*திருப்பட்டூர்*


நம்முடைய தலையெழுத்தையே மாற்றி எழுத முடியுமா என்றால் முடியும் என்று சொல்கிறது பாடலூர் அருகே உள்ள திருப்பட்டூர் என்ற ஊரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் திருத்தலம். 


As the Hindu mythology says....once upon a time மகேஸ்வரனுக்கும் ஐந்து தலைகள். பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள். அதனால் படைக்கும் தொழில் (Creator) தன்னிடம் தான் இருக்கிறதென்ற எண்ணம் மேலோங்கி மகேசனை விட தான் உயர்ந்ததாக கர்வம் கொண்டு அவரிடம் இருந்து தன்னை மாறுபடுத்தி காட்டிக்கொள்ள முயன்றார் பிரம்மன். 


பிரம்மனின் கர்வத்தை உணர்த்த எண்ணிய மகேசன் அவரின் ஒரு தலையை கொய்து அவரின் படைப்புரிமையை பறித்தார். 


'அவனருளாலே அவன்தாள் வணங்கி' என்கிற சிவபுராண வரிகளுக்கு ஏற்ப, தனது தவறான நிலைப்பாட்டினை உணர்ந்த பிரம்மன் தேசமெங்கும் சிவாலய பூஜை செய்ய ஆரம்பித்தார். அப்படி செய்து வருகையில் மகிழ மரங்கள் சூழ்ந்த பிடவூர் எனும் வனத்தில் வருடத்திற்கு ஒரு லிங்கம் வீதம் பனிரெண்டு ஆண்டுகள் நிர்மாணம் செய்து வழிபாடு நடத்தி வந்தார். 


வழிபாட்டில் மகிழ்ந்த சிவனும் பார்வதியும் பிரம்மதேவன் தன் தவறை உணர்ந்ததால் படைக்கும் தொழிலை மீண்டும் கொடுத்து அருள்பாலித்ததுடன், இத்தெய்வீக திருத்தலத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களது தலையெழுத்தையே மங்களகரமாக மாற்றுகிற அரியதொரு வரத்தினை 'விதியிருப்பின் விதி கூட்டி அருள்க' என்று பேரருள் புரிந்தனர். 


அன்றிலிருந்து இத்தலத்தில் வழிபாடு செய்பவர்களின் தலையெழுத்தையே பிரம்மன் மங்களகரமாக மாற்றி அருள் பாலித்து வருகிறான் என்பது இத்திருத்தலம் சூழ்ந்த நம்பிக்கையாகும். 


அதற்கு சான்றாக மனிதன் எழுதிய ஜாதகத்தினை இத்திருத்தலத்தில் பிரம்மபுரீஸ்வரர் பாதத்தில் வைத்து இந்துக்கள் இன்றைக்கும் வழிபட்டு வருவது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். 


குரு பார்க்க கோடி நன்மை. குருவுக்கும் அதி தேவதையாக விளங்கும் ஶ்ரீபிரம்மமூர்த்தியோடு குருவருளும் ஒருங்கே பெறலாம் என்ற நம்பிக்கை இத் திருத்தலத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.


சர்வம் சிவமயம். அவனன்றி ஓர் அணுவும் அசைவதில்லை.


ஓம் நமசிவாய....

Gnanasekaran Veeriahraju 


🙏🙏🙏


*FORWARD MESSAGE*


Comments

Popular posts from this blog