இன்று 23/1/2021 சனிக்கிழமை க்ருத்திகா நட்சத்திரம் சுக்லபட்ச தசமி திதி சார்வாரி வருடம் தைமாதம் 9ம் நாள்


பொதுவாக சமீபமாக அதுவும் ஒரு பதினைந்து இருபது வருடமாக சனிக்கிழமை ஆனால் அதிகமாக பலர் தங்கள் ஊரில் உள்ள சனிபகவான் சன்னதி உள்ள கோயிலுக்கு செல்கின்றனர்


அதேபோல் ஶ்ரீவைணவர்கள் குறிப்பாக ஹனுமனை சிறப்பாக வழிபடுவர் காரணம் ஹனுமனை வணங்கினால் சனிபகவான் மட்டுமல்ல நவகிரஹங்களும் இந்திராதி தேவர்களும் நம்மை நம் நிழலை கூட நெருங்க மாட்டார்கள் என்ற கூற்றுபடியே


பொதுவாக ஶ்ரீவைணவர்கள் மட்டுமல்ல இந்துகள் பலரும் ஹனுமனை சேவிக்கும் போது ஒரு எளிமையான ஸ்லோகம் சொல்லி வணங்குவர்


அதாவது


மநோஜவம் மாருத துல்ய வேகம்

ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் வாதாத்மஜம் வாநர யூத முக்யம் ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி என


இதை சிலர் ஶ்ரீ ராமதூதம் மனாஸா ஸ்மராமி எனவும் கூறுவர்


இந்த ஸ்லோகம் உண்மையிலேயே நல்ல அர்த்தம் உள்ள ஸ்லோகம்


அந்த அர்த்தத்தை கொஞ்சம் அடியேனுக்கு தெரிந்தவரையில் இந்த பதிவில் பார்ப்போமா


ஹனுமன் மனசஞ்சலத்துக்கே பேர்போன குரங்கு (கபி) இனத்தில் பிறந்தவர் அதனால் தான் ஒருவேலையில் மனம் ஒன்றாதவனை இன்றும் கூட குரங்கு புத்திகாரன் என்பர் 


அப்படிபட்ட குரங்கு அதாவது வானரமாக பிறந்தாலும் மனதை ஒருமுக படுத்தியவர் ஹனுமன்


அவருக்கான இந்த ஸ்லோகத்தின் கடைசிவரிக்கு முந்தய வரியில் இவரை பற்றி சொல்லும் போது 


ஹனுமன் ஸதா ஸ்ர்வகாலமும் ஓரிடத்தில் நில்லாமல் சஞ்சரிக்கும் வாயுவுக்குப் புத்ரர்

அதாவது வாயுகுமாரர் என்கிறது


வடமொழியில் வாதாத்மஜர் என்பர் அதாவது வாத என்றால் வாயு -ஆத்மஜன் என்றால் புத்ரன் 


வாத ஆத்மஜன் என்றால் வாயு புத்ரன்


வாதாத்மஜம் வாநர யூத முக்யம்


அடுத்ததாக யூதம் என்றால் கூட்டம் அல்லது ஸேனை (படை) வாயுபுத்ரனான ஹனுமன் வாநரபடையில் மிகமிக முக்யமானவர்  அதாவது வாநர யூத முக்யர்


அதோடு மட்டுமல்ல அவர் செய்யும் செயலில் வாயுவேகம் மனோவேகம் என்று  இரண்டு வேகமும் படைத்தவர் 


அதாவது மனஸால் இந்த்ரியங்களால் துளியும்  சலனபடாதவர் 


அதே நேரம் சுக்ரீவனுக்கோ ஶ்ரீராமருக்கோ தன் சரீரத்தாலே செய்கிற கார்யத்தில் வாயுவேக மனோவேகம் கொண்டவராக (வேகத்தை அளவிட முடியாத வகையில்) இருக்கிறார் 


இதையே 


மநோஜவம் மாருததுல்ய வேகம் என்கிறது இந்த ஸ்லோகம்


மநோ ஜவம் மனஸைப் போன்ற வேகம் கொண்டவர் இங்கே வட மொழியில் ஜவம் என்றால் வேகம்


மாருத துல்ய வேகம்


காற்றுக்கு ஸமமான வேகமுடையவர் மாருதம் என்றால் வடமொழியில் காற்று 


இன்னும் சொல்லபோனால் மந்த மாருதம் அதாவது மாருதத்தின் புத்ரர் என்பதால்தான் அவருக்கு மாருதி என்று பெயராயிற்று


ஹனுமன் ஓயாமல் இங்கும் அங்கும் அலைபாயும் மனஸைப் போல மநோஜவர் அதேபோல் ஓயாமல் அலைபாயும்  வாயுவை போல மாருததுல்ய வேகர்


மேலே நாம் சொன்னபடி அவர் வாயுவின் பிள்ளையான வாதாத்மஜர் 


மனசஞ்சல ஸ்வபாவத்துக்கே பேர் போன வாநரசேனையின் முக்யஸ்தராக இருப்பவர் வாநரயூத முக்யர்


இதெல்லாவற்றையும் விட ஆச்சரியமான குணம்  


இவரை ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்

என்று நாம் ஸ்தோத்ரிக்கும் வண்ணம் இருக்கிறார்


அது என்ன ஜிதேந்த்ரியம்

அதாவது புலன்களை வென்றவர் 


வடமொழியில் ஜிதேந்த்ரியர் ஜித இந்த்ரியர் அதாவது தன்னால் ஜயிக்கப்பட்ட இந்த்ரியத்தை உடையவர்


முன்னமே சொன்னபடி நம் மனஸ்தான் நாம் செய்யும் நல்ல கெட்ட என அத்தனை இந்த்ரிய சம்பந்தபட்ட கார்யத்துக்கு எல்லாம் மூலம்


அப்படிபட்ட மனதினால் தன் இந்திரியங்களை ஜயிப்பவர்தான் ஜிதேந்த்ரியர்


அதாவது குரங்குகுணமான மஹா சஞ்சலம் வாய்ந்த தன் மனஸை அதை ஆட்டுவிக்கும் புத்தியை ஜயித்த ஜிதேந்த்ரியர் 


எனவே தான் புத்திமான்களுக்கு மேலானவர் அதாவது புத்திமதாம் வரிஷ்டராக இந்த ஸ்லோகம் கூறுகிறது


இன்னும் சொல்ல போனால் மனதில் துளிகூட வேறு சிந்தனையே இல்லாமல் மனஸை ஶ்ரீராம கைங்கர்யத்திலேயே (நல்ல செயலில்)  நிலைநிறுத்தி வைத்தவர் 


ஜிதேந்த்ரியாக மனோ நிக்ரஹம் செய்துள்ள ஆஞ்சநேய ஸ்வாமி இங்கே புத்தியையும் ஒருநிலையில் கட்டுபடுத்தி தான் ஒரு புத்திமதாம் வரிஷ்டராகிறார்


நம்மை ஒருவர் புத்திமான் என்று சொன்னால் நாம் எவ்வளவு சந்தோஷம் அடைவோம் அந்த சொல் எவ்வளவு உசத்தியானது


அதையும் விட உசத்தி புத்திமதாம் வர என்பது அதாவது புத்திமான்களில் சிறந்தவர் என்று அர்த்தம்


அதையும்விட உசத்தியாக சொல்லலாம் என்னும் போது புத்தி மதாம் வரீய என்று சொல்லலாம்


அதாவது புத்திசாலிகள் நிறைந்த சபையில் இருக்கும் சிறப்பு பொருந்தியவர்களை  மற்றவர்களோடு ஒப்பிட்டு ஓ இவர் மற்றவர்களை விட இன்னும் உயர்வு பொருந்தியவராக இருக்கிறார் என்றால் அவரை புத்தி மதாம் வரீய என்பர்


