Thought For the Day - Giving Power

ஒரு மந்திர ஜெபம் அது நல்லதோ கெட்டதோ அது சித்தியாகி பலன் தர வேண்டும் என்றால் அதற்கு குறைந்த பட்சம் லட்சம் உரு ஏற்ற வேண்டும்

தமிழக மக்கள் தொகை 7 கோடிக்கு மேல்
இந்திய மக்கள் தொகை 130 கோடிக்கு மேல்

ஒரே நேரத்தில் நமது நாட்டில் எத்தனை கோடி பேர் அந்த கெட்ட வைரசின் பெயரை அடிக்கடி உச்சரிக்கிறோம் அதற்கு வித விதமாக பல கோடி உரு கொடுத்து அதை ஆராதிக்கிறோம்!

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பெயர் வைத்து அழைக்கிறோம் யாராவது ஒரு புது நபர் நீங்கள் வசிக்கும் தெருவில் வந்து உங்கள் பெயரை சொல்லி அழைத்தால் உடனே நீங்கள் ஓடி வந்து யார் உங்களை அழைத்தார்கள் என்று பார்ப்பீர்கள் அவரிடம் சென்று எதற்காக என்ன காரணத்திற்காக என்னை அழைத்தீர்கள் என்றும் விசாரிப்பீர்கள்

கொஞ்சம் கற்பனை செய்யுங்கள் நண்பர்களே

இன்று உலகம் முழுவதும் அதற்கு ஒரே பெயர் தான் அதை நாம் திரும்ப திரும்ப பெயர் குறிப்பிட்டு சொல்லும் போது அந்த பெயருக்கு சொந்தமான அந்த வைரஸின் அதிர்வலைகள் யாரெல்லாம் தன் பெயரை சொல்லி அழைக்கிறார்களோ அவர்களை தேடி வருமா வராதா?

நாம் ஒன்றும் அறியாத சிறு குழந்தைகளை கூட இந்த கெட்ட மந்திரத்தை திரும்ப திரும்பசொல்ல வைத்து அதற்கு உரு ஏற்றி வருகிறோம்

போதாத குறைக்கு அதன் பெயரில் வடிவில் தோசை
புடவை
போன்டா
லாகின் பாஸ்வேர்டு

இதெல்லாம் நமக்கு தேவையா ??

தயவு செய்து அந்த கெட்ட பெயரை திரும்ப திரும்ப உச்சரித்து அதற்கு உரு ஏற்றி உரு ஏற்றி அதை விஸ்வரூபமாக மாற்றிவிடாதீர்கள்

தத்வமஸி நீ அதுவாகிறாய்

ஒலி அலைகள் சாதாரணமானது அல்ல அதை நல்ல அதிர்வலைகளாகவோ கெட்ட அதிர்வலையாகவோ மாற்றும் அதிகாரம் நம் வாயிலும் கையிலும் தான் இருக்கிறது

திரும்பவும் கேட்டுக்கொள்கிறேன் அந்த பெயரையும் உருவையும் பற்றி பேசாதீர்கள் பேச விரும்பினால் அது ஒரு கிருமி என்று பேசுங்கள் அமைதியாக இருப்போம் அது அதுவாகவே இருந்து செயலிழக்கட்டும் வலிமை இழக்கட்டும்

நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்கள் மனதில் விதைக்கும் விதைகள் போன்றது எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம்

நல்ல விதைகளை விதைப்போம்!
நல்ல பயிர்களை அறுவடை செய்வோம்!
அதே நேரம் தேவையற்ற களைகளையும் பறிப்போம்!

நம் வீடு
நம் குடும்பம்
நம் நாடு
நம் இனம்

மனிதம் காப்போம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

Source: Whatsapp Forward

Comments

Popular posts from this blog