*தினசரி காலண்டரில்* *மேல்நோக்கு நாள்,* *கீழ்நோக்கு நாள் என்று* *போட்டிருக்கிறார்களே,* *அப்படியென்றால் என்ன* *தெரியுமா...?* தினசரி நாள்காட்டியை நாம் தினமும் பயன்படுத்தினாலும், அதில் உள்ள ஒருசில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். அந்த வகையில் தினசரி நாள்காட்டியில் உள்ள ஒரு விஷயம்தான் மேல் நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் போன்ற நாட்கள். இந்த நாட்கள் அனைத்து நாள்காட்டியிலும் இருக்கும். ஆனால் நாம் அதை பொதுவாக, "மேல்நோக்கு" என்றால் "நல்ல நாள்" என்றும், "சமநோக்கு" என்றால் *சுமாரான நாள்"எனவும், "கீழ்நோக்கு நாள்" என்றால் "கெடுதலான" நாளாகவும் எண்ணி அந்த நாட்களில் தவறானகாரியங்களில் ஈடுபடுகிறோம். மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இவை மூன்றும் அன்றைய தின நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன. நட்சத்திரங்கள் மொத்தம் 27 இவைகளை நம் முன்னோர்கள் ராசிமண்டல அடிப்படையில் மூன்றாக பிரித்தனர். 1. "ஊர்த்துவமுக" நட்சத்திரம் 2. "அதோமுக" நட்சத்திரம் 3. "த்ரியமுக" நட்சத்திரம். 1. ரோகிணி, 2. திருவாதிரை, 3. பூசம், 4. உத்திரம், 5. உத்திராடம், 6. திருவோணம், 7. அவிட்டம், 8. சதயம், 9. உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும் "ஊர்த்துவமுக" நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள் "மேல்நோக்கு நாட்கள்" எனப்படும். இன்னாட்களில்… "மேல்நோக்கி" வளர்கின்ற பயிர்களுக்காக விதை விதைத்தல், மரங்களை நடுதல், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள்(வீடு), உயரமான மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும். இரண்டாவதாக, 1. பரணி, 2. கிருத்திகை, 3. ஆயில்யம், 4. மகம், 5. பூரம், 6. விசாகம், 7. மூலம், 8. பூராடம், 9. பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் "அதோமுக" நட்சத்திரங்கள் எனப்படும் . அதாவது… இந்த நட்சத்திரம் கொண்ட நாட்கள் "கீழ்நோக்கு நாள்" எனப்படுகிறது. இந்த நாட்களில்… கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், பூமிக்கடியில் வளரும் கிழங்கு வகைச் செடிகளைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது. மூன்றாவது வரும் 9 நட்சத்திரங்கள்: 1. அஸ்வினி, 2. மிருகசீரிஷம், 3. புனர்பூசம், 4. ஹஸ்தம், 5. சித்திரை, 6. சுவாதி, 7. அனுஷம், 8. கேட்டை, 9. ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் "த்ரியமுக" நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்கள் கொண்ட நாட்கள் "சமநோக்கு" நாட்கள் எனப்படும் இந்த நாட்களில்… வாகனங்கள், கார், பைக் வாங்குதல், செல்லப்பிராணிகள், ஆடு, மாடு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல்(ஏறு) உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம். மேற்கண்ட நாட்களை நினைவில் வைத்துக் கொண்டால், எந்த நாளில் என்ன காரியங்கள் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை, எளிதாக அறிந்து கொள்ளலாம். இதுபோன்ற எளிமையான விஷயங்களை நாமே அறிந்து கொண்டு அந்த அந்த நாட்களுக்குரிய பணிகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். நமது முன்னோர் பல விஷயங்களை மிக நுணுக்கமாக அலசி ஆராய்ந்து அனுபவப் பூர்வமாக விளக்கியும் வைத்துள்ளனர். ஆனால் நாம்தான் அதை சரியாக பயன்படுத்தாமல், அலட்சியமாக விட்டுவிட்டோம். *இதுபோன்ற நல்ல சிறு தகவல்களை நமது* *சந்ததியினர்களுக்கு நாம் எடுத்துரைத்தால்* *அவர்களின் தொழிலுக்கும், வட* *வாழ்க்கைக்கும்* *மிக* *உறுதுணையாக இருக்கும்.*

Comments

Popular posts from this blog