வீட்டிற்கு "பல்பு"வாங்குவது / போடுவது எப்படி...??


அடடடா...இது எங்களுக்கு தெரியாதா என்ன? என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் பற்றி ஆழமாக பேசினால், ஒரு மணிநேரம் கூட பேச அத்தனை விசயமிருக்கு.


சரி வாங்க, அதை பற்றி கொஞ்சம் இன்றைக்கு "லைட்டா" பேசுவோம்.


பொதுவாக நாம் கடைக்கு போய், நம் வீட்டிற்கு பல்பு வாங்கினால் 40 Watts, 60 Watts, 100 Watts என கேப்போம், இல்லையனில்,ஒரு பல்பு தயாரிக்கும் கம்பெனி பெயரை சொல்லி கேட்போம். ஆனால், இதைவிட ஒரு முக்கியமான விசயம் ஒன்று பார்க்க வேண்டும். அதுதான் 

Lumens (வெளிச்சம்) அளவு. இதன் அலகு (Unit) Lumenus Flux என்று குறிக்கப்படுகிறது.


உதாரணமாக, ஒரு படுக்கையறைக்கு (Bedroom) எவ்வளவு வெளிச்சம் தேவையனில், ஒரு சதுரடிக்கு (Sq.ft)குறைந்தபட்சம் 10Lumens அதிகபட்சமாக  20 Lumens க்குள் இருக்க வேண்டும். இது Standard


ஒரு 10×10 பெட்ரூம் எனில் 100 Sq.ft.


இதற்கு 1000 To 2000 Lumens தரும் அளவுக்கு பல்பு போட வேண்டும்.


இப்போது வீட்டிற்கு போடும் "பல்பு" களில் மார்கெட்ல எத்தனை வகை உள்ளது..??


1.Indicasant Bulbs(குண்டு பல்பு)


2. Tube Light


3.CFL Bulbs.


4. LED Bulbs


இதில் Indicasant Bulb (குண்டு பல்பு) ஒரு Wattக்கு 15 lumens தரும். 


Tube Light ஒரு Watt 50 Lumens தரும். 


CFL Bulb ஒரு Watt 60 Lumens தரும்.


LED Bulb ஒரு watt 100 Lumens தரும்.


இப்போது 10× 10= 1000Sq.ft  பெட்ரூம் க்கு  2000 Lumens தேவையனில்,


குண்டு பல்பு எனில்130Watts யும், Tube light எனில் 40 watts யும், CFL எனில் 32 Wattsயும், LED எனில் 20 Watts யும் போட வேண்டும். இந்த அளவுகளில் போட்டால் நமக்கு தேவையான வெளிச்சம் (Lumens) கிடைத்து விடுகிறது.


ஆனால், இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது Watts. இந்த அளவுதான் 'கரண்ட்"டை சாப்பிட கூடியது. இது அதிகமாக, அதிகமாக Current Unit அதிகமாக ஓடும். EB bill நமக்கு அதிகமாகும்.


ஆக, நமக்கு தேவை கரண்ட் பில் குறைவாக இருக்கனும், வெளிச்சம் அதிகமாக இருக்கனும். அதற்கு நாம் என்ன செய்யனும்? குறைந்த Watts இருக்கனும், ஆனால் அதிகம் வெளிச்சம் ( தேவையான) Iumens தரனும். 


இப்போது 1 Watts க்கு அதிகமாக 100 Lumens வரை தரக்கூடியது LED பல்புகள்தான். ஆக, நாம் தற்போது LED "பல்பு"பயன்படுத்துவதுதான் நல்ல பயன்.


சரி,ஒரு வீட்டிற்கு  எந்தெந்த அறை/ பகுதிக்கு எவ்வளவு Lumens அளவு இருக்க வேண்டும்.


1.போர்ட்டிகோ / நடைபாதை - 7~ 10 Lumens / per Sq.ft.


2. Living room ( hall), Bedroom - 10~20 Lumens/ Per Sq.ft.


3. Kitchen- 50~60 Lumens/ per Sq.ft


4. Bathroom, Washing Area, 60~70 Lumens/ Per Sq.ft.


சரி,இதை எப்படி கணக்கிடுவது..??


ஒரு சமையலறை 10'× 8 ' இருக்குனு வைத்து கொள்வோம். அதாவது 10× 8=80 Sq.ft. இதற்கு நமக்கு தேவையான Lumens (வெளிச்சம்) ஒரு Sq.ft க்கு 60~70 Lumens.


80 Sq.ft க்கு 80×60= 4800 Lumens தேவை.


இதற்கு LED Bulb போட்டால் எத்தனை Watts போட வேண்டும்? ஒரு Watt LED Bulb 100 Lumens (வெளிச்சம்)  தரும்.


அப்படினெனில், 4800 ÷ 100= 48 Watts தேவை. 


அந்த சமயலறைக்கு (Kitchen) 48 Watts LED Lightings அமைக்கபட வேண்டும்.


இங்கே, Watts, Company ஐ விட, Lumens தான் முக்கிய Role ஆக இருக்கிறது.


கொசுறு தகவல்:


எலக்ட்ரிக்கல் "டாபிக்" கை பொருத்தவரையில், 30 % தான் தியாரி மீதி 70% Calculation தான். இது மட்டும் கொஞ்சம் சரியாக தெரிந்தால், குறைந்த பொருட் செலவில், அதிக Options களும், புதுமைகளும், மின்சார பாதுகாப்புகளும் அருமையாக செய்துவிட முடியும். 

Source: Whatsapp forward


Comments

  1. Tq so much very useful. வாழ்க வளமுடன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog