நேர்மறை எண்ணங்களை சொல்லிக் கொடுங்கள்!

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂 *💗சிந்தனை கதை...* *எதை விதைக்கிறீர்கள்..!!* ஒரு சிறுவனுக்கு தப்பு பண்ணா சாமி கண்ணை குத்திடும் என்று சொல்லி கொடுக்கப்படுகிறது. அது உண்மையா பொய்யா என கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அந்த சிறுவனுக்கு வருகிறது. ஆனாலும், ஒரு வேளை உண்மையாக இருந்து சாமி கண்ணை குத்திவிட்டால் ..என பயந்து அதை பரிசோதித்து பார்க்காமல் இருக்கிறான்! பள்ளியில் அவனுடைய நண்பன் ஒருவன் ஆபீஸ் ரூமில் இருந்து பேனா திருடுகிறான். இதை இவன் கவனிக்கிறான். அவன் கண்ணை சாமி குத்துகிறதா என பார்க்கிறான் ...குத்தவில்லை! வீட்டில் போய் ஏன் குத்தவில்லை என்று கேட்கிறான், உடனே குத்தலன்னாலும் கொஞ்சநாள் கழிச்சி குத்திடும் என்று பதில் சொல்ல, கொஞ்சநாளைக்கு அவனை பின்தொடர்ந்து பார்க்கிறான். அவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை! வீட்டில் சொல்லி கொடுக்கப்பட்டதின் மேல் நம்பிக்கை போய்விடுகிறது. அவனை போல் இவனுக்கும் பேனா எடுக்க வேண்டும் என்று ஆசை வருகிறது. அதேபோல் ஆபீஸ் ரூமில் இருந்து பேனா திருடுகிறான்! இவனை வேறு ஒருவன் பார்த்து தப்பு பண்ணா சாமி கண்ணை குத்திடும் என்று சொல்கிறான், அதெல்லாம் சும்மாடா, அவனையும் ஒண்ணும் பண்ணல இப்போ என்னையும் ஒண்ணும் பண்ணல, உனக்கு வேணும்னா நீயும் போய் எடுத்துக்கோ என்று சொல்ல அவனும் திருட ஆரம்பிக்கிறான்! இது எதிர்மறை சிந்தனையின் விளைவு! அதே சிறுவனிடம் நேர்மறையாக சொல்லி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று பார்ப்போம். நல்லது பண்ணா நல்லது நடக்கும் என்று சொல்லிக் கொடுப்பதாக வைத்துக்கொள்ளலாம். அவன் சாலையில் பள்ளிக்கு போய்க்கொண்டு இருக்கிறான். வீட்டில் சொன்னதை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. இதை செய்வதில் எந்த பயமும் இல்லை. சாலையின் நடுவே ஒரு கல் இருக்கிறது. எடுத்து ஓரமாய் போடுகிறான்! பள்ளியில் பரிட்சை பேப்பர் கொடுக்கப்படுகிறது. வழக்கத்தை விட ஏழு மார்க் அதிகமாக வாங்கி இருக்கிறான். எப்படி உனக்கு ஏழு மார்க் அதிகமா வந்துச்சி என்று நண்பன் கேட்கிறான். நான் எப்பவும் போல தான் எழுதினேன் என்கிறான். பிறகு யோசித்து காலையில் ஒரு நல்லது பணணேன். ஒருவேளை அதுனால மார்க் அதிகமா கிடைச்சிருக்கும் என்று சொல்கிறான். அவனும் கூட நம்புகிறான். அவன் அடுத்த நாள் எதாவது நல்லது செய்ய வேண்டும் என்று சாலையில் கல் இருக்கிறதா என்று தேடுகிறான். அப்படி எதுவும் இல்லை. சாலை ஓரத்தில் ஒரு நாய்க்குட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது அதனிடம் போய் தன் பாக்கெட்டில் இருந்த பிஸ்கட்டை போடுகிறான். அடுத்த நாள் எதேச்சையாக சாலையில் ஒரு ரூபாய் கிடைக்கிறது. நாய்குட்டிக்கு பிஸ்கட் போட்டதால் தான் ஒரு ரூபாய் கிடைத்திருக்கிறது என்று நம்புவதோடு அதை எல்லோருக்கும் சொல்ல எல்லோரும் அப்படி செய்துபார்க்க ஆரம்பிக்கிறார்கள். இதை எல்லோரிடமும் சொல்கிறான். தினமும் எதாவது நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள்; நல்லது செய்துவிட்ட பின் நடக்கின்ற சின்னச்சின்ன விஷயங்களை கூட நல்லது செய்ததால் நடந்த நன்மைகள் என்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். தொடர்ந்து நல்லது செய்வதை பழக்கமாக்கி கொள்கிறார்கள்! மற்றவர்களுக்கும் நல்லது செய்வதை அவர்களை அறியாமல் பரப்பி விடுகிறார்கள். இது நேர்மறை சிந்தனை! இன்றைய காலகட்டத்தில் நிறைய எதிர்மறை சிந்தனைகளை தான் நாம் பிள்ளைகளிடம் வளர்த்துக்கொண்டு இருக்கிறோம் என்பதை சற்று நம் செயல்களை பின் நோக்கி யோசித்து உணர்ந்து கொண்டு அதை இனி திருத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளிடம் நாம் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது. நல்லா படிக்கலன்னா அவனை மாதிரி கஷ்டப்படுவே என்று சொல்லாதீர்கள். நல்லா படிச்சா இவனை மாதிரி சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்லுங்கள். எனவே பிள்ளைகளின் குழந்தைகளின் மனதில் நேர்மறை சிந்தனைகளை விதையுங்கள். சமூகத்தில் சிறந்த மனிதனாக உயரும், உயர்த்தும் நேர்மறை என்ற மந்திரத்தை அவர்கள் அறியாமலேயே அவர்களுக்குள் விதையுங்கள். 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂 Source: Whatsapp Forward

Comments

  1. Vamana Avatharathil, Bhagavan , damages SUKRACHARIYAR's eyes, because he was blocking the water coming from Kamandalam from Mahabali to Lord, to give three Steps as Danam! To indiacate this only: தப்பு பண்ணா சாமி கண்ணை குத்திடும் , Word Came.. IF this this story is told and then say தப்பு பண்ணா சாமி கண்ணை குத்திடும் , it is alright.
    Padmanabhan.J

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips