Thought for the day - ஆலயங்களில் வழிபாட்டு முறை

கொரோனாவால் இன்று உலகமே பயந்து முடங்கியுள்ளது. கிருமித் தொற்றுக்களை பரவ விடாமல் தடுக்கும் வகையான நமது ஆலயப் பிரவேசத்தையும் வழிபாட்டு முறைகளையும் கவனியுங்கள், ஆச்சரியமான விஷயங்கள் புலப்படும். வழிபாட்டுக்கு சம்பிரதாயப்படி கால் கையினை கழுவிவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும், இதனால் நோய்பரவும் முதல் வழி தடுக்கப்படுகின்றது.

ஆலயத்தில் தீபத்தில் கையினை வைக்கும் பொழுதும் அக்கையினை கண்ணில் வைக்கும் பொழுதும் கிருமிகள் இருந்தால் செத்தே விடும், கற்பூரம் ஏற்றி கண்ணில் ஒத்துவதும் இதே தத்துவமே.

ஆம் கையினால் முகத்தை தொடாதீர்கள், கண்ணை மூக்கை தொடாதீர்கள் அடிக்கடி கழுவுங்கள் என மருத்துவர்கள் சொல்லும் வேளையில் தீப சுடரில் கைகளை காட்டி சூடேற்று அதை முகத்துக்கும் கொடு நோய் பரவாது என என்றோ சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

கர்ப்பக்கிரகத்தின் முன் வழிபாடு முடிந்ததும், கொடுக்கும் விபூதியினை நெற்றியில் பூசினால் அது கிருமி நாசினி , பசுஞ்சாண சாம்பல் இருக்குமிடம் கிருமி அண்டாது.

சாம்பிராணி புகையில் காற்றில் பரவும் கிருமி செத்துவிடுகின்றது, ஆலயமெங்கும் புகை பரப்பும் விஷயம் அதுதான்.

ஆலயமெங்கும் தீபம் ஏற்றப்படும் தத்துவம் இதுவே, அதுவும் நெய்யிலும் இன்னும் சில எண்ணெயிலும் எரியும் நெருப்பு கொடுக்கும் சக்தி விஷேமானது.

அங்கு தரப்படும் சில பொருட்கள் கலந்த தீர்த்தம் மருத்துவ குணம் வாய்ந்தது, சர்வ கிருமி நாசினி, குடித்தால் தொற்று நோய் எளிதில் அண்டாது, அதைக்கைகளில் தேய்த்து கொண்டால் நோய் தடுப்பு நிச்சயம்.

பிரசாதம் என தரும் தேங்காய் முதல் மிளகு கலந்த பொங்கல் வரை எல்லாமும் மருந்தே.

அது வைஷ்ணவ ஆலயமாக இருந்தால் துளசியும், அம்மன் கோவிலாக இருந்தால் கொடுக்கபடும் வேப்பிலையையும் விட சிறந்த தோய் தடுப்பு மருந்து இல்லை.

ஆலய மணி ஒலிக்க ஒலிக்க வழிபாடு நடத்துவது ஏன்? ஆலயமணியின் சில அதிர்வுகள் நுண்ணிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள், மெல்லிய எலக்ட்ரிக் ஷாக் சிகிச்சைக்குரிய அதிர்வினை அது கொடுக்கும், ரத்த ஓட்டம் சீர்படும்.

இசை ஒலிக்கபடும் தத்துவமும் இதுவே.

கோவிலில் எல்லோரும் வரும் இடம் விக்ரகங்களை அடுத்து அர்ச்சகர் என்பதால் விக்ரகங்களையும் அய்யரையும் எப்பொழுதும் மகா சுத்தமாக இருக்க சொன்னார்கள்.

அர்ச்சகர் தள்ளி நிற்பதும் அதிகம் தொட்டு பேச கூடா காரணம் இதுதான்.

அசைவம் உடல் வெப்பத்தை கூட்டும், ஆலயங்களில் கூடுதல் வெப்பம் நிலவும் என்பதாலும் அசைவ உணவினை உண்டவர்க்கு ஆலயத்தில் அனுமதி இல்லை என்றார்கள்.

அடிக்கடி காலையும் மாலையும்  விக்ரகங்களுக்கு அபிஷேகம்  ஏன் என்றால் , அக்காலத்தில் விக்ரகத்தை தொட்டு வணங்கும் வழக்கம் இருந்தது, பலர் தொட்டு செல்லும் நிலையில் நோய் பரவிவிடக்கூடாது என்றே அடிக்கடி நீரும் இன்னும் சில வஸ்துக்களும் இட்டு, சாம்பிராணியிட்டு சுத்தமாக்கி வைத்தார்கள்.

கற்பூரத் தீ கூட கிருமி அழிக்கும் தன்மை கொண்டதே, நறுமணப் பூக்களால் அலங்கரித்தார்கள், நல்ல மணம் கூட சில நல்ல விஷயங்களை கொண்டுவரும்.

திதி கொடுத்தல் இன்னும் சில விஷயங்களில் அர்ர்சகர் கையில் தர்ப்பை கட்டுகின்றாரே ஏன்? தர்ப்பையில் நோய் கிருமி பரவாது என்பதை அன்றே அறிந்திருந்தது நம் சமூகம்.

நம் முன்னோர்கள் எதையெல்லாம் செய்யச் சொன்னார்களோ அதெல்லாம் நோய் தடுப்பென்றும் எதெல்லாம் தீட்டு என்றார்களோ அதெல்லாம் நோய் பரப்பும் விஷயங்களே.
ஆலயங்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் நோய் தடுப்பு முறையினையும் அக்காலத்திலே மிக நுட்பமாக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளையும் பற்றி  வியப்பே மிஞ்சும்.

இங்கு எதுவும் மூட நம்பிக்கை அல்ல. எல்லாவற்றிற்கும் அறிவியல் பின்னணி உண்டு.

* அர்த்தமுள்ள  இந்து மதம்...  முத்தையா .. என்று அழைக்கும் அன்பன்..  கண்ணதாசன்.

Source: Whatsapp Forward

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips