*தமிழை அறிவோம்* 

தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கு தனியாக பொருள் உண்டு ! 


அவற்றை தெரிந்து கொள்வோம் .


அ - எட்டு 

ஆ - பசு 

ஈ - கொடு , பறக்கும் பூச்சி 

உ - சிவன் 

ஊ - தசை , இறைச்சி 

ஏ - அம்பு 

ஐ - ஐந்து , அழகு , தலைவன் ,வியப்பு 

ஓ - வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

கா - சோலை , காத்தல் 

கூ  - பூமி ,கூவுதல் 

கை  - கரம் , உறுப்பு 

கோ   -  அரசன் , தலைவன் , இறைவன் 

சா - இறப்பு , மரணம் , பேய் , சாதல் 

சீ - இகழ்ச்சி , திருமகள்

சே - எருது , அழிஞ்சில் மரம் 

சோ - மதில்

தா - கொடு , கேட்பது

தீ - நெருப்பு 

து - கெடு , உண் , பிரிவு , உணவு , பறவை , இறகு

தூ - வெண்மை , தூய்மை 

தே - நாயகன் , தெய்வம் 

தை - மாதம் 

நா - நாக்கு 

நீ -  நின்னை 

நே - அன்பு , நேயம் 

நை - வருந்து , நைதல் 

நொ - நொண்டி , துன்பம் 

நோ - நோவு , வருத்தம் 

நெள - மரக்கலம் 

பா - பாட்டு , நிழல் , அழகு 

பூ - மலர் 

பே - மேகம் , நுரை , அழகு 

பை - பாம்புப் படம் , பசுமை , உறை 

போ - செல் 

மா - மாமரம் , பெரிய , விலங்கு 

மீ - ஆகயம் , மேலே , உயரம் 

மு - முப்பு 

மூ - மூன்று 

மே - மேன்மை , மேல் 

மை - அஞ்சனம் , கண்மை , இருள் 

மோ - முகர்தல் , மோதல் 

யா - அகலம் , மரம் 

வா - அழைத்தல் 

வீ - பறவை , பூ , அழகு 

வை - வைக்கோல் , கூர்மை , வைதல் , வைத்தல் 

வெள - கெளவுதல்


Source: Whatsapp Forward

Comments

Post a Comment

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips