*நீதி கதை ஒரு வக்கீலின் வாதத் திறமை எவ்வாறு இருக்க வேண்டும்* !!
ஒரு நீதிபதியின்
நடுநிலை திறமை எவ்வாறு இருக்க வேண்டும்!!
*ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை*. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய *போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது*.
*குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து*, *மைலார்ட்*! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, *அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார்* . நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் *குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்*” என்று கூறி அமர்ந்துவிட்டார்.
*நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்*/. பார்த்துக்கொண்டே இருந்தார்கள் போல தோன்றியது 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. *ஒருவரும் வரவேயில்லை*. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.
*மைலார்ட்* நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், *கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை*. அதனால்தான் எல்லோரும் *வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள்*. எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, *அவரை விடுதலை செய்ய_வேண்டும்*” என்று கூறிவிட்டு
*கம்பீரமாக அமர்ந்தார்*.
*பிற்பகலில் நீதிபதி*
*தீர்ப்பை வாசித்தார்*
*குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார்*. வக்கீல் எழுந்து, “எப்படி *மைலார்ட்*?” என்று கேட்டார்.
*அதற்கு நீதிபதி* சொன்னார், “*அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான்*. ஆனால், *ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை*.”
*எப்போதும் நல்லதே செய்வோம் நல்லவனாக இருப்போம்*
Comments
Post a Comment