தையாகப் பாதுகாத்தனர். ஆகவே அந்தப் பாரம்பரியத்தை  நானும் தொடர்ந்து செய்து வந்தேன்  என்று கூறினார்.

புதிய தளபதிக்கு இவ்வாறான பயனற்ற வழக்கத்திற்குக் காரணம் தெரியாமல் போனால் ஆர்வத்தில் மண்டை வெடித்து விடும் போலிருந்தது .

ஆகவே மேலும் மூன்று முன்னாள்  தளபதிகளைச் சந்தித்து பேசினார்.

அவர்களுக்கும் ஒன்றும் தெரியாமல் போகவே அவர்கள் சொன்ன விவரங்களை வைத்து ஓய்வு பெற்ற  நூறு வயதான முன்னாள்  தளபதியைக் கண்டு பிடித்தார்.

அவர் தான் இந்தப் பழக்கத்தைத் தோற்றுவித்தார்
என்று பலரும் கூறியதன் பேரில் அவரிடம் சென்று பேசினார் .

ஐயா ... நான் தாங்கள் பணியாற்றிய முகாமின்
இப்போதைய தளபதி.

ஒரு சாதாரண பெஞ்சைக் காவல் காக்க இரண்டு  காவலர்கள் பணியாற்றும் வழக்கத்தைத் தாங்கள் தான் ஏற்படுத்தியதாக அறிந்து கொண்டேன் . தாங்கள் தான் இந்த வழக்கத்தைத் தொடக்கி வைத்திருக்கின்றீர்கள் என அறிந்தேன். அவர்களை ஏன் அவ்வாறு செய்ய  வைத்தீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா ...?"
என்று சற்று தயக்கத்துடன் கேட்டார்.

*என்னது ...?    இன்னுமா அந்த பெயின்ட் காயல்லே நான்சென்ஸ் என்று சத்தம் போட்டார் ...? அந்த மாஜி தளபதி*
😊😇🤗🤭

Source: Whatsapp Forward

Comments

Post a Comment

Popular posts from this blog