Thought for the Day - மகிழ்ச்சி எங்கே உள்ளது?

நாம் ஊட்டிக்கு
போகலாம்...

கொடைக்கானலுக்கு
போகலாம்...

குடகுக்கு
போகலாம்...

குலுமனாலிக்கு
போகலாம்...

ஆனால்
'நம்மை விட்டு
நாம் போக முடியாது'.

நமது
அபிப்பிராயங்களை,
நமது
கவலைகளை,
நமது
நெஞ்சில் உள்ள
பதிவுகளை,
சுமந்து கொண்டு
செல்வதால்...

'சொந்த ஊருக்கு
திரும்புவதே சுகம்'
என்று மீண்டும்
திரும்ப வருகிறோம்.

நாம்
தெளிவாகவும்,
நிகழ் காலத்தில்
நிறைவு
கொள்பவர்களாகவும்,
சின்ன சின்ன
நிகழ்வுகளில்
திருப்தி
அடைபவர்களாகவும்
இருந்தால்...

ஒரு
பூவின்
மலர்ச்சியில்,
பறவைகளின்
கானங்களில்,
இயற்கையின்
எழில்களில்...

மகிழ்ச்சி
அடைபவராக
இருந்தால்...

இருக்கும்
இடத்திலேயே
இன்பமாக
இருக்க முடியும்
இறுதி நாள் வரை.

Source: Whatsapp Forward

Comments

Popular posts from this blog