Posts

*கந்த சஷ்டி* முருகப் பெருமானை போற்றி பாடப்படும் பாடல்களில் முதன்மையானது கந்தசஷ்டி கவசம். முருகப் பெருமானை தெரிந்த அனைவருக்கும் கந்தசஷ்டி கவசம் பற்றி தெரியும். 270 வரிகளை கொண்ட கந்த சஷ்டி கவச பாடல் பலருக்கும் மனப்பாடமாக தெரியும். சிலருக்கு முழுவதுமாக தெரியாவிட்டாலும், காக்க காக்க கனகவேல் காக்க...நோக்க நோக்க நொடியினில் நோக்க...தாக்க தாக்க தடையற தாக்க...பார்க்க பார்க்க பாவம் பொடிபட என்ற வரிகள் நிச்சயம் தெரிந்திருக்கும். முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீ
கங்கைக் கரையில் செருப்பு ரிப்பேர் செய்யும் ஒரு நல்ல கிழவன். தினமும் கங்காமாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவதோடு சரி. தண்ணீரை தொட்டால் கொன்று விடுவார்களே. தீட்டு பட்டுவிடுமாம். சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த தாழ்ந்த வகுப்பு மனிதன் தீண்டினால் புனிதம் கெடுமாம். இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் அந்த காலத்தில். ஒரு பண்டிதர் தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே வருவார். கங்கையில் இறங்கி நீராடுவர். அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார். ''எவ்வளவு பாக்கியசாலி அவர்'' என்று அவரை தூர இருந்தே இரு கரம் கூப்பி கிழவன் வேண்டுவான். அவனைப் பார்த்தாலே தூர நகர்வார் அவர். அவனோடு பேசுவார். ஒருநாள் அவரது செருப்பு அறுந்து விட்டது. அதை கிழவனிடம் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொன்னார். நன்றாக ரிப்பேர் செய்து கொடுத்தான். அவனருகே ஒரு அணா காசு விட்டெறிந்தார். அருகே வந்து தரமுடியாதே. அவன் வணங்கி ''சுவாமி நான் உங்களிடம் காசு வாங்க மாட்டேன். நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும் வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்யம்''. உன் கா
திருப்பதி தங்குமிடம். திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம். Tirumala Sri Kasimath, Ring road, Near S.V.Meseum, Tirumala - 517507 (A.P) Ph : 0877-2277316 திருமலையில் தங்குவதற்கு ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , பயன்படுத்தி கொள்ளுங்கள். கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம்.ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன. மூல் மட் மின்: +918772277499 0877-2277499. புஷ்பா மண்டபம் : 0877-2277301. ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317. உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187. ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316. ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் Ph-0877-2277302. ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை Ph: 0877-2277282. ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் Ph : 0877-2277370. ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419. ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-227739
*தர்ப்பணம் - தர்ப்பயாமி பற்றிய ஒரு ரகசியம்* தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள். தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று பொருள் கொள்ளலாம். ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ என்ற ஆராய்ச்சியாளர் நீர்ல் நேர்மறை சொற்களை பிரயோகித்தபொழுது நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு முறைமையுடனும் ஒழுங்குடனும் வரிசைப்படுத்தப்படுவதை கண்டார். அதேசமயம், எதிர்மறை சொற்களை அந்த நீரில் பயன்படுத்தியபொழுது அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக அமைந்ததைகண்டார். இந்த ஆராய்ச்சிதான் இந்த கட்டுரையின் அடித்தளம். தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது முன்னோர்களை முன்னிட்டு கூறும் பொழுது அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளை சென்று அடைகின்றது. நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் கலக்கின்றன. அதாவது, சந்தோஷமடையுங்கள் என்று நாம் கூறிய எண்ண அலைகள் ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன் வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன. அதீத உளவியல் (Para psychology) என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மரணத்த
*வேல் மாறல் - உண்மை சம்பவம்.* சின்மயா நகரை சேர்ந்த நடுத்தரக் குடும்பப் பெண் பாக்யலக்ஷ்மி (55). கணவர் திரு. சேது ராமன் (58). எளிமையான கட்டுக் கோப்பான குடும்பம். கணவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. பிள்ளைகள் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்கள். ஒரு காலை சமையல் அறையில் பிஸியாக இருந்த பாக்ய லக்ஷ்மி அவர்களுக்கு திடீரென்று தலை சுற்றியது. “அம்மா… நெஞ்சு வலிக்குதே…” நெஞ்சில் கை வைத்து ஹாலுக்கு வந்து ஃபேனை போட்டுவிட்டு சோபாவில் உட்கார்ந்தார். சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துவிட, கணவரும் பிள்ளைகளும் அலறியடித்துக் கொண்டு பாக்யலக்ஷ்மி அவர்களை மருத்துவ மனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள். அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் ஐ.சி.யு.வில் சேர்க்கப்பட்டார் பாக்ய லக்ஷ்மி. மருத்துவ மனைகளுக்கே உரிய PROCEDURES, TEST, SCANNING அனைத்தும் விறுவிறுவென நடந்தன. “அம்மா… அம்மா…” என்று பிள்ளைகள் ஒரு பக்கம் ஐசியு அறைக்கு வெளியே அழுது அரற்றிக் கொண்டிருக்க, கணவர் செய்வது அறியாது திகைத்து நின்றார். “டெஸ்ட் ரிப்போர்ட்டில் என்ன சொல்லப் போகிறார்களோ? ஆண்டவ. உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை!” என்றால் போத
*காசி கயா போன்ற புன்னிய ஷேத்திரங்களில் ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது* அப்போது அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதேவிட்டனர்... சிறிது நிதானமாகப் படியுங்களேன் .. உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும்.. உங்கள் தாயை நினைத்து..♥️♥️♥️♪♥️♥️♥️ கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள் *விஷ்ணு பாதம்* பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம். ''கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும். ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள
காசிக்குச் செல்பவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது? இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்:- காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்! அதன் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் என்ன? கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் தங்கலாமா? இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம். சிபாரிசுக் கடிதம் வேண்டுமா? அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது. முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:- Sri Kasi Nattukkottai Nagara Satram Godowlia, Varanasi - 221 001 (U.P) Telephone Nos: 0542 - 2451804, Fax No: 0542 - 2452404 (ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்) Naat Koat Satram Location Godowlia, Tanga Stanad Behind Sushil Cinema Varanasi கட்டணம் உண்டா? உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங