From WhatsApp


ஒரே வரியில் அத்தனை தெய்வங்களையும் வர்ணிக்க முடியுமா?

ஆம் .. முடியும்


"  சிரமாறு உடையான் " 


1. சிரம் மாறு உடையான் - தலையது மாறி  

    வேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்குறிக்கும்


2 . சிரம் ஆறு(6)உடையான்  - ஆறு முகம்

    படைத்த சுப்பிரமணியத்தைக்குறிக்கும்


3 .  சிரம் ஆறு உடையான் - சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும்


4 . சிரம் மாறு உடையான் - சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம்

பிரம்மாவைக்குறிக்கும்


5. சிரம் ஆறு(river) உடையான் - காவிரி ஆற்றில் தலை வைத்து சயனித்திருக்கும்

   ஸ்ரீ ரங்கநாதரைக்குறிக்கும்

ஆஹா! என்னே நம் மொழியாம் தமிழ்..

இதை சொன்னவர் செய்கு தம்பி பாவலர் எனும் ஒப்பற்ற தமிழறிஞர்

Comments

Post a Comment

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips