++++++
**அப்பா* *ஏன்* *எப்போதும்*
*பின்தங்கியிருக்கிறார்** என்று தெரியவில்லை...
1) அம்மா *9* மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். *அப்பாவோ* *25* வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார்.
ஆனால், இருவருமே சமம்தான்.
*இருந்தாலும் *அப்பா* ஏன் பின்தங்கியிருக்கிறார்
என்று இன்னும் தெரியவில்லை.
2) தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார்.
*அப்பா* தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான்.
*இருப்பினும் *அப்பா* ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
3) அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். *அப்பா* நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது.
**அப்பா* ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை.
4) நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் *அப்பாவை* நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பதில்லை என்று அப்பா எப்போதாவது நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடமிருந்து அன்பைப் பெறும்போது, தலைமுறை தலைமுறைகளாக,
**அப்பா* எப்போதும் பின் தங்கியே இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை...
5) அலமாரியில் வண்ணமயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், *அப்பாவின்* உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. *அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
6) அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் இருக்கும். ஆனால், *அப்பாவுக்கென்று* ஆபரணம் ஏதும் இருப்பதில்லை. தனக்கென்று ஏதும் வாங்கியதுமில்லை.
இருந்தாலும்
**அப்பா* ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னமும் தெரியவில்லை.
7) குடும்பத்தை கவனித்து கொள்வதற்கு *அப்பா* அன்றாடம் மிகவும் *கடினமாக* உழைக்கிறார். ஆனால், அங்கீகாரத்தை பெறும்போது,
*அவர் எப்போதும் பின்தங்கியே இருக்கிறார். அது ஏன் என்று புரியவில்லை.
8) அம்மா கூறுகிறார், "நாம் இந்த மாதம் குழந்தைகளின் பள்ளி/ கல்லூரிக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, வரும் விசேஷத்துக்கு எனக்காக சேலை எதுவும் வாங்க வேண்டாம்" என்கிறாள். நான் முன்பே முடிவெடுத்து விட்டேன். எனக்கும் வேண்டாம் என்கிறார். குழந்தைகளுக்குப் தங்களுக்குப் பிடித்த உணவை வீட்டிலும், வெளியிலும் வாங்கித் தருகிறார். அப்பாவுக்கு என்று எதையும் வைப்பது இல்லை. *அப்பா* அன்று உணவுடன் ஊறுகாயைப் பொரியலாக எண்ணி சாப்பிடுகிறார். பிள்ளைகள் மீது அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால்,
**அப்பா* ஏன் பின் தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
9) பெற்றோர்களுக்கு வயதாகும் போது, குழந்தைகள் சொல்கிறார்கள், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வதில் அம்மா தங்கள் உடன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று. ஆனால், அப்பாவோ பயனற்றவர் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள்.
*அப்பா ஏன் பின்தங்கியே இருக்கிறார்..?
அவர்தான் குடும்பத்தின் *முதுகெலும்பாக* இருக்கிறார். அவர் இருக்கும் காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது.
*இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கியே இருக்கிறார் என்றுதான்
தெரியவில்லை.
*தந்தையைப் போற்றுங்கள்*
படித்ததில் வலித்தது. " அப்பா "
..
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment