Why we cook specific Vegetables on Amavasya? Why we fast on Ekadasi?

Hi Friends,
Have you ever wondered why specific vegetables like #ashgourd,#plantains are cooked on #amavasya or #newmoonday?
Moon exerts a force on earth and water in general which is evident from the tides on newmoon and full moon day. (Brush 4th or 5th standard syllabus)
Since we are made up 70% of water and moon isn't partial, namakkum kadalulkum ore treatment.
On a full moon day moon's force is greater and everything gets pulled up. The reverse happens on New moon day. Everything gets pushed down.
Next time you have mood swings and feel like hitting your better half blame it on the moon😜.
Since brain also consists of 73% water, It is the most affected.
Since the moon's pull is downwards on New moon day, it is the best day to clear toxins from body. You give a slight push and moon will take care of the rest provided you eat properly.
Remember my ekadashi post? 4 days before full moon or new moon days is Ekadashi. If you avoid eating on Ekadashi your bowel will have less waste inside. So cleaning will be easy peasy.
Watery vegetables are cooked that day. Especially ash gourd. It helps to clean bowel and maintain hydration since water in your body will be pulled down. Ash gourd is very good for brain functioning. It is better to
eat it rather than odachufying (breaking)it and send people on skating mode😜 on the roads tomorrow.
#rawbanana contains a starch that is not digestible by the stomach. This acts as a food for the good bacteria that lives in our gut. They help you digest and assimilate food better.
So this fibre helps to eliminate the remnants of  mundhanal biriyani and last weeks parotta that is still hiding in the colon.
So makkaley, head straight to the shop and pick plantains and ash gourd. Cook it,eat it and enjoy good health.
Now that you know how notorious the moon is, stay calm and composed tomorrow.
There are a few more things that are followed on amavasai or new moon day.
*One should not cut nails on New moon day.  Since the life force stays near the ground level on amavasya,it is not advisable to cut nails. (http://swarnaprashana.org/why-you-shouldnt-cut-nails-during-new-moon-day-amavasya/)
*There is no need to draw kolam in front of the house.
* Oil bath should be avoided.
* Conjugal relations should be avoided.
*Avoid doing any heavy work.
It is better to rest well on a new moon day.
*

தமிழில்:

நாம் ஏன் சில குறிப்பிட்ட காய்கறிகளை அமாவாசை அன்று சாப்பிடறோம்னு தெரியுமா? வாழைக்காய், வெள்ளை பூசணிக்காய் போல தண்ணி நிறைஞ்ச நாட்டுக் காய்கறிகளை தான் அமாவாசையிலே சமைப்பாங்க.
இல்லாட்டி லைட்டா பலகாரம். வெங்காயம், இஞ்சி, பூண்டு, மசாலா பொருட்கள் எல்லாத்துக்கும் அன்னைக்கு ஹாலிடே.
இட்லி தோசை எல்லாம் அமாவாசை அன்னைக்கு மட்டும் தான் அந்த காலத்திலே.( எங்க வீட்டில் இன்னைக்கு இட்லி, தோசைன்னு தெரு பூரா டமாரம் அடிச்சிட்டு என்ஜாய் பண்ணும் அந்த காலத்து குட்டீஸ்)

சின்ன வயசிலே அமாவாசை, பவுர்ணமியில் நிலவின் ஈர்ப்பு விசையால் எப்படி கடல் அலைகளில் சீற்றம் வருதுன்னு படிச்ச ஞாபகம் இருக்கா? ( இல்லேன்னா இருக்கவே இருக்கு நம்ம கூகிள் பாட்டி. அதைக் கேளுங்க🙂)
நம்ம உடம்பிலே 70% தண்ணி தான். நிலா கடலுக்கு தனியா நமக்கு தனியான்னு  ஸ்பெஷல் டோக்கன் போட்டு வேலை செய்யாது. எல்லாருக்கும் ஒரே ட்ரீட்மெண்ட் தான். எங்கே தண்ணி இருக்கோ பவுர்ணமியில் மேலே இழுக்கும். அமாவாசையில் கீழே அமுக்கும். இப்போ தெரியுதா அமாவாசை, பவுர்ணமி ஆனாலே
 சில பேரை ஏன் இழுத்து போட்டு அடிக்கணும் போல கோவம் வருதுன்னு?😜
 உங்க தப்பே இல்லங்க. எல்லாம் உள்ளே போன தண்ணி 🍷🥃செய்யற வேலை. நீங்க அக்மார்க் அப்பாவி தாங்க.😜
 எனக்கு தலையெல்லாம் மூளைன்னு இனிமே அலட்டற வேலை கூடாது. அங்கேயும் 73% தண்ணி தான். (தண்ணியடிக்காம எப்படி என் உடம்புல இவ்வளவு தண்ணின்னு டவுட்டா?)
 ஆக அமாவாசை, பவுர்ணமியானா ஏன் மனநலம் குறைஞ்சவங்க ஒரு மாதிரி ஆகறாங்கன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.
நல்லா இருக்கிறவங்க உணர்ச்சிகளே கொஞ்சம் தாறுமாறாக போகற வாய்ப்பு ஜாஸ்தி. அதனாலே வெங்காயம்,இஞ்சி, பூண்டுன்னு உணர்ச்சிகளை இன்னும் கொஞ்சம் பெட்ரோல் ஊற்றி ஏத்தற எதுவுமே அன்னைக்கு நோ, நோ தான்.

