கடவுளிடம் சரண் அடையுங்கள்!

Swami Yogi Ramsuratkumar once repeatedly quoted the famous words of Swami Ramthirtha. "A slave is a slave because he is free." "Swami I am not able to understand the meaning of this quote." Swami was silent for sometime. "A real slave shall not worry about his needs because all his needs shall be provided by his master and he can remain free. Likewise a real devotee who becomes a real slave submitting everything to Supreme Father, he doesn't need to worry about himself, Father shall take care of him and he shall remain free." Swami's words gave the hope and clarity. சுவாமி யோகி ராம்சுரத்குமார் ஒரு நாள் சுவாமி ராம்தீர்த்தரின் வெகு பிரசித்தி பெற்ற சொற்றொடரைச் திரும்பத் திரும்ப சொல்லியவண்ணம் இருந்தார். "ஒரு அடிமை, அடிமையாக இருப்பதாலேயே விடுதலை அடைந்தவனாகிறான்." "சுவாமி எனக்குப் புரியவில்லையே. அடிமை எப்படி விடுதலை பெற்றவன் ஆவான்?" சுவாமி சற்று நேரம் மௌனமாக இருந்தார். "ஒரு உண்மையான அடிமை தன் தேவைகளுக்காகக் கவலை அடையத் தேவையில்லை. அவனின் எஜமானன் அவனது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பான். எனவே அவன் கவலையற்று, நிச்சிந்தையாக சுதந்திரமாக இருக்கலாம். இதன் உட்பொருள், என் தந்தையிடம் நீ பூர்ண சரணாகதியடைந்த அடியவனாக இருந்தால் நீ உன்னை நினைத்துக் கவலையுறத் தேவையில்லை. என் தந்தை உனது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார். நீ கவலையற்று, நிம்மதியாக சுதந்திரமாக இருக்கலாம்." சுவாமி அழகாகச் சிரித்தார். சுவாமியின் விளக்கம் நம்பிக்கையையும் தெளிவையும் கொடுத்தது.

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips