மாவு மெஷின் - பிளாஸ்டிக் கவர் வேண்டாமே!

மாவு மெஷினிலே வீட்டுக்குத் தேவையான மாவெல்லாம் அரைக்கிற பழக்கம் இருக்கா? அப்போ நீங்க கவனமா இருக்க வேண்டிய விஷயம் இது தான். நம்மில் நிறைய பேர் பொருட்களைக் கொண்டு போக பிளாஸ்டிக் கவர்களை உபயோகிக்கிறோம். எடுத்துச் செல்ல சுலபமாக இருப்பது, மாவு துளி கூட வேஸ்ட் ஆகாமல் இருப்பது என இதில் வசதிகள் ஏராளம். ஆனால் சுடச்சுட வரும் மாவை சிறிது நேரம் வைத்திருந்தாலும் பிளாஸ்டிக் உருகி டையாக்சின் (Dioxin) என்னும் மிகக் கொடிய நச்சு வாயு உணவுப் பொருட்களுடன் கலக்கும். ஒவ்வொரு முறை பிளாஸ்டிக் சூடாகும் போதும் அதிலிருந்து 55 நச்சுப் பொருட்கள் வெளியாகின்றன. புற்றுநோய், மலட்டுத்தன்மை, வருவதற்கான முக்கியமான காரணம் பிளாஸ்டிக்கும் அதிலிருந்து வரும் டையாக்சினும்.Bisphenol -A (BPA) எனப்படும் கெமிக்கலும் பிளாஸ்டிக்கிலிருந்து வெளியாகிறது. இது நம் உடம்பிற்குள் நுழைந்ததும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் போல செயல்படும். அதிகமான ஈஸ்ட்ரோஜன் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும். பெண்களின் ஹார்மோன் சுழற்ச்சியை குளறுபடியாக்கும். சிறு குழந்தைகளை சீக்கிரம் பூப்பெய்தச் செய்யும். மார்பகப் புற்றுநோய் வரச்செய்யும். சத்துமாவுக் கஞ்சிக்கு மாவு அரைத்து அதை பிளாஸ்டிக் கவரில் கொண்டு வந்து எந்தப் பயனும் இல்லை. முக்கியமாக இதனால் குழந்தைகள், கர்ப்பமாக இருக்கும் பெண்கள், குழந்தைக்காகக் காத்திருக்கும் ஆண்,பெண் பாதிக்கப்படுவார்கள். மாவு அரைக்க துணிப்பை, அல்லது எவர்சில்வர் டப்பா கொண்டு போங்க இனிமே. பிளாஸ்டிக் வாளியோ, கவரோ வேண்டாம் ப்ளீஸ்!

Comments

Popular posts from this blog