Posts

_*பக்குவம் அடைவது எப்படி ?*_ ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது. ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அனைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான். ஐயோ என் வீடு..!!! என் வீடு...!! என்று அலறினான். அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை “ என்று கூறினான். இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது. இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வே
படித்ததில்... மிகவும் ... பிடித்தது...! நீதி கதை ************* ஒரு அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன்.. அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான் அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும் அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான். திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம் ராஜ உடையில் விருந்து உண்பது மாதிரி எண்ணுகிற அளவுக்கு. தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அரண்மனை வாசலை அடைந்தான். வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம்..... 'என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே..???'' என்றார் அரசர் ஆமாம்... நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள
*தினசரி காலண்டரில்* *மேல்நோக்கு நாள்,* *கீழ்நோக்கு நாள் என்று* *போட்டிருக்கிறார்களே,* *அப்படியென்றால் என்ன* *தெரியுமா...?* தினசரி நாள்காட்டியை நாம் தினமும் பயன்படுத்தினாலும், அதில் உள்ள ஒருசில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். அந்த வகையில் தினசரி நாள்காட்டியில் உள்ள ஒரு விஷயம்தான் மேல் நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் போன்ற நாட்கள். இந்த நாட்கள் அனைத்து நாள்காட்டியிலும் இருக்கும். ஆனால் நாம் அதை பொதுவாக, "மேல்நோக்கு" என்றால் "நல்ல நாள்" என்றும், "சமநோக்கு" என்றால் *சுமாரான நாள்"எனவும், "கீழ்நோக்கு நாள்" என்றால் "கெடுதலான" நாளாகவும் எண்ணி அந்த நாட்களில் தவறானகாரியங்களில் ஈடுபடுகிறோம். மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இவை மூன்றும் அன்றைய தின நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன. நட்சத்திரங்கள் மொத்தம் 27 இவைகளை நம் முன்னோர்கள் ராசிமண்டல அடிப்படையில் மூன்றாக பிரித்தனர். 1. "ஊர்த்துவமுக" நட்சத்திரம் 2. "அதோமுக" நட்சத்திரம் 3. "த்ரியமுக" நட்சத்திரம்.
ஒரு கற்றறிந்த குரு ஒரு 35 வயது திருமணமான இளைஞனை தனது சொற்பொழிவின் போது எழுந்து நிற்கச் சொன்னார். "நீங்கள் ஒரு கடற்கரையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு இளம் அழகான பெண் முன்னால் இருந்து வருகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?" அந்த இளைஞன் பதிலளித்தான் - "அவள் பார்க்கப்படுவாள், அவளுடைய ஆளுமையை நான் பார்த்து பாராட்டத் தொடங்குவேன்". குருஜி கேட்டார் - "அந்தப் பெண் முன்னேறிய பிறகு, நீங்களும் திரும்பிப் பார்ப்பீர்களா?" அந்த இளைஞன் சொன்னான் - ஆம், என் மனைவி என்னுடன் இல்லை என்றால் . (கூட்டத்தில் அனைவரும் சிரிக்கிறார்கள்) குருஜி மீண்டும் கேட்டார் - "அந்த அழகான முகத்தை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று சொல்லுங்கள்?" அந்த இளைஞன்,- "இன்னொரு அழகான முகம் தோன்றும் வரை 5-10 நிமிடங்கள் இருக்கலாம்" என்று பதிலளித்தார். மற்றும் புன்னகைத்தார் குரு ஜி பின்னர் அந்த இளைஞனிடம் கூறினார் - இப்போது கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் இங்கிருந்து செல்லும் போது, ​​நான் உங்களுக்கு ஒரு புத்தகப் பொட்டலத்தைக் கொடுத்தேன். உங்கள் வீட்டிலிருந்து 75
Image
ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்த போது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது. அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம். அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அவர் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம். அந்த ஆலயத்தில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது. அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு, பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே மொட்டையாக நின்று போனது. எத்தனையோ பேர் முயன்றும் அந்த கோபுரத்தைக் கட்ட இயலவில்லை. ஈசன
Good morning... *The Four Principles of Metaphysics* It is not important whether you are spiritual or believe in God .... But the four principles of metaphysics apply to all from the moment one is born and until our last breath !! The First Principle states: "Whomsoever you encounter is the right one"... This means that no one comes into our life by chance. Everyone who is around us, anyone with whom we interact, represents something, whether to teach us something or to help us improve a current situation. The Second Principle states: “Whatever happened is the only thing that could have happened"... Nothing, absolutely nothing of that which we experienced could have been any other way. Not even in the least important detail. There is no “If only I had done that differently, then it would have been different". NO .. What happened is the only thing that could have taken place and must have taken place for us to learn n evolve in order to move forward. Every s
*ஸ்ரீராமஜெயம்* *ருத்ராய_நமஹ* 🙏....... சென்னைக்கு அருகே உள்ள பூவிருந்தவல்லியில் அவதரித்த மகான் திருக்கச்சி நம்பிகள். அவர் காஞ்சி வரதராஜப் பெருமாளுடன் நேரே பேசும் பாக்கியம் பெற்றிருந்தார். ஒருமுறை அவர் வரதராஜப் பெருமாளுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்தார். அப்போது தலைமேல் ஒரு பாத்திரத்தோடு அங்கே வந்த அர்ச்சகர் திருக்கச்சி நம்பிகளிடம், “பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். இதைப் பார்த்துக் கொள்ளுங்கள். மடப்பள்ளிக்குச் சென்று புளியோதரையையும் எடுத்து வந்து விடுகிறேன்!” என்று சொல்லி விட்டு மடப்பள்ளியை நோக்கிச் சென்றார். அப்போது பெருமாள் திருக்கச்சி நம்பிகளிடம், “நம்பி! கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலை எடுத்து எனக்கு ஊட்டி விடுங்கள்!” என்றார். பெருமாளின் கட்டளையைச் சிரமேற்கொண்ட நம்பி, பாத்திரத்திலிருந்து சர்க்கரைப் பொங்கலை எடுத்துப் பெருமாளுக்கு ஊட்டினார். பெருமாளும் அமுது செய்தார். “ஆஹா! நன்றாக இருக்கிறதே! இன்னும் கொஞ்சம் தாருங்கள்!” என்று கேட்டார் பெருமாள். நம்பியும் எடுத்து ஊட்டினார். அதற்குள் புளியோதரையுடன் அங்கே வந்த அர்ச்சகர், பாத்திரத்