Posts

 ⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️ கடன் தொல்லையில் இருந்து நம்மை காப்பார் ருணவிமோசனேஸ்வரர் திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து ருணவிமோசனேஸ்வரரையும் இங்கே சிவ துர்கையையும் விஷ்ணு துர்கையையும் தரிசித்து பிரார்த்தனை செய்தால் கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுத்து அருளிக்காப்பார் ருணவிமோசனேஸ்வரர் கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது கும்பகோணம். இந்த ஊருக்கு அருகில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்குதான் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சாரபரமேஸ்வரர். கடன் நிவர்த்தி ஸ்தலம் என்று போற்றப்படுகிற திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து, ருணவிமோசனேஸ்வரரை மனதார தரிசித்துப் பிரார்த்தனை செய்து வந்தால், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும் என்று போற்றுகிறார்கள். ’கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று கம்பர் பெருமான் கடன் போல் பெரிய பிரச்சினையும் துக்கமும் ஏதுமில்லை என்று எடுத்துரைத்துள்ளார். ‘எவ்வளவு சம்பாதிச்சும் கடன் தொல்லை கழுத்தை நெரிக்குதே’ என்று புலம்புகிறவர்களும் வருந்துகிறவர்களும் அவசியம் இந்தத் தலத்துக்கு வந்து
 கண் கலங்கிவிட்டேன் இந்த சரித்திர உண்மை கதையை படித்ததினால்... சோழப்பேரரசன் ராஜராஜசோழனின் அரண்மனை. ஒருநாள் மன்னனைப் பார்த்து ‘சோழப்பேரரசே கோவிலுக்காக கொடுத்த நன்கொடைகள் ஏராளம். இருந்தாலும், உங்கள் திருமுகத்தில் தீராத கவலை படிந்திருக்கிறதே என்ன காரணம்?’ என்றார் அமைச்சர். மன்னர் கண்மூடி யோசித்தார். நெடுங்காற்றை உள்வாங்கி சீராக மூச்சுவிட்டார். கண் திறந்தார். நிதானமான குரலில் பேசத்தொடங்கினார். ‘சோழப்பேரரசின் அடையாளம் இந்தப்பெருவுடையார் கோவில். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அழியக்கூடாது என்று தான் கவலைப்படுகிறேன். அரண்மனைகள் தனிச்சொத்து, ஆலயங்கள் மக்கள் சொத்து என்று கருதப்படுமாயின் மக்களுக்கும் இதில் பங்கிருக்க வேண்டும். சோழமண்டலத்தில் கடைக்கோடியில் சிற்றூரில் வாழும் மக்களும் இந்த ஆலயத்தின் பங்குதாரர்களாக மாற்றிவிடும் திட்டத்தைத்தான் சிந்தித்து கொண்டிருக்கிறேன்’ என்றார். திட்டம் என்ன மன்னா? அமைச்சர் கேட்டார்.  அதோ அந்த திருவிளக்குகள் செல்வந்தர்களின் நேர்த்தி கடன்களால் எரிகின்றன. தினந்தோறும் கோவில்களில் தீபங்கள் எரிய வேண்டும். அதற்காக ஆடுகளையும், மாடுகளையும் ஏழைகளுக்கு வழங்கப் போகிறேன். அதற்கு
 *அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்?* *அர்த்தமுள்ள இந்துமதம் ........கவியரசர் கண்ணதாசன்* *#அஷ்டமியும் நவமியும் .......* *அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது ? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா ? பகுத்தறிவு வியாதிகள் கேட்பார்கள்.* *நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல .* *நம் முன்னோர்கள் அஷ்டமி அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ? அதற்குக் என்ன காரணம் ?* *அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.* *கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது.* *ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா ? இல்லை !!!!* *பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம்.* *அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.* *நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர்
