200க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில்சமாதியான சிவாலயம்.:--- சுமார் 4000 ஆண்டுகளுக்குமுன் ஒரே இடத்தில் மன்னனால் 200க்கும் மேற்பட்டமகான்களை சமாதி செய்துவைக்கப்பட்ட பிரசித்தமான சிவாலயம்,இன்று பராமரிப்பின்றி தனிநபர் ஒருவரின் அர்ப்பணிப்பால் புதுப்பிக்கபட்டு இருக்கிறது.ஒரு சாதாரண சிவபக்தன் தான் குடியிருந்தவீட்டை விற்று கிடைத்தபணத்தில் ஆலய புணரமைப்பு பணிகளை செய்து வருகிறார்.இவ்வாலயத்தின் சிறப்பை வார்த்தையால் சொல்ல இயலவில்லை.ஆலயத்தில் எங்கு நின்றாலும் Cosmic Vibration நம்மை ஆட்கொள்கிறது.நமது வாழ்வியல் முறைகளை அங்குள்ள சிற்பங்கள் பறைசாற்றுகின்றன.அதில் ஒரு சிற்பம்:தாயின் வயிற்றிலிருந்து குழந்தைபிறப்பை காட்டுகிறது,அப்புறம்குழந்தை நிலைதடுமாறியிருக்கும் போது (இன்று Breach என்று சிசேரியன் செய்வார்கள்) மருத்துவம் பார்க்கும் டெக்னிக்கூட தத்ரூபமாக தூணில் சிற்பமாக காட்டபட்டுள்ளது.*ஒரு தூணில் பிராணயாம பயிற்சி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது;ஒரு சிறப்பு என்னவென்றால் அந்த சிற்பத்தின்மீது கை வைத்தாலே நமக்கு மூச்சு மேலும் கீழும் இயங்கத்தொடங்கி பிராணயாமம் நடக்கிறது.இது சத்தியமான உண்மை.அனுபவித்தேன்.*.இன்னும் பலசிறப்புகள் கொண்டுள்ள சிவாலயம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும்.இப்பவும் பௌர்ணமி யாகபூஜை சிறப்பாக செய்யபடுகிறது.யாக ஜோதியில் பல்வேறு இறை ரூபங்கள் காட்சிகளாக கிடைத்துள்ளது.Photo ஆலயபராமரிப்புசெய்யும் சிவனடியாரிடம் தொகுப்பாக இருக்கு.பாக்கியமுள்ளவர்கள் பௌர்ணமி ஹோமத்தில் பங்கெடுக்கலாம்முடிந்தால் காணிக்கை செலுத்தலாம்.கட்டாயமில்லை.ஆலய அமைவிடம்:-தென்காசி To மதுரை மார்க்கத்தில் கடையநல்லூருக்கு அடுத்த 4Km தூரத்தில் சுந்தரேஸ்வரபுரம்என்ற ஊரில் ஊருக்கு வெளியே அமைதியான தோப்புகளின் நடுவே அமைந்துள்ளது.கடைய நல்லூரிலிருந்து Auto வசதியுள்ளது.சிவனருள் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள் தரிசிக்கலாம்.ஓம் சிவாய.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment