Posts

காசியை மிஞ்சும் ஒரு கோவில் தமிழகத்தில் எங்குள்ளது தெரியுமா ? இந்துக்கள் பலரும் வாழ்வில் ஒருமுறையாவது காசிக்கு செல்லவேண்டும் என்று நினைப்பதுண்டு. கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அதே போல காசிக்கு நிகரான, ஏன் காசியை விட ஒரு படி அதிகம் சக்தி கொண்ட ஒரு கோவில் தமிழகத்திலும் உள்ளது. அந்த கோவில் எங்கு உள்ளது, அதன் சிறப்புகள் என்ன என்று பார்ப்போம் வாருங்கள். புதுச்சேரி அருகில் திருகாஞ்சி என்னும் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம். காசியில் உள்ள கோவில் எப்படி கங்கை கரையோரம் அமைந்துள்ளதோ அதே போல ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம், சங்கராபரணி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ளது. சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு நிகராக போற்றப்படுகிறது. இந்த நதிக்கு கிளிஞ்சியாறு, செஞ்சியாறு, வராக நதி என்று பல பெயர்கள் உண்டு. இந்த கோவில் சங்கராபரணி நதிகரியல் இருந்தாலும் இங்குள்ள இறைவன் கங்கைவராக நதீஸ்வரர் என்று அழைக்கப்படுவதில் இருந்தே நாம் சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு ஒப்பானது என்று அறிந்துகொள்ளலாம் . www.agathiyarjanachithar.
*பக்தி உண்மை என்றால், எதுவும் சாத்தியமே..!* ஒரு ஊரில் யாருமில்லாத ஒரு ஏழைப் பெண் இருந்தாள். அவளிடமிருந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள். ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொண்ட அவர், அந்த பெண்ணிடம், “ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது” என்று கடிந்து கொண்டார். “மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. நான் வீட்டை விட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.” “என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே “சிவ சிவ’ன்னு ச
அஷ்டமி, நவமி என்றால் என்ன? - ஒரு நண்பரின் அருமையான பதிவு சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டு மனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவு படுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்து விட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள்.ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார். நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார். நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவ
🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿 எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு *தடங்கலாக இருந்த சொந்த ஊர்களை உதறித் தள்ளி விட்டு* வேகமாக ஓடினார்கள்.. பந்தயம் கடினமாக இருந்த போது வேகத்தை மேலும் கூட்ட தாய்மொழி தடையாக இருக்கவே அதையும் ஒதுக்கிவைத்து ஓடினார்கள்.. பின்னர் தர்மசிந்தனைகள், கடமை, கண்ணியம் கூட சுமைகளாகிப் போயின.. எனவே *அவை அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு* ஓட்டத்தைத் தொடர்ந்தனர்.. *உறவுகள் சுமையாக தொந்தரவாக* அவர்களுக்குத் தோன்றின.. எனவே *அவற்றையும் விட்டுத் தள்ளினார்கள் அல்லது வில(க்)கி ஓடினார்கள்..* இந்த நவீன மனிதர்களுக்குப் *பொருளாதார வசதி புகழ் வெற்றிகரமான வாழ்க்கை* என்ற அடங்காத வெறி மட்டுமே எஞ்சி உள்ளதால் பந்தயத்தில் வேக வேகமாக ஒடிக் கொண்டிருக்கிறார்கள்.. இனி அவர்கள் வீசி எறிய எதுவுமில்லை!.. *குடும்பங்கள் சிதறிக் கிடக்கின்றன...* மடிக்கணினித் திரை வழியாக பேரப்பிள்ளைகளைக் கொஞ்சும் பெரியவர்களை பெற்றெடுத்திருக்கிறார்கள், பந்தயத்தில் ஓடும் பிள்ளைகள்!... *குழந்தையின் பசிக்கு பாலூட்டவும் குளிப்பாட்டவும் நேரம் இல்லாத* இளம் அம்மா
*கந்த சஷ்டி* முருகப் பெருமானை போற்றி பாடப்படும் பாடல்களில் முதன்மையானது கந்தசஷ்டி கவசம். முருகப் பெருமானை தெரிந்த அனைவருக்கும் கந்தசஷ்டி கவசம் பற்றி தெரியும். 270 வரிகளை கொண்ட கந்த சஷ்டி கவச பாடல் பலருக்கும் மனப்பாடமாக தெரியும். சிலருக்கு முழுவதுமாக தெரியாவிட்டாலும், காக்க காக்க கனகவேல் காக்க...நோக்க நோக்க நொடியினில் நோக்க...தாக்க தாக்க தடையற தாக்க...பார்க்க பார்க்க பாவம் பொடிபட என்ற வரிகள் நிச்சயம் தெரிந்திருக்கும். முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீ
கங்கைக் கரையில் செருப்பு ரிப்பேர் செய்யும் ஒரு நல்ல கிழவன். தினமும் கங்காமாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவதோடு சரி. தண்ணீரை தொட்டால் கொன்று விடுவார்களே. தீட்டு பட்டுவிடுமாம். சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த தாழ்ந்த வகுப்பு மனிதன் தீண்டினால் புனிதம் கெடுமாம். இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் அந்த காலத்தில். ஒரு பண்டிதர் தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே வருவார். கங்கையில் இறங்கி நீராடுவர். அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார். ''எவ்வளவு பாக்கியசாலி அவர்'' என்று அவரை தூர இருந்தே இரு கரம் கூப்பி கிழவன் வேண்டுவான். அவனைப் பார்த்தாலே தூர நகர்வார் அவர். அவனோடு பேசுவார். ஒருநாள் அவரது செருப்பு அறுந்து விட்டது. அதை கிழவனிடம் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொன்னார். நன்றாக ரிப்பேர் செய்து கொடுத்தான். அவனருகே ஒரு அணா காசு விட்டெறிந்தார். அருகே வந்து தரமுடியாதே. அவன் வணங்கி ''சுவாமி நான் உங்களிடம் காசு வாங்க மாட்டேன். நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும் வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்யம்''. உன் கா
திருப்பதி தங்குமிடம். திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம். Tirumala Sri Kasimath, Ring road, Near S.V.Meseum, Tirumala - 517507 (A.P) Ph : 0877-2277316 திருமலையில் தங்குவதற்கு ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , பயன்படுத்தி கொள்ளுங்கள். கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம்.ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன. மூல் மட் மின்: +918772277499 0877-2277499. புஷ்பா மண்டபம் : 0877-2277301. ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317. உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187. ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316. ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் Ph-0877-2277302. ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை Ph: 0877-2277282. ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் Ph : 0877-2277370. ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419. ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-227739