 ஆனா இந்த நிலாவோட அடாவடி வேலையக்கூட தனக்கு சாதகமா மாத்தினது தான் நம்ம முன்னோர் டெக்னாலஜி.
 உள்ளே ஏதாவது போட்டா தானே நீ மேல் இழுப்ப, கீழே தள்ளுவ? நான் நாலு நாள் முன்னாடி ஏகாதசி வர்ரப்பவே விரதம் இருப்பேன். "இப்ப என்னா பண்ணுவ இப்ப என்னா பண்ணுவ ன்னு" நிலாவுக்கே ஆப்பு வச்சவங்க நம்ம தாத்தா பாட்டீஸ்.
 சும்மா சொன்னா எந்த பயபிள்ளையும் கேக்காதுன்னு நல்லா தெரிஞ்சு தான் எல்லாத்தையும் சாமியோட கோத்து விட்டது.

அமாவாசை அன்னைக்கு கீழே தள்ளுவியா? ரைட்டு. அப்போ உள்ளே இருக்கிற வேஸ்ட் எல்லாம் உன்னைவிட்டே வெளியே தள்ளி விடரேன்னு நிலாவையே கூலி குடுக்காம ஓனிக்ஸ் கம்பெனித் தொழிலாளி ஆக்குன ஆல்இன்ஆல் தாத்தா பாட்டீஸ் எந்த யுனிவர்சிட்டிக்கும் போய்ப் படிக்கல.
வாழைக்காயை பொரியலோ பொடிமாசோ செஞ்சு, பூசணிக்காய் சாம்பார், மோர்க்குழம்பு இல்ல ரசவாங்கின்னு வச்சு சாப்பிட்டாங்க.
வாழைக்காய் ல கரையாத நார்ச்சத்து அதிகம். வாழைக்காயை சமைச்சு சாப்பிட்டா  (எண்ணெயில் குளிக்க வச்சு சிப்ஸ் போட்டு இல்ல)சுகர் ஏறாது. ஏன்னா அந்த சுகரை உங்க உடம்பாலே செரிக்க முடியாது. உங்க குடலிலே குடித்தனம் நடத்தும் நல்ல பாக்டீரியாக்களுக்கு தான் அது உணவாகும். கீழே போறப்பவே கையோட நீங்க முந்தாநேத்து சாப்பிட்ட பிரியாணி, போன வாரம் சாப்பிட்ட பரோட்டாவோட மிச்சம் மீதி எல்லாத்தையும் வம்படியா கீழே இழுத்திட்டு போகும் வாழக்காய். நிலா பிடிச்சு கீழே தள்ள உங்க குடல் வாட்டர் வாஷ் செஞ்ச கார் மாதிரி சும்மா பளிச்சுன்னு இருக்கும். வாழைக்காயில இருக்கிற கால்சியம் சத்து நம்ம உடம்பிலே எலும்புளை வலுவாக்கி விடும்.
கீழே இழுபடற தண்ணியை ஈடுகட்ட பூசணிக்காயிலே இருக்கிற தண்ணி உதவும்.
நம்ம மூளையோட நினைவாற்றலை அதிகரிச்சு, பட்டை தீட்டி வைக்க பூசணிக்காய் உதவும். ரொம்ப சாத்வீகமான காய். அதிலே நிறைய பாசிடிவ் வைப்ரேஷன் உண்டு.
அந்த காயோட அருமை தெரியாம அதை ரோட்டிலே உடச்சு அட்டூழியம் செய்யற நம்மள அந்த பூசணிக்காய்களோட ஆவி மன்னிக்கட்டும்.
என்னங்க எங்கே கிளம்பிட்டீங்க? பூசணிக்காயும், வாழைக்காயும் வாங்கவா? அப்படியே ஏன் இன்னைக்கு இதை சாப்பிடணும்னு உங்க வீட்டு குட்டீஸுக்கும் சொல்லிக்குடுங்க.
அப்படியே வேண்டாத எமோஷன் எது வந்தாலும் இது நிலாவோட சதி வேலைன்னு அமைதியா போயிடுங்க. உங்க நாளே சூப்பரா இருக்கும்.
அமாவாசை அன்று செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன.
*அன்று நகம் வெட்டக்கூடாது. அமாவாசை அன்று நமது உயிர் சக்தியானது தரை நிலையில் இருக்கும். அதனால் நகம் வெட்டக்கூடாது.(http://swarnaprashana.org/why-you-shouldnt-cut-nails-during-new-moon-day-amavasya/)
* வாசலில் கோலம் போட மாட்டார்கள்.
*எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.
*கணவன்,மனைவி உறவைக் தவிர்க்க வேண்டும்.
*கடினமான வேலைகளை செய்ய வேண்டாம்.
அமாவாசை அன்று ரெஸ்ட் எடுப்பது நல்லது.
Jaya Subramaniam

Comments

Post a Comment

Popular posts from this blog