ஞான ரூபிணி!!
ஞானமே வடிவான அம்பிகையை நவராத்திரியில் வழிபடுவது மிகச் சிறப்பானது. நவராத்திரியின் தத்துவமே தீமைகளில் இருந்து விடுபட்டு, ஆனந்தத்தில் திளைத்து, ஞானத்தில் சேர்வது தானே?!
ஞானம் என்பதுதான் எல்லாவற்றுக்கும் எல்லை நிலம். அதை அடைந்த பிறகு, அடைய வேண்டியது என்று எதுவுமே இல்லை.
ஆனால், அதை அடைவதற்கு முன், மனித வாழ்வின் ஆசாபாசங்கள், போராட்டங்கள், கவலைகள், எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் என்று எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள்தான் எத்தனை?
கவலையினால் இளைத்தும், களைத்தும், தளர்ந்தும் போன மனத்துக்கு ஆறுதலும், தேறுதலும் தர அன்னையைத் தவிர வேறு யாரால் முடியும்?
அப்படி பக்தர்கள் பிரார்த்திக்கின்ற அனைத்தையும், அவர்கள் வேண்டியவண்ணம் அனுக்கிரகிப்பவள் ஸ்ரீ சாரதாம்பாள் என்கிறது இந்த ஸ்லோகம்.
‘யா சாரதாம்பேத்யபிதாம் வஹந்தீ
க்ருதாம் ப்ரதிக்ஞாம் பரிபாலயந்தி |
அத்யாபி ச்ருங்கேரிபுரே வஸந்தி
வித்யோத்தேண்பீஷ்டவரான் திசந்தி ||’
சாரதாம்பாள் என்கிற திருநாமத்தைக் கொண்டு துலங்குபவள்; தாம் அளித்த வாக்குறுதியை காப்பாற்றி வருபவள்; இன்றும் சிருங்கேரியில் வாசம் செய்பவள்; அவள் பக்தர்கள் பிரார்த்திக்கும் அனைத்தையும் அருள்பவளாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள் என்பது இதன் பொருள்....
Comments
Post a Comment