சிறுகதை

இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?’ ஆசையோடு கேட்டான் மகன்.. . “அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தாவை இங்கே கொண்டு வந்து விட்ருவாருடா. கவலைப்படாதே!’ குதர்க்கமாய் பதில் சொன்னாள், என் மனைவி... . அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது. “எடுங்க உங்க அண்ணனாய்த்தான் இருக்கும்! ‘ மனைவியின் யூகம் சரிதான். அண்ணன்தான் அழைத்தார்... . “வணக்கம்ண்ணே, சொல்லுங்க’ என்றேன். “என்னடா, அப்பாவை அழைச்சிட்டுப் போகலையா?’ அண்ணன் கேட்டார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அண்ணி தொந்தரவு செய்திருப்பாள்... . “கொஞ்சம் வேலையாப் போய்டுச்சிண்ணே… இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடுறேன்’ இணைப்பை துண்டித்தேன். புறப்பட ஆயத்தமானேன்... . “அப்பா, எனக்கொரு சந்தேகம்’ என்றான் மகன். . “என்னடா சந்தேகம்?’ “தாத்தாவுக்கு நீ, பெரியப்பான்னு ரெண்டு பிள்ளைங்க… தாத்தாவை மாறி மாறி வச்சுக்கிறீங்க… உனக்கு நான் ஒரே பிள்ளை உனக்கு வயசாய்ட்டா ஒரு மாசம் நான் வச்சுக்குவேன்…. அடுத்த மாசம் நீ எங்கே போவே...?’ . என்னை யாரோ பிடரியில் ஓங்கி அறைந்தது போல வலித்தது. மனைவியை பார்த்தேன்.. அவளும் தலைகுனிந்திருந்தாள். அவளுக்கும் வலித்திருக்க வேண்டும். ,,,,,படித்ததில் பிடித்தது! ☜❤✓

Comments

Post a Comment

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips