சென்னையில் பஞ்சபூத தலங்கள்!
* சௌகார்பேட்டை அண்ணாபிள்ளை தெருவில் இருக்கும் ஈஸ்வரன் கோயில் (அருணாசலேஸ்வரர்) - அக்னி.
* தங்கசாலையில் இருக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் - ப்ரித்வி (மண்).
* பவளக்காரத் தெருவில் இருக்கும் மல்லீஸ்வரர் - வாயு.
* புரசைவாக்கத்தில் இருக்கும் ஸ்ரீகங்காதீஸ்வரர் - நீர்.
*சூளை அவதான காப்பையர் தெருவில் இருக்கும் ஸ்ரீசிதம்பரேஸ்வர் - ஆகாயம்.
இதில் என்ன வியப்பென்றால், இந்த பஞ்சபூத தலங்கள் அனைத்துமே, வட சென்னையிலேயே அமைந்திருப்பதுதான்.
அப்பா ஒரு வரம்
அப்பா . . . . உங்கள் திசையில் காத்திருக்கிறோம். மிஸ்டர் வேம்பு. எழுபது வயது தாத்தா. பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம். இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் மிஸ்டர் வேம்பு. வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் வேம்புவின் பக்கத்தில் அமர்கிறார். ‘மிஸ்டர் வேம்பு! நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன்', என்றார் கடவுள். ஆச்சர்யப்பட்டார் வேம்பு. யோசித்தார். பிறகு பேசினார். ‘கடவுளே! என் அப்பாவை பார்க்க வேண்டும். அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?' என்று கேட்டார் வேம்பு. ‘மிஸ்டர் வேம்பு! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள். ‘கடவுளே! ஆம். அவருக்கு நிகர் யாருமில்லை', என்றார் வேம்பு. ‘அப்ப...
Comments
Post a Comment