Thought for the day - Minimalism விளைவைத் தரும் மினிமலிசம்
Thought for the Day:
*'மினிமலிஸம்'*
நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை !
------------------
``எங்கப்பா என்னைவிட குறைவாத்தான் சம்பாதிச்சார்.
வீட்ல நாங்க நாலு பிள்ளைங்க .
நாலு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் பண்ணிட்டு,
கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, *கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.*
ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன்.
*ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல..."*
இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது.
*இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது.*
அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்;
பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்..!
*மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.*
_இப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர்தான் ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும்._
2009-ல் இருவருமே நிறைய சம்பாதிக்கிற ஹைக்ளாஸ் ஐ.டி பசங்க ! தங்களுடைய 30-வது வயதில் ஆறு இலக்க சம்பளம், காஸ்ட்லி கார்கள், சகலவசதி வீடுகள், பார்ட்டி, கொண்டாட்டம்
என வாழ்வில் எல்லாமே ஓகேதான்.
*ஆனால், ஏதோ குறைவதை உணர்கிறார்கள்.*
வெற்றிடம் இருந்துகொண்டே இருக்கிறது.
வாரத்தில் 80 மணி நேரம் உழைப்பதும், உழைத்த பணத்தில் எதை எதையோ வாங்கி வாங்கிக் குவிப்பதும் மகிழ்ச்சியில்லை என்பதை உணர்கிறார்கள்.
*மகிழ்ச்சி என்பது நுகர்வு கலாசாரத்தில் இல்லை என்பதை புரிந்துகொண்ட* *நொடியில் `மினிமலிசம்'* என்கிற கான்செப்ட் பிறக்கிறது.*
_இன்று நம்மைச் சுற்றி நுகர்வுக் கலாசாரம் பெருகி விட்டது._
*பொருள்களை வாங்குவதுதான் மகிழ்ச்சி, அதுவே சாதனை என்கிற கருத்து பரவி வருகிறது.*
உண்மையில், பொருள்களை வாங்குவதில் மகிழ்ச்சியில்லை; அதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது என்பதையே மறந்து கொண்டிருக்கிறோம்.
*இந்த மனநிலைகளுக்கு எதிராகக் கிளம்பியவர்கள்தான் ஜோஷூவாவும், ரியானும்.*
*_2009 தொடங்கி மினிமலிஸ வாழ்வை வாழும் இவர்கள், இன்று உலகெங்கும் இருக்கிற பல்வேறு பல்கலைக் கழகங்களில் மினிமலிஸ வாழ்வுமுறை பற்றி பாடமெடுக்கிறார்கள்._*
லட்சக் கணக்கானோர் இவர்களுடைய மினிமலிஸ வாழ்க்கை முறையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார்கள்.
நூல்கள், ஆவணப்படம், வலைப்பதிவுகள் என மினிமலிஸத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது இந்த இருவர் கூட்டணி.
*~மினிமலிஸம் என்றால் கஞ்சப்பிசினாரியாக வாழ்வது என்று எல்லோருமே நினைத்து விடுகிறார்கள்.~*
*எல்லாவற்றையும் விலக்கி விட்டு, துறவியைப்போல வாழ்வது என்றும் ஒரு கருத்து உண்டு. அப்படியெல்லாம் எதையும் துறக்கத் தேவையில்லை.*
*_மினிமலிஸம் என்பது அவசியமானவற்றுடன் அளவாக வாழ்வது._*
Source: Whatsapp Forward

Comments
Post a Comment