அப்துல் கலாம் கல்யாணத்தை நிறுத்தியது ஏன்?
🌴 *"அப்துல் கலாம்* ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா ?
என்ன ஜான் சொல்றே ?"
🌻"ஆமா. அந்தப் பெண்ணின் பெயர் சரஸ்வதி."
🌻"எப்போ நடந்தது இது ?
எதுக்காக அந்த கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?"
🌻நண்பரிடம் விளக்கமாக நான் அதை சொன்னேன்.
*ஆம்.*
🌻அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம்.
🌻அப்போது உயர் அதிகாரியாக திருச்சியில் பணி புரிந்து வந்த கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.
🌻"சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.
🌻கலாம் சொன்னார்
அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.
🌻காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.
மாப்பிள்ளைக்கு 47.
இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன்.
*கலாம் தொடர்ந்தார் :*
🌻"கட்டாய கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம்
அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுது.
அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை..."
🌻"அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியபெருமாள்.
"பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"
🌻ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.
🌻அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார்.
ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.
🌻கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ சரஸ்வதி நன்றி சொன்னாள்.
🌻"சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்."
🌻"நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. அதற்கான ஏற்பாடு பண்றோம்."
🌻சொன்னாள். கவனமாக
குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.
🌻"ஓகே, நாங்க புறப்படறோம்.
அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்."
"என்ன சார் ?"
🌻"உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே.
அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?"
"நான்தான் சார்."
🌻ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.
"எப்படீம்மா ?"
🌻ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம்.
🌻அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை.
🌻அந்த கூட்டத்திற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள்.
🌻பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம்.
Only four students..."
🌻கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.
🌻கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்து பாராட்டினார் கலாம்.
🌻"இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்."
🌻அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன.
🌻எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.
🌻இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார்.
அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.
அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.
*காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?*
🌻சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி.
🌻அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.
🌻யார் இந்தப் பெண் ?
எங்கோ பார்த்தது போல இருக்கிறதே !
🌻மேடையில் நின்ற அந்தப் பெண்
மூச்சு வாங்க சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது.
🌻 இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்."
🌻யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்?
எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.
🌻"கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன்.
மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம்.
நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா ?"
🌻"தெரியவில்லை" என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.
🌻அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :
🌻"ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள்.
படிக்க வைக்கப்பட்டவள்.
நான்தான் துறையூர் சரஸ்வதி."
🌻இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கி போகிறார்.
🌻"உங்களுக்கும் நன்றி.
உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி."
🌻சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண்.
🌻ஆச்சரியம்தான்.
அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.
🌻தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது.
தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.
*ஆம். அது ஒரு அழகிய கலாம் காலம்.*
Source : Whatsapp Forward
Comments
Post a Comment