*வெள்ளி அரணாக்கொடி*
இதை பழைய காலத்தில் குடியானவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் அணிவர்..
குடியானவர் குடும்பம் மட்டுமே இல்லை
கொஞ்சம் வசதி படைத்த நம் தாத்தா வயதில் தந்தை வயதில் இருந்த அனைவரும் அதை அணிந்து கொண்டு இருப்பதை பார்த்தும்
இருப்பீர்கள்....
என்ன அவர்கள் அனைவரும் அதை அணிந்து கொண்டு இருந்த போது அவர்கள் அனைவரும்
கோமணம் (விவசாய காட்டில் வெள்ளையும் சொள்ளையுமா சுத்த முடியாதே???)
அணிந்து மட்டுமே இருப்பார்கள்..
இதை பார்த்து பார்த்து பழகி இன்றைய பேரன்மார்கள்
இப்பொழுது
வெள்ளி அரணாக்கொடி என்பது ஏதோ தீண்ட தகாத பொருள் போல
இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது..
அரணாக்கொடி எதற்காக என்று இன்னும் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் விதமாக இப்பதிவு..
ஆண்களின் இடுப்பில்
உரசி கொண்டே இருக்கும்
அரணா என்பது
ஆண்களின்
விந்தணு பையில் வைத்து இருக்கும் விந்தணுக்கள் எதை அழிவில்லாது காப்பாற்றி கொடுத்து அவர்களுடைய வம்ச விருத்தி செய்ய உதவுகிறது..
ஜோதிட ரீதியான
அடிப்படையில்
சனி பகவான்
சுக்கிரன் வீடான துலா ராசியில் செல்லும்போது உச்சம் அடைகிறார்..
இந்த சனி பகவான் நம் உடலில்
ஆங்கிலத்தில்
ஸ்பைனல் கார்ட் என சொல்லப்படும்
நடு தண்டுவட எலும்பு அடுக்குகள் உள்ளே இருந்து ஆட்சி செய்கிறார்..
முதுகுத்தண்டு வட 32 எலும்பு அடுக்குகள் கூட கருப்பு நிற
நரம்பில் இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன்..
இந்த தண்டுவட எலும்புக்கு கீழே அடித்தளத்தில்
சுக்கிரன் எனும் வெள்ளி இருந்தால்
அந்த தண்டுவடம் விலகுதல் பாதிக்கப்பட்டு விடுதல் போன்றவற்றை
இல்லாமல் நல்ல தேக ஆரோக்கியமான உடல் அமைப்பை கொண்ட மனிதன் ஆக வைக்கிறது..
அதே போல தான் பெண்களின் இடுப்பில் ஒட்டியாணம்
தங்கத்தினால் அணிவிக்கப்படும்
இது
அந்த பெண்ணின்
கருப்பையில் உள்ள தேவையற்ற செல்களை அழித்து
நல்ல விதமாக
மகப்பேறு எனும்
குழந்தைகள் பேறு பெற உதவுகிறது...
எம்மை பொறுத்தவரை
திருமணம் செய்து பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத தம்பதியினர்
ஆண் வெள்ளி அரணாக்கொடி
அணியும் போது
தன்னுடைய விந்தணு உற்பத்தி அதிகப்படியான அளவில் கொண்டு வர உதவும்...
பெண் தங்க அராணக்கொடி
அல்லது
பெண்கள் தன் தொப்புளில்
சிறிதளவு ஆவது
தங்கம் அணிய கர்ப்பம் தங்கும் என நம்பலாம்...
ஆண்களுக்கு இன்னொரு குறிப்பு
தற்போதைய இளைஞர்கள் அனைவரும்.
இரு சக்ர வாகனங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள்...
சிறு வயதிலேயே (31 வயது)
பைக் அதிகமாக ஓட்டுவதால்
தண்டுவடம் கொஞ்சமாக வலி கண்டு சிகிச்சைக்கு சென்று கொண்டிருந்த
ஒருவரை அவர் வெள்ளி அரணாக்கொடி அணியாமல் இருப்பதை சுட்டிக்காட்டி
அணிய சொன்னேன்..
ஆறு மாத காலத்திலேயே தன் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இருந்த நிலை மாறி விட்டதை மிகப்பெரும் அதிசயமாக மீண்டும் வந்து சொன்னார்கள்....
கண்ட கண்ட நகைகளை வாங்கி அணிவதை விட்டு தேவைக்கேற்ப நகைகளை அணியலாம்.
*தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்*
*தன்வழி யாகத் தழைத்திடும் வையகம்*
*தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்*
*தன்வழித் தன்னரு ளாகிநின் றானே .*
படித்ததை பகிர்ந்தேன்!!
Comments
Post a Comment