செம்ம ஐடியா 😍😍


எங்கள் ஊரில் வீட்டுக் குடிநீர்க்குழாயில் எந்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடுவார்கள் என்று யாரும் கணிக்கவே முடியாது....... திடீரென இரவு 2 மணிக்கு தண்ணீர் திறந்து விடுவார்கள்....... ஆனால் யாருக்குமே தெரியாது.....


இரண்டரை மணி நேரம் தண்ணீர் 

வந்திருக்கும்......ஆனால் தூங்கிக் கொண்டிருக்கும் மக்கள் யாருக்குமே தெரிந்திருக்காது....... விடிந்த பிறகு பார்த்தால்..... வீட்டில் வாசல் முழுதும் தண்ணீர் தேங்கி..... குளம் போல் ஒரே சேறாகக் காட்சியளிக்கும்.


அடுத்தது இரண்டு நாட்களுக்கு பிறகு தான்..... குழாயில் தண்ணீர் வரும். அதுவும் எந்த நேரம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது......


நீண்ட கால இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு நாள் நீண்ட நேரமாக சிந்தித்துக் கொண்டிருந்தேன்.....அப்போது கிடைத்த மிக எளிய யோசனைதான் இது.....


அதாவது வீட்டுக் குடிநீர் குழாயில் எப்போது தண்ணீர் வரப்போகிறது என்றாலும்.....

அதற்கு கால்மணி நேரத்திற்கு முன்பே காற்று ஏராளமான அழுத்தத்தோடு பைப்பில் இருந்து வெளிவரத் துவங்கும்.....


அதனால் இந்த ஐந்து ரூபாய் பிளாஸ்டிக்  "விசிலை" பைப் மூடியில் (addoptor) துளையிட்டு  "anabond paste" கொண்டு ஓட்டிவிட்டேன். ....


வேலை முடிந்தது.....!!!


இப்போது குழாயில் குடிநீர் வந்து சேரும் முன்பாக   15 நிமிடங்கள் வெளிவரும் காற்றின் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது......(டவுன் பஸ் நடத்துநர் நம் காதுக்கு அருகிலே விசில் அடிப்பதைப்போல......)


இப்போதெல்லாம் எந்த நேரம் குழாயில் குடிநீர் வந்தாலும் எளிதாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.....


இதுபோன்ற குடிநீர்க்குழாய் பிரச்சினை இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.....100% வெற்றி......உறுதி...!!!


நாம் எதிர்கொள்ளும் எல்லா மிகப்பெரிய பிரச்சினைகளுக்கும் ஒரு மிக மிக எளிய தீர்வும் உண்டு.

Comments

Popular posts from this blog