Posts

#உளவியல் ஆலோசனைகள் நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், ஏனென்றால்.... 1. டிரெட்மில்லை ( TreadMill ) கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார். 2. ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர் 57 வயதில் இறந்தார். 3. உலக உடற்கட்டமைப்பு சாம்பியன் 41 வயதில் இறந்தார். 4. உலகின் சிறந்த கால்பந்து வீரர் மரடோனா தனது 60 வயதில் காலமானார். ஆனால்.. 5. KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில்தான் இறந்தார். 6. Nutella பிராண்ட் கண்டுபிடிப்பாளர் 88 வயதில்தான் இறந்தார். 7. சிகரெட் தயாரிப்பாளர் வின்ஸ்டன் 102 வயதில் தான் இறந்தார் 8. அபின் கண்டுபிடிப்பாளர் 116 வயதில் பூகம்பத்தில் இறந்தார். 9. ஹென்னெஸியின் உலகப் புகழ்பெற்ற பிராந்தி பிராண்டை கண்டுபிடித்தவர் 98 வயதில் இறந்தார் 10. MDH மசாலா கொண்ட மனிதர் 97 ஆண்டுகள் வாழ்ந்தார் பிறகு உடற்பயிற்சி ஆயுளை நீட்டிக்கும் என்ற முடிவுக்கு இந்த மருத்துவர்கள் எப்படி வந்தனர்? முயல் எப்பொழுதும் மேலேயும் கீழேயும் குதிக்கிறது, ஆனால் 2 வருடங்கள் மட்டுமே உயிர் பிழைக்கிறது. ஆனால் உடற்பயிற்சி செய்யாத ஆமை 400 வருடங்கள் உயிர் பிழைக்கிறது. எனவே, கொஞ்சம் ஓய்வெடுங்க
கிருஷ்ணார்ப்பணம் என்பதன் அர்த்தம்..!! ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில் அர்ச்சகரும், அவரிடம் வேலைபார்த்துவரும் சிறுவன் துளசிராமனும் காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள். துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி. கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு, அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான் ! ” கிருஷ்ணார்ப்பணம் ” என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் பறித்து, தொடுப்பான். பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான். கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்ட போனால்…..ஏற்கனவே ஒரு புதுமாலையுடன் கிருஷ்ணர் சிலை பொலிவு பெற்று இருக்கும். அதைப் பார்த்த அர்ச்சகருக்கு, இது துளசிராமனின் குறும்பாக இருக்குமோ என்று சந்தேகம். அவனைக் கூப்பிட்டு, "துளசிராமா!!!இதெல்லாம் அதிகப்ரசங்கித்தனம்; நீ மாலை கட்டவேண்டுமே தவிர, சூட்டக்கூடாது ! ” என்று கண்டித்தார். "ஸ்வாமி…! நான் சூட்டவில்லை ; கட்டிய மாலை
திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் ஊர் திருமணஞ்சேரி மாவட்டம் புதுக்கோட்டை இத்தலம் ஒரு காலத்தில் ராஜராஜ வளநாடு என அழைக்கப்பட்டது. இங்கு வசித்த வணிகர் ஒருவருக்கு அழகான மகள் இருந்தாள். இவளை மதுரையில் வசித்த தன் தங்கை மகனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார் வணிகர். ஆனால், அவன் இன்னொரு பெண்ணை காதலித்து திருமணமும் முடித்து விட்டான். இவ்விஷயம் தெரிந்தும், தங்கை மகனுக்கே மகளைக் கொடுப்பதென்ற முடிவில் இருந்தார் வணிகர். பெற்றவர் பேச்சை மீறாத அந்த பெண்ணும், கடவுள் சித்தப்படி நடக்கட்டும் என விட்டு விட்டாள். தினமும் தங்கள் ஊரிலுள்ள சுகந்த பரிமளேஸ்வரர் கோவிலுக்கு சென்று, சுவாமியையும், பெரியநாயகி அம்பாளையும் வணங்கி வந்தாள். இதனிடையே அப்பெண்ணின் பெற்றோர் இறந்து விட்டனர். அனாதையான அவள் பரிமேளஸ்வரர் சன்னதிக்கு சென்று அழுதாள். இறைவன் அவளுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து உதவ முடிவெடுத்தார்.  அவர் முதியவர் வடிவில் அங்கு வந்து, அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூற வந்த அவளது முறைப்பையனிடம், “அவள் உனக்காகவே பிறந்தவள். நீ இன்னொரு திருமணம் செய்திருந்தாலும் கூட, ஆதரவற்றவளாய் நிற்கிறாள். எனவே, நீயே அவளைத் திருமணம் ச
பவானி சங்கமேஸ்வரர் கோவில், திருநணா (கூடுதுறை) பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது. வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம். சுப்பிரமணியக் கடவுளாம் முருகனுக்கு அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில் சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம். சி
திருநெல்வேலி அருகே குடும்பத்தில் உள்ள அனைவரது தோஷத்தையும் மொத்தமாக நீக்க கூடிய, (Family-dosham-control-pariharam.) ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கும் முந்தைய கோவிலான*‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில்*பற்றி உங்களுக்கு தெரியுமா? திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அருகன்குளம் கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அருகன்குளம். இங்குள்ள பழைய கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தல வரலாறு சொல்கிறது. தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில், அருகம்புல் அதிகம் கொண்ட குளம் இருக்கிறது. இதனால் இந்தப் பகுதி ‘அருகன் குளம்’ என்று அழைக்கப்படுகிறது. ராமபிரான் வனவாசத்தில் இருந்தபோது, சீதையை ராவணன் கடத்தினான். சீதையை ராவணன் கடத்துவதை அருகன்குளம் பகுதியில் வைத்துப் பார்த்த ஜடாயு என்ற கழுகு அரசன், ராவணனை தடுத
கன்னியாகுமரி மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .(((இதை படிக்க 5'து நிமிடம் ஒதுக்குங்கள்))) நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"#நாவலன்தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை
வாழ்வை வளமாக்கும் வைகாசி விசாகம் வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாகக் கருதப்படுகின்றது. அன்றைய தினம் முருகப்பெருமானை உள்ளத்தில் நினைத்து வழிபட்டால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும். கந்தப்பெருமானின் சேவடியைப் போற்றி வணங்குவோருக்கு செல்வ நலம் அத்தனையும் கிடைக்கும். அள்ளிக் கொடுப்பதற்கு கரங்கள் அதிகமாக இருப்பதால் வரங்கள் அதிகம் கிடைக்கும். கூப்பிட்டதும் மற்றும் கும்பிட்டதும் பறந்து வந்து உதவி செய்ய மயில் வாகனம் அவரிடம் இருக்கின்றது. அவருக்குரிய திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். விசாகத் திருநாளன்று இல்லத்து பூஜையறையில் குத்து விளக்கேற்றி வைத்து அலங்கார மேடையில் விநாயகப் பெருமான் படம் வைத்து அருகில் அவரது தாய், தந்தையரான உமாமகேஸ்வரர் படத்தையும் வைத்து நடுநாயகமாக முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் கூடிய படத்தையும் வைத்துப் பாடல்கள் பாடி வழிபாடு செய்யலாம். முருகப்பெருமானுக்கு செய்யும் அபிஷேகங்களில் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் ஒவ்வொருவிதமான பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் செய்யும் செயல்களில் வெ