Believe in God
நம்பிக்கை வைங்க.........
ஒரு நாத்திகன் மலைச் சிகரத்தின் மீது 
நடந்து கொண்டிருக்கும் போது ..மாலை நேரமாகி விட்டது சற்றே மழை ஆரம்பித்தது,
கண்ணுக்கெட்டும் தூரத்தில் ஒரு குகை தெரிந்தது அதை அடைந்து விட்டால் இரவுபொழுது தங்கிவிடலாம் என நினைத்து சற்று வேகமாக ஏறினான் பலமான காற்றுவீசியது... ஆ...கால் தடுக்கி
கீழே பள்ளத்தில் 
விழுந்து விட்டான் ..
கும்மிருட்டு...
கீழே விழும்போது பாறை இடுக்கில் வளர்ந்திருந்த 
ஒரு மரக்கிளை கைகளில் தட்டுபட்டு  கெட்டியாக பிடித்துக் கொண்டான் ..
குளிர் காற்று 
வேகமாக வீசிக்கொண்டிருந்தது.கும்மிருட்டு எதுவுமே கண்ணுக்கு தெரியவில்லை.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த நாத்திகன் தனது  
நம்பிக்கையற்ற நிலையைச் சிந்தித்துப் பார்த்தான் ..
கீழே பெரும் பாறைகள்   மேலே ஏறிச்செல்லவும் முடியாது 
கிளையின் மீதான பிடிப்பும் நழுவிக் கொண்டிருந்தது ..
கடுமையான இருட்டில் எவ்வளவு ஆழமோ... விழுந்தால் உடல் சிதறிப்போகுமோ... என்ன செய்வது  தெரியவில்லை. 
அவன் நினைத்தான் நான் எப்போதும் கடவுளை 
நம்பியதில்லை ..
நான் இதில் தவறு செய்திருக்கலாம் 
இப்போது நம்புவதில் என்ன இழப்பு வந்து விடப்போகிறது ..
இப்படி நினைத்த அவன் கடவுளை 
அழைத்தான் ..
கடவுளே நீ இருப்பது உண்மையானால் என்னைக் காப்பாற்று 
நான் உன்னை நம்புகிறேன் ...
பதிலே இல்லை 
அவன் மீண்டும் அழைத்தான் ..
கடவுளே எப்போதுமே நான் உன்னை நம்பியதில்லை 
ஆனால் இப்போது என்னைக் காப்பாற்றினால் ..
நான் உன்னை இப்போதிலிருந்தே 
நம்புகிறேன் ..
மேலேயிருந்து ஒரு குரல் கேட்டது நீ என்னை நம்ப மாட்டாய் உனது தன்மை என்ன என்று எனக்குத் தெரியும் ..
கிளையின் பிடியில் நழுவிக் கொண்டிருந்த அவன் 
இதைக் கேட்டு ஆச்சரியமடைந்தான் ..
கடவுளே தயவு செய்யுங்கள் நான் உண்மையாகவே 
உங்கள் மீது நம்பிக்கை வைப்பேன் ..
இல்லை நீ என் மீது நம்பிக்கை வைக்கமாட்டாய் 
என்றுதான் எல்லோரும் கூறுகிறார்கள் ..நானும் அப்படித்தான் நினைக்கிறேன். 
அந்த மனிதன் கெஞ்சினான் 
வாதாடினான் ..
இறுதியாகக் கடவுள் கூறினார் 
சரி நான் உன்னைக் காப்பாற்றுகிறேன் ..
நீ அந்த மரக்கிளையை விட்டுவிடு ..
மரக்கிளையை விடுவதா என்னை முட்டாள் 
என்று நினைத்தீர்களா ..
என்று கேட்டான் அந்த நாத்திகன் ..
எந்தபதிலும் வரவில்லை..
நேரம் போய் கொண்டிருந்தது.கடுமையான மழை,பேய்காற்று சுழன்றடித்தது.குளிர் உடலை ஊசியால் குத்துவது போலிருந்தது.அவன் மரக்கிளையை விடவேயில்லை...இரவுமுடிந்து. 
விடிந்தது.  கைகள் கிளையைப்பிடித்தபடி குளிரில் விரைத்து போய் உயிரற்ற உடல் தொங்கிகொண்டிருந்தது,
கீழே தொட்டுவிடும் இடைவெளியில் பெரிய சமதள பாறைக்குமேல் அவன் கால்கள்  ஆடிக்கொண்டிருந்தன.அவனது கைகள் மரக்கிளையை 
இறுக பிடித்தபடி...............!!!!!!!!
அவர் சொன்னபடி விட்டிருந்தால்....!!
மீண்டும் கதையின் தலைப்பை பாடிங்க...
Comments
Post a Comment