இன்றைய சிந்தனை

⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰


சொல்ல முடியாத சோகங்கள் தான்......

சிலசமயம் கோபமாபக வெளிப்படுகிறது.....!!!!


பிடித்தவர்களிடம் பேசு பேசு என்று கேட்பதற்குக் கூட பயமாகத்தான் இருக்கிறது.....

எங்கு நம்மை தொல்லை என்று நினைத்து விடுவார்களோ என்று...்!!!!


இல்லாத ஒன்றில் தான் நிம்மதி இருப்பதாய் நினைத்து......

தேடிக் கொண்டே இருக்கிறது மனிதர்களின் மனம்....!!!!!


பசித்த வயிறு....

பொய்யான உறவு....

நம்பியவர் செய்த துரோகம்.,...

கடனுடன் வாழும் வாழ்க்கை.....


இவை நான்கும் கற்பிக்கும் அனுபவ பாடத்தை........

அந்த ஆண்டவானாலும் கற்பிக்க முடியாது....!!!!!


*வாழ்க்கை*

சற்று கடினமான தேர்வு.....

பலர் அதில் தோல்வியுறக் காரணம், அவரவர்க்குத் தனித்தனி கேள்வித்தாளென அறியாது.....

பிறரைப் பார்த்து நகலெடுப்பதுதான்....!!!


உன் எண்ணமும், செயலும் நேர்மையாக இருந்தால்......

நீ வைக்கும் குறி யார் தடுத்தாலும் தப்பாது...!!!!!


மனமே , பதற்றப்படாதே!

மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கும்......

தோட்டக்காரன் நூறு குடம் நீர் ஊற்றினாலும் ....

பருவம் வந்தால் தான் பழம் பழுக்கும்....!!!!


வாழ்க்கை நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகிறது..!!

அதில் ஒன்று தான் யார் யாரிடம் எப்படிப் பழகனும் , எந்தளவுக்குப் பழகனும் என்பது.....!!!!


நினைவில் கொள்ளுங்கள்.....

நாம் செய்யும் நன்மை தீமைகள் அனைத்தையும் காலம்  குறித்து வைத்துக்கொண்டு....

காலமும், நேரமும் வரும் போது அதை உங்களுக்கே திருப்பிக் கொடுக்கும் .....!!!!!


நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு இருந்து விட்டால்....


நினைவின் மொழியும்.....

பிரிவின் வலியும்....

உணர முடியாமலே போய்விடும்.....!!!!


கூர்மையான வாளாக இருப்பினும்.....

அது கோழையிடம் இருந்து பயனில்லை....!!!!!!


இனிய நற்காலை வணக்கம் 🙏.

வாழ்க வளமுடன்.

எங்கு சென்றாலும் தனிமனித இடைவெளியை கடைப்பிடியுங்கள்.

⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰

Comments

Popular posts from this blog