கடவுள் வந்தார் - கதை
*_படித்ததில் பிடித்தது._*
_கடவுள் வந்தார்...!_
_"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.._
_அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்.._
_முதல் மனிதன் :_
_“எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!”_
_இரண்டாம் மனிதன்:_
_“நான் உலகில் சிறந்தோங்கி ,பெரிய பதவியை அடைய வேண்டும்..!”_
_மூன்றாம் மனிதன் :_
_“உலப்புகழ் பெற்ற நடிகர் போல், மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”_
_நான்காம் மனுஷி:_
_“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”_
_இப்படி.._
_இன்னும் ஐந்து பேரும், தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!_
_கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!_
*_பத்தாவது மனிதன் கேட்டான்:_*
_“உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய், எந்த அளவு மன நிம்மதியோடும், மன நிறைவோடும் ,வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”_
_ஒன்பது பேரும், அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!_
*_“ மனநிம்மதி, மன நிறைவு…_*
_நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..?_
_விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..?”_
_கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் :_
_“நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..!_
_நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு,_
_பத்தாவது மனிதனைப் பார்த்து :_
_"நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..._
_சிறிது நேரம் கழித்து "வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!_
_இப்போது,_
_அந்த ஒன்பது பேரும் போகாமல், அங்கேயே தயங்கி நின்றனர்..!_
_கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்;_
_என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..!_
_அவர்கள் விரும்பியது எதுவோ, அது அவர்கள் கையில் கிடைத்த பின்னும்,_
_இன்னும் எதுவுமே கிடைக்காத_
_அந்த பத்தாவது மனிதன் மேல், பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..!_
_நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!_
_தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே,_
_அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!_
_பத்தாவது மனிதன்,_
_கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..!_
_கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே, அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது...!!!_
_நாம் *பத்தாவது* மனிதனா..?_
_இல்லை *பத்தாது* என்கிற மனிதனா..? முடிவு எடுங்கள்..._
*_எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்._*
வாழ்க வளமுடன்
Source : Whatsapp Forward
Comments
Post a Comment