சென்னை பாரிமுனை
கச்சாலீஸ்வரர் ஆலயம்
1720 ஆம் ஆண்டு சென்னை தம்புச் செட்டி சாலைக்கு அருகில் உள்ள ஆர்மனியன் தெருவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். சமிஸ்கிரதம் மற்றும் இந்தியில் கச்சா என்றால் ஆமை என்று பொருள். இந்த ஆலயத்தில் ஒரு காலத்தில் விஷ்ணுவானவர் கூர்மாவதாரம் எடுத்தபோது ஆமை வடிவம் எடுத்து வந்து சிவபெருமானை வணங்கினாராம். அதனால்தான் அதன் பெயர் கச்சாலீஸ்வரர் என ஆயிற்று என்கிறார்கள்.
அந்த ஆலயம் அங்கு வந்தது எப்படி? அந்த காலத்தில் செட்டி நாட்டவர் அதிகம் வாழ்ந்த இடம் அது. அநேகமாக அனைத்து இடங்களும் பெர்ரி என்ற பிரிவு செட்டியார்களிடம்தான் இருந்தன. பெரும் செல்வந்தர்கள் அவர்கள். அருகில் உள்ள கந்தசுவாமி ஆலயத்தைக் கட்டியவர்களும் அவர்கள்தான். அப்படிப்பட்ட சமூகத்தினரில் தலையாட்டி செட்டியார் என்பவர் இருந்தார். அவர் அடிக்கடி காஞ்சிபுரம் சென்று சிவபெருமானை வணங்கி விட்டு வருவது வழக்கமாம். அப்படிப்பட்ட நிலையில் ஒரு நாள் பயங்கர மழை. செட்டியாரினால் காஞ்சிபுரம் செல்ல முடியவில்லை . மனம் வருந்தினார். ஈசனைப் பார்க்காமல் எப்படி இருப்பது? தூக்கம் வராமல் தவித்தவர் கனவில் சிவபெருமான் தோன்றி ‘என்னை நீ இங்கேயே பார்க்கும் வகையில் ஆலயம் கட்டி வழிபடு’ எனக் கூற அந்த ஆலயத்தை அந்த செட்டியார் நிறுவினார் .
ஆலயத்தில் விஷ்ணுவானவர் ஆமையாக சிவ பெருமானின் பாதத்தை வணங்கிக் கொண்டு இருக்க சிவலிங்கத்தின் பின்புறம் சிவபெருமான் இந்து தலைகளைக் கொண்டு சதாசிவ மூர்த்தியாக மனைவி மனோகரியுடன் காட்சி தருகிறார். அப்படிப்பட்ட சிவபெருமானின் வடிவத்தை வேறு எங்குமே காண முடியாது. அவருடைய மனைவி பார்வதி சுந்தராம்பிகை என்ற பெயரில் தனிச் சன்னதியில் இருக்கிறாள். வருடாந்திர உற்சவத்தின்போது கந்தசுவாமி ஆலய மூர்த்தி ஒரு மன்னனைப் போல அந்த நேரத்தில் உருமாறி காளிகாம்பாளுடன் ஊர்வலமாக வந்து கச்சாலீஸ்வறரை வணங்கி நன்றி கூற ஆலய தெப்ப உற்சவம் துவங்கி நடைபெறுமாம். வேத ஆகம முறையில் பூஜைகள் நடைபெறுகின்றன . ஆலயத்தில் பஞ்சமுக விநாயகர், முருகன், நாயன்மார்கள், நவகிரகங்கள் என அனைத்தும் உள்ளன. அங்குள்ள துர்காதேவியை ராகு காலத்தில் பூஜை செய்து புத்திர பாக்கியம் பெறவும், திருமணம் நடக்கவும் வேண்டுகின்றனர். ஆலயத்தில் என்னொரு அபூர்வ காட்சி என்ன எனில் தத்தாத்திரேயர் அனுசூயாவுடன் உள்ள காட்சி உள்ளது. போர்ணமியில் கால பைரவருக்கு நடத்தப் படும் பூஜை தீமைகளை விரட்டுமாம்.
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment