அழகான வாழ்க்கை எது?

*அழகான வாழ்க்கை எது?* *ஒரு முடிவுக்கு வரும் முன்,* *யோசித்து முடிவு செய்யுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல உங்களை சுற்றியிருக்கும் உறவுகள் வாழ்க்கையும் அழகாய் , ஆனந்தமாய் அமையும்.* *ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.* *முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது, ஓடோடிச் சென்று கதவை திறந்து, அவருக்கு வணக்கம் சொல்வது இவரது அன்றாட வழக்கம்.* *ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி இவரின் வணக்கத்துக்கு பதில் கூறியதே கிடையாது.* *காவலாளியின் முகத்தை ஏறெடுத்துப் பார்ப்பதும் கிடையாது.* *ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் எனக் குப்பைத் தொட்டியில் தேடிய போது முதலாளி அதனைக் கண்டார்.* *ஆனாலும் வழக்கம் போலவே அதையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.* *முதலாளி பார்த்தது, காவலாளிக்குத் தெரியாது.* *அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது.* *காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பார்க்காமல் எடுத்துச் சென்றார்.* *இவ்வாறே தினமும் அதே இடத்தில் ஒரு பையில் சுடச் சுட விதவிதமாக உணவு இருக்கும்.* *அவரும் அதை தவறாமல் எடுத்து தன் மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து சாப்பிட்டு வந்தார்கள்.* *இருந்தாலும் யார் இப்படி தினமும் பொருட்களை வாங்கி இங்கே விட்டுச் செல்கிறார் என மனதுக்குள் ஒரு கேள்விக்குறி இருந்து கொண்டே இருந்தது.* *திடீர் என ஒரு நாள் முதலாளி இறந்து விட்டார்.* *வீடு நிறைய முதலாளியின் உறவினர்களும், நண்பர்களும், வந்திருந்தனர்.* *அன்று அதே இடத்தில் உணவுப் பொதியைத் தேடினார்.* *உணவு இருக்கவில்லை.* *ஒரு வேளை, பார்க்க வந்தவர் யாரேனும் எடுத்திருக்க வாய்ப்பு உள்ளது என நினைத்து அன்று விட்டு விட்டார்.* *இரண்டாம் நாள் பார்க்கிறார்,* *அந்த இடத்தில் உணவுப் பை இல்லை.* *மூன்றாம் நாள்,* *நான்காம் நாள் எனப் பார்க்கிறார்.* *உணவுப் பை இருக்கவே இல்லை.* *இப்படியே சென்றதால் அந்தக் காவலாளிக்கு தன் குடும்பத்துக்கு உணவளிக்க பெரும் சிரமமாய் போயிற்று.* *உடனே தனது முதலாளியம்மாவிடம் போய் சம்பளத்தை உயர்த்திக் கேட்டார்.* *அதற்கு முதலாளியம்மா,* *மகனிடம் கலந்தாலேசித்து சொல்வதாகச் சொன்னார்.* *இது நாள் வரை போதுமானதாக இருந்தது,* *இப்போது மட்டும் எப்படி பற்றாக்குறை ஏற்பட்டது என வினவினார்.* *வேறு வழியில்லாமல் வீதியோரம் எடுக்கும் உணவுப் பை கதையையும்,* *அது இல்லாததால் தன் குடும்பம் படும் அவஸ்தையையும் முதலாளியம்மாவிடம் எடுத்துச் சொன்னார்.* *எப்போதிலிருந்து உணவுப் பை இல்லாமல் போனது என்று முதலாளியம்மா கேட்டார்.* *அதற்கு அவரும் முதலாளி இறந்த நாளிலிருந்து எனச் சொன்னார்.* *முதலாளியம்மா ‘ஓ’ என அழத் தொடங்கினார்.* *இதனைப் பார்த்து கவலையடைந்த காவலாளி சம்பள உயர்வு கூட எனக்கு வேண்டாம் அம்மா,* *நான் இங்கேயே வேலை செய்கிறேன்,* *முதலில் நீங்கள் அழுவதை நிறுத்துங்கள் எனக் கூறினார்.* *அதற்கு முதலாளியம்மா,* *நான் அதை நினைத்து அழவில்லை.* *என் கணவர் தினமும் ஏழு நபர்களுக்கு உணவளித்து வந்தார்.* *அதில் ஆறு நபர்களை ஏற்கனவே அடையாளம் கண்டு விட்டேன்.* *ஏழாம் நபரைத் தான் இத்தனை நாளாய் தேடிக் கொண்டிருந்தேன்.* *ஏழாவது நபர் நீ தான் எனத் தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் அழுகிறேன்.* *இது அழுகை கூட இல்லை.* *என் இறைவனுக்கு நான் செலுத்தும் காணிக்கை என்றார்.* *நான் தினமும் தவறாமல் வணக்கம் சொல்லியும்,* *ஒரு நாள் கூட நம்மை ஏறெடுத்தும் பார்க்காத நம்ம முதலாளியா இப்படி நமக்கு உணவு தந்தார் என மலைத்தபடி நின்றார்.* *அடுத்த நாளிலிருந்து, முதலாளியின் மகன் தினமும் காவலாளியின் வீடு தேடி வந்து உணவுப் பையை காவலாளியின் கையிலே கொடுத்துச் சென்றார்.* *காவலாளி நன்றி சொல்லியும் முதலாளி மகன் அதற்கு அவனது தந்தையைப் போலவே, பதில் சொல்லாமலேயே தினமும் செல்வார்.* *ஒரு நாள் இப்படித்தான் முதலாளியின் மகன் வீடு தேடி வந்து உணவுப் பையை கையில் கொடுக்கும் போது வழக்கம் போல நன்றி சொன்னார் காவலாளி.* *அதற்கு அவரிடமிருந்து வழக்கம் போல எந்த பதிலும் வரவில்லை.* *பொறுமையை இழந்த காவலாளி,* *மிகவும் உரத்த குரலில்,* *“நன்றி சொன்னால் பதில் கூற மாட்டீர்களா?”* *என வருத்தத்துடன் வினவினார்.* *திரும்பிப் பார்த்த அந்த சிறுவர்,* *“நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று எனக்குத் தெரியாது. காரணம்:* *எனக்கும் என் தந்தையைப் போலவே காது இரண்டும் கேட்காது”* *என்று சொல்லி விட்டு திரும்பிப் பார்க்காமல் போனார்.* *நாமும் இவ்வாறு தான் அடுத்தவரது நிலைமைகள் புரியாது,* *பார்த்த மாத்திரத்திலேயே அவர்களைத் தவறாக முடிவெடுத்து விடுகிறோம்.* *அடுத்தவர்களது நடவடிக்கைகளுக்கு பின்னால் ஒளிந்துள்ள உண்மைத் தன்மையை அறியாமல் நாமே ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்.* *இந்தக் கதையிலிருந்து மூன்று விடயங்களை எடுத்துக் கொள்ளலாம்;* *ஒன்று: எதையும், யாரையும் பார்த்த மாத்திரத்திலேயே அதை நம்பி, நல்லதாகவோ, அல்லது கெட்டதாகவோ முடிவெடுக்கக் கூடாது.* *இரண்டு: நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.* *நமக்கு மட்டும் தான் பிரச்னை.* *மற்றவர்களுக்கு இல்லை என நாமே ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடாது.* *மூன்று: அவர்களுக்கு வசதியைக் கொடுத்த இறைவன்,* *நமக்கு ஆரோக்கியத்தை அளித்துள்ளான்.* *பல விஷயங்களில் நிறைவைத் தந்த இறைவன்,* *சில விஷயங்களில் குறைவைத் தந்துள்ளான்.* *அதன் சூட்சுமம் அவன் மட்டுமே அறிவான் என மனப்பூர்வமாக எண்ணி அவனுக்கு அனுதினமும் நன்றி செலுத்த வேண்டும்.* *உடையையும்,* *உள்ளத்தையும்,* *எண்ணத்தையும்,* *பார்வையையும்,* *தூய்மையாக வைத்துப் பாருங்கள்,* *வாழ்க்கை எவ்வளவு அழகானது எனப் புரியும்.* *பணமும்,* *வசதியும்,* *அழகும்,* *மட்டுமே வாழ்க்கை அல்ல.* *நேர்மையும், இறை வழிபாடும்,* *எவ்வளவு மன அமைதியையும்,* *சந்தோஷத்தையும் தரும் என்பதை,* *அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்.* *முயற்சித்துத் தான் பாருங்களேன்.* *உங்களுக்கும்,* *உங்களின் அன்பு குடும்பத்தாருக்கும்,* *எப்போதும் மன அமைதியும்,* *சந்தோஷமும் என்றென்றும் நிலைக்க வேண்டும்.* Source : Whatsapp Forward

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips