மிக சிறந்த முதலீடு எது ?
தங்கமா ? நிலமா ?
இரண்டும் இல்லை
பதில் ;;;
நீங்கள் தான்
உங்கள் மீது நீங்களே முதலீடு செய்யலாம்
1. தினமும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்யுங்கள் , இந்த முதலீடு lifestyle வியாதிகளில் இருந்து உங்களை காக்கும்
2. மேற்படிப்பு அல்லது online கோர்ஸ் என்று உங்கள் துறையில் மேலும் படியுங்கள் , இந்த முதலீடு உங்கள் வருமானத்தை பெருக்கும்
3. எனோ தானோ என்று உடை அணியாமல் , பார்க்க ப்ளெசெண்டாக உடை அணியுங்கள் , ஷூ formals என்று பார்க்கவே மரியாதையாக தெரிய வேண்டும் , ( இந்த முதலீடு , good first impression ஐ உருவாக்கும் )
4. மனதுக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவழியுங்கள் ( இந்த முதலீடு , நமக்கானவர்களை உருவாக்கும் )
5. அடுத்தவரை பற்றியே யோசித்து ( gossips )கொண்டு இல்லாமல் உங்கள் தொழில் எப்படி உயர வேண்டும் என்று யோசிக்க வேண்டும் ( இந்த முதலீடு , புது முயற்சிகளை உருவாக்கும் )
இந்த 5 முதலீடையும் உங்கள் மீது முதலீடு செய்யவேண்டும் day in and day out
அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம் , நிலம் தராத அளவுக்கு நீங்கள் இலாபமும் , ஆரோக்கியத்தையும் , மன நிம்மதியையும் , பொருளாதாரதிலும் முன்னேறியிருப்போம்
❣️❣️❣️❣️❣️
Drprakash Surgeon Thanjavur
நான் வேலைக்கு சென்ற காலத்தில், ஒரு நாள் என் சக அதிகாரியுடன், என் மேல் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, என் சக அதிகாரி சொன்னார், "ஸார், உங்க இரண்டு பேருக்கும் இரண்டு ஆம்பள பசங்க. கவலை இல்லை. எனக்கு இரண்டும் பொண்ணுகளா போச்சி" என்றார். அதற்கு என் உயர் அதிகாரி " வயதான காலத்தில், பையன் வீட்டுக்குப் போனால், எப்ப மருமக காஃபி கொடுப்பா, எப்ப டிபன் சாப்பிட கூப்பிட்டுவா, எப்ப சாப்பாடு போடுவான்னு சமயல் கட்டையே பார்த்துகிட்டே இருக்கனும். அதே, பொண்ணு வீட்டுக்குப் போனா, உரிமையா, சமயல் கட்டுக்குள்ளே போய், பசிக்குது , சாப்பிட எதாவது குடுன்னு கேட்கலாம்" என்று பதிலளித்தார். ஞாயமாகத் தான் எனக்குப் பட்டது அன்று. இன்று? நேற்று பெசண்ட்நகர் பீச்சில், வாக்கிங் போய் விட்டு, அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தேன். என் அருகில் இரண்டு பெண்மணிகள் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. அதன் சாரம்சம் கீழ் வருமாறு: ஒரு பெண்மணிக்கு இரண்டு பெண்கள். இரண்டு பேரும், திருமணம் முடித்து, ஒரு பெண் ஆஸ்திரேலியாவிலும், அடுத்த பெண் அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள். "இப்பத்தான், ...
Comments
Post a Comment