 *காலம் மாறிவிட்டது* முன் கடந்து போவோரின் *முகம்* காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் *எண்ணம்* எனக்கு புரியவில்லை. *தலை* தாழ்ந்தே எங்கும் பயணம். *தொடுதிரையை* தொட்டபடி *உள்ளங்கையில்* தான் உலகம். என் *கைபேசி* காதலியானாள்- நான் கட்டிய *மனையாள்* நெடுந்தூரம் போனாள்... உற்றாரும் உறவினரும் *Family* குரூப்பில், நண்பனும் அவனின் நண்பனும் *நட்பெனும்* குரூப்பில். *சாமக் கோழி* கூவிய பின்னும், *கொக்கரக்கோ* கேட்கும் முன்னும், *வாட்ஸ்சாப்பில்* மூழ்கலானேன் - *நிஜமெனும்* வசந்தத்தை *நிழலாலே* மறந்தும் போனேன். எவர் எவருக்கோ *பிறந்த நாள்* வாழ்த்து.. அடுத்தவர் *இழப்பிற்கு* துக்கச்சேதி. *Hi* என எவரோ அனுப்ப *Hai* என பதிலுரைத்தேன் - ஏனோ நான் பெற்ற பிள்ளை *'அப்பா*'என்றழைக்க, சற்றே புருவம் உயர்த்தி பார்வையாலே *சுட்டெரித்தேன்...* அடுத்தவரின், *Status* பார்த்து ரசித்தேன், *profile* பார்த்து வியந்தேன், *Picture Msg* பார்த்து லயித்தேன், *video* பதிவிறக்க ஆர்வத்தில். கை அலம்பியபின் யோசித்தேன். *நான் என்ன சாப்பிட்டேன்* என்பதை... *மாமன்* வீட்ட வெந்தியக் குழம்பு, *மாமி* பொறித்த அப்பளம், *தங்கை* வீட்டு தக்கா
 From WhatsApp ஒரே வரியில் அத்தனை தெய்வங்களையும் வர்ணிக்க முடியுமா? ஆம் .. முடியும் "  சிரமாறு உடையான் "  1. சிரம் மாறு உடையான் - தலையது மாறி       வேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்குறிக்கும் 2 . சிரம் ஆறு(6)உடையான்  - ஆறு முகம்     படைத்த சுப்பிரமணியத்தைக்குறிக்கும் 3 .  சிரம் ஆறு உடையான் - சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும் 4 . சிரம் மாறு உடையான் - சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம் பிரம்மாவைக்குறிக்கும் 5. சிரம் ஆறு(river) உடையான் - காவிரி ஆற்றில் தலை வைத்து சயனித்திருக்கும்    ஸ்ரீ ரங்கநாதரைக்குறிக்கும் ஆஹா! என்னே நம் மொழியாம் தமிழ்.. இதை சொன்னவர் செய்கு தம்பி பாவலர் எனும் ஒப்பற்ற தமிழறிஞர்
 மரகத லிங்கத்தின் சிறப்புகள் என்ன? தமிழகத்தில் மரகத லிங்கம் உள்ள கோயில்கள் விபரம்:                    மும்மூர்த்திகளில் ஒருவராக சிவபெருமானுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல சிவாலயங்கள் உள்ளன. பழமை வாய்ந்த ஒவ்வொரு சிவன் கோயிலும் ஒவ்வொரு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றன.விலை உயர்ந்த ரத்தினங்களில் மரகதம் ஒன்று. அப்படிப்பட்ட மரகத கல்லினால் செய்யப்பட்ட சிவ லிங்கம் உள்ள சில கோயில்கள் உள்ளன. மும்மூர்த்திகளில் ஒருவராக சிவபெருமானுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல சிவாலயங்கள் உள்ளன. பழமை வாய்ந்த ஒவ்வொரு சிவன் கோயிலும் ஒவ்வொரு தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றன. விலை உயர்ந்த ரத்தினங்களில் மரகதம் ஒன்று. அப்படிப்பட்ட மரகத கல்லினால் செய்யப்பட்ட சிவ லிங்கம் உள்ள சில கோயில்கள் உள்ளன. மரக லிங்கத்தின் சிறப்பு:- நவகிரகத்தில் இளவரசன் என அழைக்கப்படுவது புதன் பகவான். புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதத்தால் செய்யப்பட்ட சிவ லிங்கத்தை நாம் வழிபாடு செய்வதால் நாம் கேட்ட வரம் தருவார் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷன் சக்தி உண்டு. அப்படி புதனுக்கு உகந
 கடவுளைக் காண தேவைப்படும் கண்ணாடி !!!  ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கு...ம், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். “ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்” என்றான். “தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.” “ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?”  “தம்பீ, காண முயலுகின்றேன்.” “கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?” “இல்லை.” “கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?” “இல்லை.” “ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை; இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவி