மாட்டேன் - சிறுகதை

மாட்டேன் ! ( சிறு கதை ) 1958 அம்மா ! இதென்னம்மா பேரு ? புவனேஸ்வரின்னு ? ஸ்கூல்ல எல்லாம் சிரிக்கிறா, மீனா , கமலான்னு எத்தனை சின்ன பேரெல்லாம் இருக்கு. அதெல்லாம் விட்டுவிட்டு இவ்வளோ பெரிய பேரு. எடு கட்டய. ஏழு வயசு ஆகல . அதுக்குள்ள பேச்ச பாரு ! பாட்டி காதுல விழுந்தா துடப்பம் பிஞ்சுடும். போயி பாடத்த படி. 1963. அம்மா.ப்ளீஸ். ஒத்த பின்னல் வேண்டாமா. இரட்டை ஜடை போடும்மா. மாமி மாதிரி ஒத்த பின்னல். அதுல சாயம் போன ரிப்பன். அவமானமா இருக்குமா .ப்ளீஸ் .. என்னடி ஸ்டைல் வேணுமா இருக்கு. இரட்டை ஜடயாம். மண்ணாங்கட்டியாம். முன்னால போட்டுண்டு மினுக்கணுமாக்கும். போய்ப் பாரு அலமுவ. ஒன் வயசுதானே. எதாவது பேசராளான்னு. அவளப் பார்த்து கத்துக்கோ. வந்து சேர்ந்தயே எனக்குன்னு எங்கேயிருந்தோ. ...... 1965. அப்பா. ப்ளீஸ் படிக்கரேம்பா. நாந்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் . ஸ்காலர்ஷிப் கூட கிடைக்கும். என்ன படிக்கிறயா . அதெல்லாம் ஒன்னும் வேணாம். அம்மாவுக்கு ஒத்தாசையா இருந்து நாலு காரியம் கத்துக்கோ. பாட்டி கிட்ட ஸ்லோகம் கத்துக்கோ. வேணும்னா தையல் கற்றுக்கொள். அத்தை கிட்ட கூடை பின்ன கத்துக்கோ. படிக்கறதுல்லாம் வேண்டாம். அப்பா. அதெல்லாமும் பண்ணறேன். படிக்கவும் படிக்கிறேனே . கழுதை . சொன்னதையே சொல்லிண்டு நிற்காதே. எனக்கு கோபம் வரதுக்குள்ளே போ. வேலைய பாரு. ஏண்டி தைலா இவள என்னன்னு கேளு. அப்பாவை கோபப்படுத்தாதே. அவர் சொன்னபடி கேளு. பெரியவளானதுக்கு அப்புறம் ஒன்ன ஸ்கூலுக்கு அனுப்பிச்சதே உன் பாட்டிக்கு பிடிக்கல. அவா காலத்துல ஆறு வயசுல கல்யாணம் ஆயிடும். எனக்கெல்லாம் பத்து வயசு ஆயும் கல்யாணம் ஆகலயேன்னு எங்காத்தில விசாரப் பட்டா. உன் வயசுல எனக்கு இரண்டு குழந்தையே பொறந்தாச்சு. நீ என்னமோ படிப்பு அது இதுன்னு பேத்திண்டு இருக்க. அப்பா சர்வீஸ்ல இருக்கச்சவே ஒன்ன கரையேத்தினாதானே நாங்க கிருஷ்ணா ராமான்னு இருக்கலாம். 1968 அம்மா.புவனா. இந்த காப்பிய கொண்டு வந்திருக்கறவாளுக்கு கொடு. பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிக்கோ.... என் பொண்ணைப் பத்தி நானே சொல்லிக்கக் கூடாது. கெட்டிக்காரி. கோலமும் கைக்காரியமும் பம்பரமா செய்வா. பத்து பேர் வரட்டுமே . ஒரு மணி நேரத்துல இலை போட்டுடுவா. இந்த பூ வேலையெல்லாம் அவ போட்டது. பரம சாது. இன்னிக்கு வரைக்கும் அவ பெரியவா பேச்சுக்கு மறு வார்த்தை பேசினது கிடையாது..... கொஞ்சம் பூஞ்சையா இருக்காளேன்னு யோசிக்க கூடாது. கல்யாணம் ஆயி உங்காத்துக்கு வந்தா பெருத்துடுவா ..