😇 *முடிந்தால்* *சிரிக்கவும்* ...😇


Relax, please!!


ஊட்டி, கொடைக்கானலுக்கு கல்யாணமானவுடன் போலாம்னு கனவு கண்டு, அப்புறம் கைல ஒரு குழந்தையடன் செல்பவர்கள் தான் மிடில் க்ளாஸ். 


           @@


ஹாலிவுட் படங்களில் மதுஅருந்தும் காட்சியில் 'எச்சரிக்கை வாசகம்'போடுவதில்லையே, ஏன்?

பாரின் சரக்கு உடம்புக்கு ஒன்னும் செய்யாது என்பதனால்


            @@


"மக்களுக்காக ஏதாவது செய்தாக வேண்டும்" - ரஜினி


அண்ணே, இடையில் 'க்' தெரியாம வந்திருச்சு


            @@


சிம்பு டான்ஸ் ஆடும்போதெல்லாம், யாரோ முன்னால நின்னுக்கிட்டு 'அப்பாவுக்கு சீரியஸா இருக்கு, சீக்கிரம் ஆடிட்டு வா' னு அவசரப்படுத்துவாங்க போல   


                  @@


'ஏங்க' என்பதற்கும் 'எங்க அது' என்பதற்கும் இடைப்பட்டவை வசந்த காலங்கள்!!


                 @@


நாவல் எத்தனைப் பக்கம் இருந்தால் என்ன? நமது தூக்கம் நாவலில் எத்தனாவது பக்கத்தில் மறைந்திருக்கிறது என கண்டுபிடிப்பதில் தான் சுவாரஸ்யமே உள்ளது


                    @@


முன்னெல்லாம் வெளியே கிளம்பும்முன் சகுனம் பார்ப்பார்கள். இப்போது சார்ஜ் புல்லாக இருக்கிறதா எனப் பார்க்கிறார்கள்.


                    @@


இப்பெல்லாம் அணுகுண்டு பாக்கெட்ல புஸ்வாணத்தையும் புஸ்வாணம் பாக்கெட்ல அணுகுண்டையும் நம்ம சிவகாசிகாரனுவ மாத்தி வைக்கிறாய்னுவ போல்ருக்கு.


                    @@


கோடி செலவு செய்து பங்களா கட்டினாலும் போனுக்கு டவர் இல்லை யென்றால் வெளியில்தான் வரவேண்டும்..


                   @@


இங்கிலீஷ் படம் பார்க்கும் போது ஒருத்தன் மட்டும் சத்தமா சிரிப்பான் பாருங்க; ஷேக்ஸ்பியருக்கு வாரிசுமா!!


                    @@


தோசை கல்லு உள்ளே இருந்தால்

உயர்தர ஹோட்டல்..

வெளியே இருந்தால்

சாதா ஹோட்டல்..


                   @@


வாக்கிங் போறது எளிதானது தான்...

வாக்கிங் போக எந்திரிக்கிறது தான்

கஷ்டமானது..


                   @@


உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள

தவிர யாருக்கும் வராது..


                  @@


ப்யூட்டி பார்லர் போன மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல ஃபீல் பண்ணுவாங்க பெண்கள்..

ஜிம்முக்கு போன அன்னிக்கே அர்னால்டு போல ஸ்டேட்டஸ் போடுவானுக நம்ம பசங்க!!


                   @@


குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்.. இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க்

செய்யல?'ன்னு கேட்டா அதுங்களே கதை கதையா சொல்லுதுங்க.....


                   @@


ஆபிஸ் போற அன்னிக்கெல்லாம் 9

மணி வரைக்கும் தூக்கம் வரும்

சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல

வராது!  விதி!!


 ❣❣❣❣❣❣❣❣❣

Source: Whatsapp Forward

Comments

Post a Comment

Popular posts from this blog