ஆஞ்சநேயரை அப்படியாக சொன்னால் கூட போதாது அதையும் விட மிகஉசத்தியாக 


அதாவது அவருக்கு மேல் புத்திசாலிகளில் உசத்தியில்லை என்னும் படியாக (ச்லோகத்தில்) புத்திமாதம் வரிஷ்ட என்று 


அதாவது ஹனுமானை உலகில் உள்ள புத்திமான்கள் அத்தனை நபர்களையும் விட உச்சபட்சத்தில் வைக்க எண்ணி வரிஷ்ட என்கிறது ஸ்லோகம்


அதாவது அவரை விட புத்தியில் மேலானவரும் இல்லை அவருக்கு ஸமமானவரும் இல்லை என்னும்படியாக


ஹனுமனுக்கு இந்த இந்த்ரிய ஜயம் உயர்ந்த புத்தி என எல்லாவற்றையும் விட பெரிய பெருமை ஒன்று உண்டு என்றால் அது அவர் தன்னை இன்றும் ஶ்ரீராமதாஸனாக சேவகனாக வைத்து இருப்பதே 


அதாவது பகவான் ஶ்ரீராமனுக்கு இவரைப் போல இன்றுவரை சேவகம் செய்தவர் யாரும் இல்லை என்று மற்றவர்களும் ஶ்ரீராம சகோதரர்களும் ஜானகி தேவியும் கூறும்படியாக அவர் அக்ரஸ்தானம் (முதலிடம்) பெற்றிருக்கிறாரே அதுதான சிறப்பு


ஹனுமன் புத்திமான்களில் மட்டுமல்ல பகவத் பக்திமான்களிலும் வரிஷ்டராயிருக்கிறார்


இவர் ஶ்ரீராமதூதர் 


அதாவது ஹனுமன் தன் சரீர சக்தியோடு தன் புத்தியையும் கொண்டு செய்ய வேண்டிய பணியாக ஶ்ரீராமனின் தூதுவனாக தாயார் சீதாதேவியை காண போனதோடு மட்டுமல்ல அந்த தூது பணியை ஶ்ரீராமனே பாராட்டும் வகையில் ரொம்பவும் சிறப்பாகச் செய்து முடித்தார்


ஸாக்ஷாத் அந்த பாற்கடல் நாயக நாயகிகளான இந்த மனித அவதார நாயகி நாயகர்களான ஶ்ரீஸீதா ஶ்ரீராமர் ஆகியோரிடையே  ஏற்பட்டதான சிறு பிரிவு துக்கத்தை தூதனாக சென்று கண்டு போக்கிவர் 


அதுபோல ஶ்ரீராம தூதனாக சென்று பரதன் உயிரையும்  காப்பாற்றியவர் 


அப்படிபட்ட ஸ்ரீ ராமதூதனான ஹனுமனை சிரஸா நமாமி


அதாவது நம் தலை அவர் பாதத்தில் படும்படியாக விழுந்து நமஸ்காரம் பண்ணவேண்டும் என்கிறது ஸ்லோகம்


அல்லது அவரை மனத்தினால் எப்போதும் ஸ்மரணம் பண்ண வேண்டும் என்கிறது


பொதுவாக ராம நாமத்தை எப்போதும் உச்சரிப்பது/சொல்வது ரொம்ப ரொம்ப ரொம்ப சிறப்பு ஆனால் அந்த ராம கைங்கர்யத்தை தவிர அவர் நாம உச்சரிப்பை தவிர ஏதும் அறியாத ஹனுமனை சேவிப்பதும் அவன் நாமாவை எப்போதும் ஸ்மரணம் செய்வதும் ஶ்ரீராமநாம ஸ்மரனையை விட மிக உயர்ந்தது என்றால் அந்த கூற்று மிகையில்லை என்பதே உண்மை


எனவே இன்றய சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா நாளும் எப்போதும் சொல்லுவோம் (இந்த ஸ்லோகத்தை)அவன் நாமங்களே


ஜெய் ஶ்ரீராம்! ஜெய் ஶ்ரீமாருதி!

Source: whatsapp forward

Comments

Popular posts from this blog