Posts

தேவையான மருந்து எப்போதும் மருந்தகங்களில் கிடைப்பதில்லை I. உடற்பயிற்சி என்பது மருத்துவம். ii விரதம் இருப்பது மருத்துவம். iii இயற்கை உணவே மருந்து. iv. சிரிப்பு ஒரு மருந்து. v. காய்கறிகளே மருந்து. vi. தூக்கமே மருந்து. vii. சூரிய ஒளியே மருந்து. viii. ஒருவரை நேசிப்பது மருத்துவம். ix. நேசிக்கப்படுவது மருத்துவம். x. நன்றியுணர்வு என்பது மருத்துவம். xi குற்றத்தை மன்னிப்பது மருத்துவம். xi தியானம் என்பது மருத்துவம். xiii. கடவுளைப் பற்றிய தத்துவங்களை படிப்பதும் மருத்துவம். xiv. பாடுவதும் ஆடுவதும் துதிப்பதும் மருத்துவம். xv சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதும் மருத்துவம். xvi சரியாகச் சிந்திப்பதும், சரியான மனநிலையுடன் இருப்பதுவும் மருத்துவம். xvii. தன்னை நம்புவதும் மருத்துவம் xviii. நல்ல நண்பர்கள் இருப்பதும் மருத்துவம். xix. தன்னை மன்னிப்பதும் மற்றவர்களை மன்னிப்பதும் மருத்துவம். இந்த மருந்துகளை போதுமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள், மருந்தகங்களின் மருந்து உங்களுக்கு அரிதாகவே தேவைப்படும்
*காலை வணக்கம்..* 💢💢💢💢 *கர்மா_என்பது_என்ன* ? ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்! அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்! அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்! சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்! நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்ற
ஆடி அமாவாசை 28_07_2022 ஆடி அமாவாசை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்குரிய தினமென்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதமிருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் முன்னோர் கூற்று. விரதம் சரி... அது என்ன கதை? அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமமிக்க அவன் வாரிசு இல்லாத காரணத்தால் மிகுந்த துயரத்திலிருந்தான். எனவே அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி வாக்கு, "உனது மகன் இளமைப் பருவத்தை எட்டும்போது இறந்துபோவான்" என்று கூறியது. அதைக் கேட்ட மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான்.
ராமேஸ்வரம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய 120 தகவல்கள்... 1. ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீபீணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே காணலாம். 2. ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அதிகார நந்தி வாகனம், விக்கிரகம், உற்சவர் ஆகிய மூன்று சிறப்புகளையும் பெற்று இருப்பது வேறு கோவில்களில் இல்லாத சிறப்பு. அதிலும் இந்த நந்தி வாகனம் முழுவதும் பொன்னாலானது. 3. பஞ்ச மூர்த்திகள் புறப்பாட்டின் பொழுது நந்தி தேவர், சுவாமிக்குப் புறங்காட்டாமல் சுவாமிக்குப் பின்புறமாக சுவாமியை முன்னோக்கியவாறு செல்வது இங்கு மரபு. 4. கோவிலின் முதல் பிரகாரத்தில் 144 விக்கிரகங்களும் இரண்டாம் பிரகாரத்தில் 17 விக்கிரகங்களும் பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கோவிலில் உள்ள 381 விக்கிரகங்களுக்கும் நாள் தோறும் பூஜை நடத்தப்படுகிறது. 5. வெள்ளிக்கிழமை இரவு மலைவளர்க் காதலி அம்மன் கொலு முடிந்து தங்கப் பல்லக்கில் மூன்றாம் பிரகாரத்தில் பவனி வரும் பொழுது மேல் கோபுர வாசலுக்கு அருகில் உள்ள மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் சிலைக்கு
*சம்பாத்தியம்:* பஸ் ஸ்டாண்டின் எதிரிலிருந்த அந்த ஓட்டலில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ருசி கண்டவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட வருவதால்தான் அப்படி. ஓட்டலுக்குள் புகுந்த சரவணன் அவனின் அப்பா அங்கு சமையல்காரராக வேலை பார்ப்பதால் நேராக சமையலறைக்குள் சென்றான். ஒவ்வொரு மாதமும் சம்பள நாள் அன்று மாலை சரவணனை ஓட்டலுக்கு வரச்சொல்லிவிடுவார். அன்று சம்பள நாள் என்பதால் வழக்கம் போல சரவணனும் ஓட்டலுக்கு போய் சமையல் அறைக்குள் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் உட்கார்ந்து அங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் தோசைக் கல்லில் சாதா, ரவை, ஆனியன் என்று ஆர்டர்களுக்கு தகுந்தபடி வார்த்துக்கொண்டு மறு பக்கம் இட்லி போணியிலிருந்து ஆவி பறக்கும் இட்லிகளை எடுத்துத் தட்டில் கவிழ்த்துக் கொண்டிருந்தார் அவனின் அப்பா. இடையிடையே அடுத்த நாள் காலை தயாராகவேண்டிய ஸ்பெஷல் ஆர்டருக்கு தேவையான சாமான்களுக்கான லிஸ்டை அவரின் உதவியாளருக்கு சொல்லிக்கொண்டிருந்தார். பார்த்துக் கொண்டிருந்த சரவணனால் இருக்க முடியவில்லை. பாவம் என்னை படிக்க வைப்பதுக்காக அப்பா இப்படி நெருப்பில் வேகிறாரே என்று நினைத்துக்கொண்டு முள்ளின் மே
*FUSED BULB* 🙊🙏 தெளிவு (What's App Share) நாராயணமூர்த்தி ஓய்வு பெற்ற உயர்நிலை IAS அதிகாரி. *ஆரவாரம் அதிகமான பணியில் இருந்து ஓய்வுபெற்றபின், தனது மகன் பெங்களூரில் வாங்கியிருந்த டீலக்ஸ் பிளாட்டில் குடியேறினார்.* அது சுமார் 2000 குடியிருப்புக்கள் கொண்ட மிகப்பெரிய ரிசிடென்ஷியல் காம்பளக்ஸ். *அதிகார தோரணையில் மிதந்து பழக்கப்பட்ட அவருக்கு இந்த ஓய்வான வாழ்க்கை நிறையவே சலிப்பையும், வெறுப்பையும் தந்தது.* செட்டிலாகி சில நாட்கள் ஆனபின் ஒருநாள் காலாற குடியிருப்பின் கீழ்தளத்தில் அமைந்துள்ள நீண்ட நடைபாதையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தார். இவரை யாருக்கும் தெரியாததால் எவரும் கண்டுகொள்ளவில்லை. *யாரிடமும் பேசாது விரக்தியோடு சில நிமிடம் நடந்துவிட்டு அங்குள்ள பூங்காவில் உள்ள பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தார்.* பெஞ்சில் சுமார் 80 வயதுக்கு மேற்பட்ட ஒருமுதியவரும் அமர்ந்திருந்தார். *அவர் அரைக்கை கதர்ச்சட்டை, கதர்வேஷ்டியுடன் ஒரு காங்கிரஸ் தியாகி போல் இருந்தார்.* சிறிதுநேரம் சென்றது. *பெரியவர் "நீங்கள் புதிசா குடி வந்திருக்கீங்களா" என வினவினார்.* அவ்வளவு தான்..😊 *மடைதிறந்த வெள்ளம் போல நாராயணம
விநாயகரின் ஆறுபடை வீடும்.. வழிபடுவதால் தீரும் பிரச்சனைகளும்… முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:- முதல்படை வீடு – திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் ‘அல்லல் போம் விநாயகர்’. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே ‘அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்’ என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும். இரண்டாம் படை வீடு – விருத்தாசலம் : இங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும். மூன்றாவது படைவீடு- திருக்கடவூர் : எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார் விளங்குகிறார். நான்காம்படை வீடு – மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் நான்காம்பட