என்ன நான் சொல்லறது... என்னால முடிஞ்சத குறையில்லாம செய்யறேன்.. பெரியவா தட்டப்படாது..... அப்பா. பார்க்க ரொம்ப பெரியவனா இருக்காம்பா. பத்து வயசு பெரியவன். பிரைவேட் கம்பனியில சின்ன உத்தியோகம் வேணாம்பா..எனக்கு ... அடி செருப்பால. பிடிக்கலன்னு சொல்றியோ. பின்ன உன் பவுஷுக்கும் நான் செய்யும் சீருக்கும் கலெக்டர் மாப்பிளையா வருவான். நாலு கிளாஸ் படிச்சுட்டா உனக்கு பெரிய மேதாவின்னு நினைப்பு. கர்வம் பிடிச்சு அலையாதே. பேசாம சொன்ன இடத்துல கழுத்த நீட்டு. சொல்லிப்பிட்டேன். வாயாடிண்டு நிற்காதே. 1980 - 2000 ஏய். குழந்தை அழறான் பாரு.! அம்மா கூப்பிடறா பாரு ! எத்தன தடவ சொல்லியிருக்கேன்., அழுது வடிஞ்சுண்டு நிற்காதேன்னு. எனக்கு கேரட் பிடிக்காதுன்னு உனக்கு தெரியாதா.? எப்ப பாரு என்ன கூடை முறம்னு ... பிளாஸ்டிக் ஒயர் வீடெல்லாம் குப்பை.. அந்த ரேடியோவ நிறுத்தித் தொலை .. ஃபேனைப் போடு. வேகமா வை... ஃபேனை நிறுத்தித் தொலை. கரண்ட் பில் உங்கப்பனா கட்டுவான் ... டி.வி .ல என்ன எப்ப பாரு சினிமா . நகரு. நான் நியூஸ் கேட்கணும்... கிளம்பு.. என் முதலாளி வீட்டுக்கு சாப்பிடப் போகணும். . என்ன? ஜுரம் , தலைவலியா ? ஒரு மாத்திரையைப் போட்டுண்டு கிளம்பு. ஒண்ணும் உயிர் போயிடாது. அங்க போய் ராணி மாதிரி உட்கார்ந்துடாதே. அவாளுக்கு கூட மாட ஒத்தாசை பண்ணு அம்மா ! என் யூனி ஃபார்ம தோச்சு அயர்ன் பண்ணிடு. அம்மா இந்த டிராயிங் வரஞ்சு கொடு. இன்னைக்கு என் பிரண்ட்ஸ் வருவா. நல்ல டிபன் பண்னி வை. நான் சிகரெட் பிடிச்சேன்னு அப்பா கிட்ட சொல்லாதே. இஞ்சினியரிங் தான் படிப்பேன். டெல்லில வேலைன்னா போய்த்தானே ஆகனும். 2000 - 2010 அப்பா காரியம்தான் ஆச்சே. நான் போயாகணும். இல்லம்மா .உனக்கு குளிர் ஒத்துக்காது. இங்கேயே இரு. பணம் அனுப்பறேன். இங்கே இருக்கவா எல்லாம் மனுஷா இல்லயா... நீ சொல்லற பெண்ணை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். என் பாஸின் பெண் அவளதான் செஞ்சுப்பேன். என்ன ஜாதியா இருந்தா என்ன. அவதான் கரெக்ட். எனக்கும் நல்லது. என் ஃப்யூச்சருக்கும் நல்லது. ஆமாம் நான்வெஜ் சாபிடறவாதான். நானும் சாப்பிடறதுதான்.... அமெரிக்கா போறேன். நல்ல வேலை இரண்டு பேருக்கும். நீ தனியா இருக்க முடியாது .. விழுந்து கிழுந்து வச்சே, அங்கேயிருந்து வர முடியாது. பேசாம ஹோமுக்கு போயிடு. சேர்த்துடறேன். பணம் அனுப்பறேன். இந்தியா வரப்ப பார்க்கறேன். சொன்னபடி கேளு. இந்த வீட்டை விற்று பணத்தை பேங்கில போடு. ஹோம் செலவுக்கு ஆகும். அப்பா நல்ல வேளையா உனக்குன்னு வைச்சுட்டு போயிருக்கார். பென்ஷனா ஒண்ணா ? 2011 - 2020 பத்து வருஷம் ஓடிப் போனதே தெரியல. இந்த பத்து வருஷம்தான் எனக்கு பொற்காலம். என் விருப்பப்படி உறங்கி ,எழுந்து , வேலை செய்து , பாடி பாட்டு கேட்டு , .... தபாலில் எம்.ஏ.வரை படித்து , ஓவியம் வரைந்து , பேஸ் புக்கில் எழுதி , பலர் கருத்துகளை கேட்டு , என் கருத்துக்களை சொல்லி, எனக்கு பிடித்த கட்சிக்கு ஓட்டு போட்டு அடடா. உலகத்தில் இவ்வளவு விஷயங்களா இருக்கின்றன ! ! காற்று இவ்வளவு சுகமாகவா வீசும்.!! எவ்வளவு சந்தோஷங்கள் இருக்கு.!! இந்த பத்து வருஷத்துல அவன் நான்கு தடவை நேரில் வந்தான். அவளை அழைச்சுண்டு வந்ததே இல்லை. நல்ல கலர் .என்னாட்டம். எங்கேயோ நன்னா இருக்கட்டும். அவனுக்கு ஒரு பையனாம். பார்த்ததே இல்லை. ஜூன் 10 . 2020. ரித்திக் ! Tell hai to grandma! அம்மா.! இவன்தான் உன் பேரன். ஐந்து வயசு. வெரி ஸ்மார்ட் பாய். உன்னை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். நேர்ல பாக்கலைன்னா என்ன., போட்டோல பார்த்து இருக்கான்.. அவளும் வந்திருக்கா.. ஹோட்டல்ல இருக்கா. நாளை கூட்டிண்டு வரேன். அம்மா எதுக்கு வந்தேன்னா. அவளுக்கு வேற இடத்துல வேலை எனக்கு வேற இடத்துல வேலை.. இரண்டு பேருக்குமே வீட்டிலிருந்து முன்னூறு கிலோ மீட்டர். நான் அடிக்கடி.. மாதத்தில் பத்து பதினைந்து நாட்கள் டூர். டூருன்னா வேற வேற தேசம். இவனைப் பார்த்துக்கறது கஷ்டமாயிருக்கு. அதான் உன்னை அழைச்சுண்டு போலாம்னு. உனக்கு எல்லா வசதியும் செய்து தரேன் . சரின்னு சொல்லு .ஒரு மாசத்துல கூட்டிண்டு போறேன்.... அம்மா என்னம்மா பேரு இது... இரட்டை ஜடை போடும்மா.. மேல படிக்கிறேம்பா.. இவன் வேணாம்பா... ஜுரமா இருக்கே வரல.. டாக்டருக்கு படியேன் கிட்ட வேல பாரேன்... இவளைப் பண்ணிக்கோயேண்டா... இங்கேயே இருக்கேனே. ஹோம் வேண்டாம்.. இத்தனைக்கும் எல்லோரும் மறுப்பு சொன்னார்கள். எல்லார் சொன்னதையும் கேட்டேன். மாட்டேன்னு சொன்னதேயில்லை. சொல்லணும்னே தெரியல... முதல் தடவையா அழுத்தம் திருத்தமா , உறுதியா , கண்டிப்பான குரலில் சொன்னேன் மாட்டேன். வர முடியாது. இந்த கதையில் வரும் கதாநாயகி மாதிரி நம்மிடையே எத்தனையோ தாய் உள்ளங்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் 🙏🙏🙏. Source: Whatsapp Forward

Comments

  1. Romba super. Generally, most of the ladies in our generation are like these. They never have the opportunity to express their desires and wishes. Ovovoru kalakattathil oru uravukku adimaiyai avaludaya virupangal marakkapattum, marikkapattum poyirukkum. Avargalin saarpaga intha kathayein nayagi. 👏👌

    ReplyDelete
  2. Excellent. I don't see it as a story. This is the real situation for many. Great going. All the best ma

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips