ஒரு ஊரில் ஒரு செல்வந்தார் இருந்தார். அவர் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பியபோது, *அவரது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பறி எரிந்து கொண்டிருந்தது*.
அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு.
*அவருடையது தான்..*
அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை
கொடுத்து வாங்க பலரும் தயாராக
இருந்தனர். *ஆனால் இவர் தான்*
*விற்கவில்லை*.
இப்போது, அந்த வீடு அவர் கண் முன்னே *எரிந்துகொண்டிருந்தது.*
ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தார்கள். *தீ முழுவதுமாக பரவிவிட்டதால்* *அதைஅணைத்தும்* *பிரயோஜனம் இல்லை என்று*
*எந்த முயற்சியும் எடுக்கவில்லை*. .
வணிகரோ செய்வதறியாமல் *கண்ணீரோடு புலம்பிகொண்டிருந்தார்.*
ஐயோ என் வீடு.
*என் வீடு.*.
*என்றுஅலறினார்*
அப்போது அவரின் மூத்த மகன் ஓடிவந்து,தந்தையே ஏன் அழுகிறீர்கள்..? *இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன்.. இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான்.*
இதைக் கேட்ட வணிகருக்கு ஏக மகிழ்ச்சி .
*அவரது சோகமனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.*
இப்போது வணிகரும் கூடியிருந்த அந்த
கூட்டத்தில் *ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினார்*.
அதே வீடு தான்..'
அதே நெருப்பு தான்..'
*ஆனால் சில வினாடிகளுக்கு முன்*
*இருந்த தவிப்பும் சோகமும் இப்போது*
*அவரிடம் இல்லை.*
சிறிது நேரத்தில் வணிகனின்
இரண்டாவது மகன் ஓடி வந்து *தந்தையே*
ஏன் இப்படி கவலையில்லாமல்
சிரிக்கிறீர்கள்..? *நாங்கள் விற்ற* *இந்த*
*வீட்டிற்கு முன்பணம்* *மட்டுமே வாங்கியுள்ளோம்.* *முழுத் தொகை இன்னும் கைக்கு வரவில்லை.*
வீட்டை வாங்கியவன் இப்போது
*மீதி*
*பணத்தை* *தருவானா* *என்பது* *சந்தேகமே..?*
*என்று கூறினான்.*
இதைக் கேட்ட வணிகர் அதிர்ச்சி
அடைந்தார். மீண்டும் சோகத்தில்
ஆழ்ந்தார். *கண்ணீரோடு* *மீண்டும் புலம்ப*
*ஆரம்பித்தார்*.
தனது உடமை எரிகிறதே' என்ற *எண்ணம் மீண்டும் அவரை வாட்டியது.*
சில மணித்துளிகளுக்குப் பின்பு
வணிகரின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். *தந்தையே கவலை*
*வேண்டாம்*. *இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும்*.
இந்த வீட்டை வாங்க அவன் முடிவு
செய்தபோது,
*வீடு தீ பிடிக்கும்* *என்று உங்களுக்கும்* *தெரியாது எனக்கும்*
*தெரியாது*.
ஆகையால் நான் பேசியபடி முழு
தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி
அனுப்பினார்.
*என்று* *மகிழ்ச்சியோடு*
*தெரிவித்தான்.*
இதைக் கேட்ட வணிகருக்கோ
*ஏக சந்தோஷம்.*
கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி
மகிழ்ந்தார். *கண்ணீரும்,சோகமும்*
*மீண்டும் காணாமல் போய்விட்டது.*
மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று
*வேடிக்கை பார்க்க தொடங்கினார்*.
இங்கு எதுவுமே மாறவில்லை
அதே_ *வீடு* அதே_*நெருப்பு* அதே_ *இழப்பு*
இது என்னுடையது என்று நினைக்கும்போது *அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.*
இது என்னுடையதல்ல என்று நினைக்கும்போது *உங்களை சோகம் தாக்குவது இல்லை.*
உலகில் எதுவுமே *நிரந்தரமானது இல்லை*.
ஒருவனுக்கு மட்டும் எதுவுமே சொந்தமானது அல்ல.
*அனைத்துமே அழிய கூடியது.*
எல்லாமே ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு பின் அழியக்கூடியது. *அல்லது*
*வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது*..
எதை நீ இழந்தாய்..? எதற்காக அழுகிறாய்..?
*இன்று எது உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையது*..
மாற்றம் என்பது மட்டுமே மாறாதது..
கடமையைச் செய்... பலனை எதிர்பாராதே... *ஏனெனில் கடமைக்கான பலனை இறைவன் தர மறப்பதில்லை*.
*அன்பாய் இருப்போம்..*
*பண்பாய் இருப்போம்..*
*நட்பாய் இருப்போம்..*
*உண்யையாய் இருப்போம்*.
*அனைவர் நெஞ்சிலும் நீங்காமலிருப்போம்*.
Source: Whatsapp Forward
Comments
Post a Comment