காலங்கள் மாறினாலும், டயலாக் மட்டும் மாறவே இல்லை. உங்க வீட்டிலேயும் இப்படித் தானா?😜
1960
எப்ப பாரு கதை புக் படிக்கிறதே வேலையா போச்சு, பாட புத்தகம் படிக்கிற நேரத்தை விட விகடன் கல்கி அப்புறம் இந்த கருமம் புடிச்ச குமுதம் இன்னொரு வாட்டி கையில் குமுதத்தை பார்த்தேன் அவ்வளவுதான்....
1970
புத்தகத்தை விட்டாச்சு எப்ப பாரு transistor radio அதுல இந்த இலங்கை வானொலி 12 மணி நேரமும் காபி கடை மாதிரி ஒரே சத்தம்..இளையராஜாவா msv யேன்னு சண்ட.. ஜானகியா லதா மங்கேஷ்கர் யார் நல்லா பாடறாங்கன்னு ஒரே இம்சை.. ஒரு பக்கம் ஹிந்தி பாட்டு ஒரு பக்கம் தமிழ் பாட்டு...
1980
புதுசா வந்திருக்கிற இந்த டிவியை போட்டு உடைச்சிடணும் மழை காலத்துல கோடு கோடா கோர்ன்னு ஒரே சத்தம்... வராத ரூபவாஹினி யை கூட்டிட்டு வர்றேன்ன்னு பாதி நேரம் மொட்டை மாடியில ஒத்த கால தவம்... வெள்ளிக்கிழமை விளக்கேத்தி வைச்சா இந்த செளகார் ஜானகி வெள்ளை புடவை கட்டிண்டு ஓன்னு அழற பாட்டா போடறானுங்க
1990
எவண்டா இந்த வீடியோ கேசட் ப்ளையரை கண்டுபிடிச்சவன் 18 மணி நேரம் கேசட் வாடகைக்கு எடுத்துட்டு வந்து வீட்டையே தியேட்டராக்கி வைத்திருக்காங்க... Evil dead எத்தனை வாட்டி போட்டு உயிரை எடுப்பிங்கடா ஓடி போயிடு வெளியில
2000
கேபிள் 📺 போட்டுட்டு எப்ப பாரு அதுக்கு முன்னாடியே உக்கார்ந்துக்கிறான்... சாப்பாடு டிபன் எல்லாமே ஹாலில்லேயே பாலசந்தர் சீரியல் திங்கட்கிழமை வருமே அது தான் பாக்கற மாதிரி இருக்கு புதன்கிழமை வர்ற விடாது கருப்பு செமயா இருக்கு என்ன இருந்தாலும் ரூபவாஹினி மாதிரி வருமா
2010
24 மணி நேரமும் இந்த இண்டர்நெட் டிலே என்ன பாக்கிறான்னோ படிக்கிறானா இல்லையானே தெரியல சாமி இப்படியே போனா எப்படித்தான் படிச்சு வேலைக்கு போயி ஹம்...
2020
Netflix, amazon , WebTV இந்த கர்மேந்திரியங்கள் வந்த பிறகு முகத்தை பத்து பேசறதேயில்லை சாப்பிடும்போது கூட மொபைலையே முறைச்சிட்டு இருக்கானுங்க...
இந்த வார்த்தைகள் ஒலிக்காத தமிழக இல்லங்கள் மிகவும் குறைவே...
உங்க வீட்டில எப்படிங்க....
படித்ததில் பிடித்தது.
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment