உள்ளே - வெளியே :


ஒரு  மத்யான வேளை. மும்பை லோக்கல் ட்ரைன். அப்போ தான் கூட்டம் கொறச்சலா இருக்கும். மட்டுங்கா போகணும். 


திரு திருன்னு முழிச்சுண்டு எனக்கு தெரிஞ்ச ஹிந்திலே நாலு பேரு கிட்டே விசாரிச்சுண்டு ஒரு ட்ரைன்ல ஏறினேன். உள்ளே கொஞ்சம் இடம் இருந்தது. போய் நின்னுண்டு பக்கத்துலே இருந்தவன் கிட்டே, எ காடி மட்டுங்கா ஜாயேகி என்று கேட்டேன். அவ்வளவு தான். அவன் என்னமோ ஷாக் அடிச்சபோல பாத்துட்டு, அரே, தேரே கோ மாலும்நஹி ? எ பாஸ்ட் ஹை, பாஸ்ட் ட்ரைன். ஹூஹும், யே காடி நஹி ருகேகான்னு சொல்லிட்டு சுவாரஸ்யமா காது குடைய ஆரம்பிச்சான்.


நான் பாவமா நிக்கறேன். நாலு பேர் கிட்ட விசாரிச்சோம். அத்தனை பேருமா தப்பா? இல்லே நம்ம ஹிந்தி தான் தப்பா.? 


ட்ரைனோ ஸ்பீட் எடுத்து ஓடுது.

அப்போ பக்கத்திலே இன்னொரு ஆள் பையில் இருந்து ஜூனியர் விகடனை உருவ, அப்பாடா, நம்மாள் ஒருத்தன் கிடைச்சான்னு பாஞ்சு போய், சார் இந்த ட்ரைன் மட்டுங்கா போகும்ல்லே என்று கேட்க, அவர் கண்ணாடியின் கீழ் வழியாக பார்த்து  விட்டு,  வடிவேலு ஸ்டைலில் இது மட்டுங்கா போகும்  ஆனா ..... நிக்காது. இது பாஸ்டு.


நீங்க மட்டுங்கா போகனுமா? அப்போ ஒன்னு சொல்றேன் கேளுங்கோ. 

நான் அஞ்சு ஆறு வருஷமா இந்த ட்ரைன்ல தான் போறேன். தெனமும் இது மட்டுங்கா ஸ்டேஷன் வந்தவுடன் ஸ்லோவா தான் போகும். அதனாலே நான்சொல்ற போது டபக்குன்னு  இறங்கிடுங்கோ. ஒண்ணும் ப்ரச்சனை இல்லே. ஆனாக்க கிழே விழாம இருக்க ஒண்ணு செய்யணும். எறங்கின உடனே ட்ரைனோட கூடவே கொஞ்ச தூரம் ஓடுங்கோ, சரியாய் போய்டும் ன்னு சொல்லிட்டு நியூட்டன் லா ஆப் மோஷனை பத்தி ஒரு சின்ன க்ளாஸ் எடுத்தார். எனக்கோ எப்பிடிடா மட்டுங்காவில் எறங்க போறோம்னுட்டு கிலி பிடிச்சி ஆட்டுது. ஆச்சு, மட்டுங்கா ஸ்டேஷன் வந்துடுத்து.


ஹ்ம்ம்.. எறங்குங்கோன்னு அவர் பிடித்து தள்ள தரையில் கால் பட்டதும் எடுத்தேன் ஒரு ஓட்டம். என் லைபிலே அந்த மாதிரி ஒரு ஓட்டம் ஓடினதே இல்லை.


ட்ரைன் ஸ்லோவா ஆய்டுத்து. ஆனா என் வேகம் அதிகம். அடுத்த compartment வந்துடுத்து.


அதிலே இருக்கிறவா நான் இந்த ட்ரைன் லே ஏற ட்ரை பண்றேண்ணு நினச்சு என் கையை பிடிச்சு அலேக்கா ட்ரைன் உள்ளே இழுத்து விட்டுட்டாங்க.


அரே வாஹ். ஆப்கோ கித்னா ஹிம்மத். யே பாஸ்ட் ட்ரைன் ஹை. து க்யோன் ஐசே கர்தே ஹோ?


(உனக்கு எவ்ளோவ் தைரியம்?,இந்த பாஸ்ட் ட்ரைன்லெ ஏன் இந்த மாதிரி பண்றே.)


மூச்சிரைக்க என்ன நடந்தது என்று தெரியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தை போல 'ஞே' ன்னு நான் நிற்கிறேன்.


அவர்களிடம்  நான் என்னத்தை சொல்ல.


எறக்கி விட்டவன் ஒருவன். 

ஏத்தி விட்டவன் இன்னொருதன்னா ?

*படித்தேன் இரசித்தேன்  நீங்களும் மகிழ பகிர்ந்தேன்*

Source: whatsapp forward

Comments

Popular posts from this blog