Apara Ekadasi - Why should we fast?

இன்று ஆனி தேய்பிறை ஏகாதசி தினம் சார்வரி வருடம் ஆனித்திங்கள் 3 ம் நாள் புதன்கிழமை (17.06.2020) தேய்பிறை ஏகாதசி. இவற்றை செய்து மிகுதியான பலன் பெறுங்கள் சூரிய பகவான் சுக்கிரனுக்குரிய ரிஷப ராசியிலிருந்து புதன் பகவானுக்குரிய மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. ஆடி மாதம் பல சிறப்புகளைக் கொண்ட மாதமாக இருக்கிறது. பல ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட தினங்களை கொண்ட ஒரு மாதமாகவும் திகழ்கிறது. அப்படிப்பட்ட ஆனி மாதத்தில் மகாவிஷ்ணு எனப்படும் பெருமாள் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் வருகின்றது. இந்த ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் அபரா ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். வருடம் முழுவதும் வரும் ஏகாதசிகளில் மார்கழி மாதத்தில் வருகின்ற வைகுண்ட ஏகாதசி பிரதானமான ஏகாதசி திதி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக இந்த வருதினி ஏகாதசி தினம் இருக்கிறது. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த வருதினி ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது என வைணவ பிரிவு பெரியோர்கள் கூறுகின்றனர். முற்காலத்தில் மந்தத்தன் என்கிற அரசன் இந்த வருதினி ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து மிகச் சிறப்பான பலன்களை தன் வாழ்வில் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த அபரா ஏகாதசி தினத்திற்கு முன்தினம் இரவு வெறும் தரையில் படுத்துறங்க வேண்டும். அபரா ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் பாதாம் கீர் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம், பெருமாள் லட்சுமி ஸ்தோத்திரங்கள், மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். பொதுவாக எந்த ஒரு ஏகாதசி விரத தினத்தன்றும் காலை முதல் இரவு வரை உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகுந்த பலன்களை தரும். எனினும் தற்காலத்தில் பலருக்கும் வேலை நிமித்தம் மற்றும் உடல்நிலை காரணமாக உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே அப்படிப்பட்டவர்கள் உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள் மற்றும் பால், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு இது ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம். ஏகாதசி விரத தினத்தன்று நீங்கள் மற்றும் உங்கள் வீட்டிலிருப்பவர்கள் போதை பொருட்கள் உபயோகித்தல், புலால் உணவுகள் சாப்பிடுதல் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் சிறப்பான பலன்களை தரும். மாலையில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும். பின்பு வீட்டுக்கு திரும்பியதும் பூஜையறையில் பெருமாளுக்கு நைவேத்தியம் வைக்கப்பட்ட துளசி இலைகள் மற்றும் பாதம் கீர் பிரசாதத்தை குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் சிறிதளவு பிரசாதமாக தந்து, விரதம் மேற்கொண்டவர்களும் அப்பிரசாதத்தை சிறிது சாப்பிட்டு, பெருமாளுக்கான ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். அபரா ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் பிரம்ம ஹத்தி தோஷம், பைசாசப் பிறவி, பிறரை நிந்தனை செய்தல் போன்றவற்றால் விளையும் பாபங்கள் நீங்குகிறது. முறையற்ற காம செயல்கள், பொய் சாட்சி, பொய் பேசுதல், போலி சாஸ்திரங்களை உருவாக்குதல், போலி வைத்தியனாக தொழில் செய்து மக்களை ஏமாற்றுதல் போன்றவற்றால் ஏற்படும் பாவங்களை இந்த அபரா ஏகாதசி விரதத்தை மகாவிஷ்ணுவை மனமொன்றி அனுஷ்டிப்பதால் அந்த விஷ்ணுவின் மகிமையால் நீங்கப் பெறுகிறது. சத்திரிய தர்மத்திற்கு விரோதமாக, போர் புரியாமல் போர்க் களத்திலிருந்து தப்பி ஓடும் சத்திரியர் நரகத்திற்கு செல்வர் என்பது நம்பிக்கை. அபரா ஏகாதசி விரதம் கடைபிடிக்கும் சத்திரியர்களுக்கு நரகத்திலிருந்து விடுதலையும், சொர்க்கம் செல்லும் புண்ணியமும் அளிக்கும் சக்தி பெற்றதாக இருக்கிறது. குருவிடமிருந்து கல்வி கற்றபின், குருவை நிந்தப்பவர் நிச்சயம் நரகத்தை அடைவார் என்பது நம்பிக்கை. அபரா ஏகாதசி விரதம், அத்தகைய குரு நிந்தனை செய்த பாவங்களை நீக்குவதுடன், நன்மைகளை உண்டாக்குகிறது. மூன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், கார்த்திகை மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், கங்கை நதி தீரத்தில் பித்ருக்களுக்கு பிண்டதானம் செய்தல் இவற்றால் கிடைக்கப் பெறும் புண்ணியத்தை, அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் பெறலாம். குரு பகவான் கோட்சாரத்தில் சிம்ம ராசியில் இருக்கும் காலத்தில் கோமதி நதியில் நீராடுதல், கும்ப ராசியில் இருக்கும் காலத்தில் ஸ்ரீ கேதார்நாத் பகவானை தரிசித்தல் மற்றும் பத்ரிகா ஆஸ்ரமத்தில் தங்குதல், மற்றும் சூரிய, சந்திர கிரகண காலத்தில் குருசேத்திரம் பூமியில் புண்ணிய நீராடுதல் ஆகியவற்றால் கிடைக்கப் பெறும் புண்ணிய பலனுக்கு நிகரான புண்ணிய பலன்களை அபரா ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் கிடைக்க பெறுவார்கள். மேலும் இந்த அபரா ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு பொருளாதார கஷ்ட நிலையை போக்கி, செல்வச் செழிப்பை உண்டாகும். வளமையான வாழ்க்கை அமையப்பெறுவர்கள்.

Comments

Popular posts from this blog