Gram Flour Bonda Recipe:
Add one cup gram flour, 1/2 cup Rice flour required salt, 1/4 tsp fennel, 1 tsp ginger garlic paste, 1/2 tsp chilli powder,a pinch of baking soda, 1 tblsp curd, 1 finely chopped onion, a handful of finely chopped coriander and mint leaves, 10 finely chopped curry leaves to a mixing bowl. Mix everything well, add water little by little and make a thick and soft batter. Wet your fingers, take a small portion of the batter, and deep fry it in hot oil till golden in colour and crisp. This is a good tea time snack and will be ready in 10 minutes. This can be added to Morekuzhambu to prepare Bonda Morekuzhambu too.In case you want to omit ginger garlic paste, you can add 2 pinches of caraway seeds and 1/4 tsp asafoetida powder.
கடலை மாவு போண்டா:
ஒரு கப் கடலை மாவு, 1/2 கப் அரிசி மாவு, தேவையான உப்பு, 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், சிட்டிகை சோடா உப்பு, 1 டேபிள்ஸ்பூன் தயிர், 1/2 கைப்பிடியளவு பொடியாக அரிந்த புதினா, கொத்தமல்லி, பொடியாக அரிந்த 10 கறிவேப்பிலை இலைகள், நீட்டு வாக்கில் மெலிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1/4 டீஸ்பூன் சோம்பு, (இஞ்சி பூண்டு விழுதுக்கு பதில் இரண்டு சிட்டிகை ஓமம், 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்கலாம்) சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து தளர்வாகப் பிசையவும். கைகளைத் தண்ணீரில் நனைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். டீ, காபியுடன் 10 நிமிடத்தில் தயார் செய்யலாம். காய்க்கு பதிலாக மோர்க்குழம்பில் சேர்க்கலாம்.
நான் வேலைக்கு சென்ற காலத்தில், ஒரு நாள் என் சக அதிகாரியுடன், என் மேல் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, என் சக அதிகாரி சொன்னார், "ஸார், உங்க இரண்டு பேருக்கும் இரண்டு ஆம்பள பசங்க. கவலை இல்லை. எனக்கு இரண்டும் பொண்ணுகளா போச்சி" என்றார். அதற்கு என் உயர் அதிகாரி " வயதான காலத்தில், பையன் வீட்டுக்குப் போனால், எப்ப மருமக காஃபி கொடுப்பா, எப்ப டிபன் சாப்பிட கூப்பிட்டுவா, எப்ப சாப்பாடு போடுவான்னு சமயல் கட்டையே பார்த்துகிட்டே இருக்கனும். அதே, பொண்ணு வீட்டுக்குப் போனா, உரிமையா, சமயல் கட்டுக்குள்ளே போய், பசிக்குது , சாப்பிட எதாவது குடுன்னு கேட்கலாம்" என்று பதிலளித்தார். ஞாயமாகத் தான் எனக்குப் பட்டது அன்று. இன்று? நேற்று பெசண்ட்நகர் பீச்சில், வாக்கிங் போய் விட்டு, அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தேன். என் அருகில் இரண்டு பெண்மணிகள் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. அதன் சாரம்சம் கீழ் வருமாறு: ஒரு பெண்மணிக்கு இரண்டு பெண்கள். இரண்டு பேரும், திருமணம் முடித்து, ஒரு பெண் ஆஸ்திரேலியாவிலும், அடுத்த பெண் அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள். "இப்பத்தான்,
Comments
Post a Comment