*பித்ரு ஸ்துதி !*
1. இதை தினந்தோறும் காலையில்
2. தர்ப்பண ஸ்ரார்த்த தினத்தில்
3. அவரவருடைய ஜன்ம நட்சத்திர தினத்தில்
பாராயணம் செய்ய கிடைக்காதது ஒன்றுமில்லை.
பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு இதை பிரிண்ட் செய்து எல்லாருக்கும் கொடுக்கலாம்.
மாஹாளய பட்ச திதிகளிலும். தை அமாவாசையிலும் பாராயணம் செய்வது நல்ல பலன் கொடுக்கும்.
*பித்ரு ஸ்துதி*
ஸ்ரீபிரம்மா உவாச
ஓம் நம: பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே
ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே
ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச
நம: ஸதா ஆசு தோஷாய சிவ ரூபாய தே நம:
ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச
துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:
ஸம்பாவனீய தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:
தீர்த்த ஸ்னானதயோ ஹோம ஜபாதி பஸ்ம தர்சனம்
மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:
யஸ்ய ப்ரணாய ஸ்தவனாத் கோடிச: பித்ரே தர்ப்பணம்
அஸ்வமேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:
பலஸ்ருதி
இதம் ஸ்தோத்ரம் பிது: புண்யம் ப்ரயதோ நர:
ப்ரத்யஹம் ப்ராதருத்தாய பித்ரு ச்ரார்த்த
தினேபி ச
ஸ்வ ஜன்ம திவஸே ஸாக்ஷாத் பிதுரக்ரே ஸ்திதோபி வா
ந தஸ்ய துர்லபம் கிஞ்சித் ஸர்வக்ஞதாதி வாஞ்சிதம்
நாணாபி கர்ம க்ருத்வாதி ய: ஸ்தெளதி பிதரம் ஸுத:
ஸத்ருவம் ப்ரவிதாயைவ ப்ராயச்சித்தம் ஸுகீபவேத்
பித்ரு ப்ரீதி கரோநித்யம் ஸர்வ கர்மாண்யதார்ஹதி
*தமிழாக்கம்*
1. பணிவான நமஸ்காரங்கள். எமது பிறப்பிற்குக் காரணமான பித்ருக்களுக்கு தெய்வீக சக்தி நிறையப் பெற்றுள்ள உம் அருளாசிகள் எமக்கு நல்வாழ்க்கையையும் சந்தோஷத்தையும் தர நல்லோரால் போற்றப்படும் உம்மைப் பிரார்த்திக்கிறேன்
2. எல்லாவித யாகம் யக்ஞங்கள் வடிவில் உள்ளோரே..அனைத்து புனித தீர்த்தங்கள் வடிவில் இருப்போரே ..காருண்யக்கடலே பித்ருக்களே நமஸ்காரம்.
3. நமஸ்காரங்கள். எளிதில் சந்தோஷமடைந்து அருளவல்ல பித்ருக்களே சிவ வடிவே எம் தவறுகள் யாவையும் மன்னிக்க வேண்டுகிறேன். அருளாசி தாரும்! வாரும்!
4. கிடைத்தற்கரிய மானிடப் பிறவி உமதருளால் எமக்குக் கிட்டியது. இது எமக்கு தர்மம் செய்ய வழிவகுத்தது. உமக்கு நன்றியுடன் நமஸ்காரங்கள்.
5. தீர்த்தயாத்திரை, பூஜை புனஸ்காரங்கள் இந்த உடலால் செய்ய அருளிய குருவுக்கும் குருவான பித்ருக்களுக்கும் நமஸ்காரம்.
6. உம்மை துதிப்பது தர்ப்பணம் செய்வதற்கு சமமானது. நூறு அஸ்வமேதயாகம் செய்த பலனை எமக்குத் தரவல்லது. நன்றியுடன் மீண்டும் இப்புனித வேளையில் புனித தினத்தில் அடியேன் துதித்து உம் ஆசியை மீண்டும் வேண்டுகிறேன்
Source: Whatsapp Forward
Comments
Post a Comment