_*பக்குவம் அடைவது எப்படி ?*_ ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது. ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அனைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான். ஐயோ என் வீடு..!!! என் வீடு...!! என்று அலறினான். அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை “ என்று கூறினான். இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது. இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வே...
Posts
Showing posts from March, 2023
- Get link
- X
- Other Apps
படித்ததில்... மிகவும் ... பிடித்தது...! நீதி கதை ************* ஒரு அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன்.. அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான் அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும் அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான். திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம் ராஜ உடையில் விருந்து உண்பது மாதிரி எண்ணுகிற அளவுக்கு. தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அரண்மனை வாசலை அடைந்தான். வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம்..... 'என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே..???'' என்றார் அரசர் ஆமாம்... நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள...
- Get link
- X
- Other Apps
*தினசரி காலண்டரில்* *மேல்நோக்கு நாள்,* *கீழ்நோக்கு நாள் என்று* *போட்டிருக்கிறார்களே,* *அப்படியென்றால் என்ன* *தெரியுமா...?* தினசரி நாள்காட்டியை நாம் தினமும் பயன்படுத்தினாலும், அதில் உள்ள ஒருசில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். அந்த வகையில் தினசரி நாள்காட்டியில் உள்ள ஒரு விஷயம்தான் மேல் நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் போன்ற நாட்கள். இந்த நாட்கள் அனைத்து நாள்காட்டியிலும் இருக்கும். ஆனால் நாம் அதை பொதுவாக, "மேல்நோக்கு" என்றால் "நல்ல நாள்" என்றும், "சமநோக்கு" என்றால் *சுமாரான நாள்"எனவும், "கீழ்நோக்கு நாள்" என்றால் "கெடுதலான" நாளாகவும் எண்ணி அந்த நாட்களில் தவறானகாரியங்களில் ஈடுபடுகிறோம். மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இவை மூன்றும் அன்றைய தின நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன. நட்சத்திரங்கள் மொத்தம் 27 இவைகளை நம் முன்னோர்கள் ராசிமண்டல அடிப்படையில் மூன்றாக பிரித்தனர். 1. "ஊர்த்துவமுக" நட்சத்திரம் 2. "அதோமுக" நட்சத்திரம் 3. "த்ரியமுக" நட்சத்திரம். ...