Lockdown Joke

கவலையை மறந்து கொஞ்சம் சிரிங்க! “ஏங்க! துவரம் பருப்பு தீர்ந்து போச்சு!” “அதுக்குள்ளயா! போன வாரந்தானே மளிகை சாமான் வாங்கிட்டு வந்தோம்!” “நம்ம வீட்டிலே இன்னும் ஆறு லாக் டவுனுக்கு தேவையான சாமான் இருக்கு! கிச்சன்ல இருக்கிற டப்பா காலியாயிடுச்சு! ஸ்டோர் ரூமிலிருந்து எடுத்துட்டு வாங்க!” ஸ்டோர் ரூமில் எங்கே காலை வைப்பது என்று தடுமாறினேன். இரண்டு மூன்று அட்டைப் பெட்டிகளை திறந்து தலைகீழாகப் புரட்டி ஒரு வழியாக பருப்பு பாக்கெட்டை எடுத்து வந்தேன். “இது கடலைப் பருப்பு! இதை எடுத்த இடத்திலேயே வச்சுட்டு துவரம் பருப்பை எடுத்துட்டு வாங்க! இது அரை கிலோ பாக்கெட்! துவரம் பருப்பு ஒரு கிலோ பாக்கெட்! நல்ல வேளை, பாசிப் பருப்பை எடுத்துட்டு வராம போனீங்களே!” கண்ணாடி போடாமல் போயிருந்தால் அதைத் தான் எடுத்துக் கொண்டு வந்திருப்பேன். இந்த முறை பாக்கெட்டை ஒரு ஓரத்தில் பல்லால் கடித்து பிய்த்து விட்டு (கத்திரி எடுக்கப் போனா அவ பிச்சிடுவாளே!) ஒரு பருப்பை வாயில் மென்று துவரம் பருப்பு என்பதை உறுதி செய்து கொண்டு, கொண்டு போனேன். “இந்த பாக்கெட்டை எந்த பெட்டியிலிருந்து எடுத்துட்டு வந்தீங்க?” “இது து.பருப்பு தானே?” “அதுக்கில்லை, L-1ஆ L-2வான்னு தெரியணும்! லாக்டவுன்-1ல் வாங்கினதை முதல்ல செலவழிக்கணும். L-2, L-3ன்னு வரிசையா எடுத்து உபயோகப் படுத்தணும்.” “அதை எப்படி கண்டு பிடிக்கிறது?” “அட்டைபெட்டி மேலே மார்க் பண்ணியிருப்பேன்” “இரு!இரு! இதை எடுத்த பெட்டியை இன்னும் மூடலை. அதை வச்சு கண்டு பிடிச்சுடலாம்.” இப்ப வேற ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டேன். முதலில் எடுத்து வந்த கடலைப் பருப்பை அதே பெட்டியில் வைத்தேனா என்று தெரியவில்லையே! “என்ன! ஆடு திருடிய கள்ளன் மாதிரி முழிக்கிறீங்க! என்ன பண்ணிட்டு வந்தீங்க? வாங்க ஸ்டோர் ரூமுக்கு!” “நீ முன்னாலே போனா நான் பின்னாலே வரணுமே” என்று மனதிற்குள் பாடியபடியே போனேன். “என்னது, எல்லா பெட்டியும் கலைஞ்சு கிடக்கு?” அப்போது தான் நான் து.பருப்பு தேடுவதற்காக எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது மனதில் நிழலாடியது. வயிற்றைப் புரட்டுவது போல் ஒரு சங்கடம். சரணாகதியைத் தவிர வேறு வழியில்லை. “என்ன! எல்லாத்தையும் கலந்துட்டீங்க, அவ்வளவு தானே! எல்லா பெட்டியையும் எடுங்க! L-1லிருந்து வாங்கின பில் எல்லாரையும் எடுத்துட்டு வாங்க! என்னன்ன எடுத்தேன்னு எனக்கு தெரியும். அதை வச்சு மறுபடியும் பிரிச்சு வச்சுடலாம்.” “ஏம்மா! L-1 இரண்டு பெட்டி இருக்கே?” “நல்லா பாருங்க! அதுல ஒண்ணு UL-1.” “அப்படீன்னா?” “அன்லாக்-1” என்னை இந்த சிக்கலிலிருந்து அன்லாக் பண்ண யாராச்சும் வந்தா நல்லாயிருக்கும்! Source: whatsapp forward

Comments

Popular posts from this blog