Tomato Omapodi Easy 10min. Snack Recipe
Hope all is good at your end.
Here is an easy snack recipe for those never ending "ammapasikkudhu" and "is there something to eat?" Moments.
This can be done quickly along with tea or coffee. Try this today.
பத்தே நிமிடத்தில், டீயும், டிபனும் ரெடி செய்யணுமா? கடையிலே வாங்கறதை விட டேஸ்டா இருக்கும்.இன்னைக்கே டிரை செய்து பார்ப்பீங்க!
2 தக்காளி, 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/4 டீஸ்பூன் ஓமம் சேர்த்து தண்ணி விடாமல் மிக்சியில் அரைத்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்குங்க. அதோட ஒரு கப் கடலை மாவு, 1/4 கப் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, சேர்த்து கையில ஒட்டாத ஸாப்ட் மாவா பிசைங்க. தேவைப்பட்டா கொஞ்சம் தண்ணீர் சேருங்க. இப்போ ஒமப்பொடி அச்சை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்து மேலே நாலு கறிவேப்பிலை இலை தூவுங்க. ஒரு நிமிஷம் கூட ஆகாது. ஓசை அடங்கியதும் எடுத்தா லேசான புளிப்பு காரத்தோட அட்டகாசமான டீ டைம் snack ரெடி. இந்த அளவுக்கு 6 மீடியம் சைஸ் ஓமப்பொடி வரும். பசி, பசின்னு சுத்தி வர்ற குட்டீஸ்க்கு வீட்டிலே இருக்கிற பொருள் வைத்தே செய்து குடுக்கலாம்.
Grind 2 tomatoes, 1 tsp red chilli powder,1/4 tsp caraway(ajwain/omam) without adding water to a fine paste and strain the juice. Add 1 cup of gram flour,1/4 cup of rice flour, required salt and mix to a nonsticky dough. Add water if required. Fill the dough in the murukku maker with string hopper(Omapodi Achu) mould. Press 2 rounds of dough to medium hot oil in a circle, add 3 or 4 curry leaves on top and fry till the bubbles stop. It will be ready within a minute. This measurement gives 6 medium size Omapodi.
Comments
Post a Comment