Kadalai Paruppu Chutney - கடலைப்பருப்புச் சட்னி செய்வது எப்படி?

GramDhal Chutney Recipe/கடலைப் பருப்பு சட்னி:
ஒரு டீஸ்பூன் எண்ணெய் காய வைத்து ஒரு சிட்டிகை கடுகு, 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதனுடன் ஒரு நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். ஒரு பச்சை மிளகாயைக் கீறிச் சேர்க்கவும். அதனுடன் ஒரு சிறிய சுளைப் புளி, உப்பு சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விடவும். ஒரு கைப்பிடி கொத்தமல்லி, ஒரு மேஜைக்கரண்டி தேங்காய்த் துருவல் சேர்த்து ஆற வைத்து நன்றாக அரைக்கவும்.
1 டீஸ்பூன் எண்ணெய் காய வைத்து1/4 டீஸ்பூன் கடுகு, உளுந்து, 6கறிவேப்பிலை, ஒரு காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டிக் கலக்கவும். சுவையான கடலைப்பருப்புச் சட்னி தயார். இட்லி, தோசை, குழிப்பணியாரம், ஆப்பம் கூட தொட்டு சாப்பிட நல்லா இருக்கும்.
Heat a tsp of oil and add a pinch of mustard seeds and 1 tblsp urad dhal. Add 1 chopped onion and salt when urad dhal turns golden. When onion turns pinch add 2 slit green chillies and a small piece of tamarind. Saute well and switch off. Add a handful of coriander leaves, 1 tblps grated coconut, and allow it to cool. Grind it to a chutney. Heat a tsp of oil and add 1/4 tsp each of mustard and urad dhal, 6 curry leaves and a red chilli. Add this tempering to the chutney and mix well. This goes well with Idly,dosa,aappam,kuzhipaniyaram and all other tiffin items.

Comments

Popular posts from this blog